தமிழகத்தில் கட்சி நடத்தும் செலவை மிச்சம் பிடித்த கமல்ஹாசன், சரத்குமார்.. லோக்சபா தேர்தல் வினோதங்கள்
சென்னை: கட்சி நடத்தும் செலவை நடிகர்கள் கமல்ஹாசன், சரத்குமார் ஆகியோர் மிச்சம் பிடித்துள்ளார்கள்.. லோக்சபா தேர்தலில் போட்டியிடாமலேயே ராஜ்யசபா எம்பியாக போகிறார் கமல்ஹாசன்.. அதேபோல் சரத்குமார் கட்சியை கலைத்து பாஜகவில் இணைந்துள்ளதால் அங்கு முக்கிய பொறுப்பு வாங்கி ஜம்முன்னு இருக்க போகிறார்..
தேர்தல்கள் வந்தாலே பல வினோதங்கள் அரங்கேறுவது இயல்பானதாக இருக்கிறது. மக்களுக்கு முக்கிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படும்... இலவச பரிசு பொருட்கள் வீடு வீடாக வாரி வழங்கப்படும்... ஓட்டுக்கு நோட்டுகள் தாராளமாக வழங்கப்படும். சிறிய அளவில் வாக்கு வங்கி வைத்துள்ள கட்சிகள் மற்றும் இயக்கங்கள் கொண்டாட்டத்ததில் மிதக்கும்.. பெரிய கட்சிகள் ஆட்சியை பிடிக்கவும், கணிசமான தொகுதிகளையும் கைப்பற்றவும் எந்த எல்லைக்கும் நம் நாட்டில் செல்கின்றன. தேர்தல் ஜனநாயகத்தில் இவை எல்லாம் ஒரு அங்கமாக மாறிவிட்டன.

அந்த வகையில் லோக்சபா தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் பெரிய கட்சிகள் எல்லாமே, ஓரளவு வாக்கு வங்கி வைத்துள்ள கட்சிகளை தங்கள் பக்கம் இழுத்து கூட்டணி அமைக்க முனைப்பு காட்டி வருகின்றன. திமுக கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, திமுக விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி போன்ற கட்சிகள் உள்ளன.
பாஜக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தமிழ் மாநில காங்கிரஸ், ஓ பன்னீர்செல்வம் அணி, புதிய நீதி கட்சி , இந்திய ஜனநாயக கட்சி மற்றும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் போன்றவை இணைந்துள்ளன. அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம், எஸ்டிபிஐ போன்ற கட்சிகள் இணைந்துள்ளன. பாமக, தேமுதிக போன்றவை அதிமுக கூட்டணியில் இணையுமா அல்லது பாஜக உடன் இணையுமா என்பது உறுதியாக தெரியவில்லை.. கூட்டணி நிலவரங்கள் இப்படியாக உள்ளது. இந்த தேர்தலில் வித்தியாசமான இரண்டு வினோத நிகழ்வுகள் நடந்துள்ளது.
பொதுவாக பெரிய கட்சிகளுடன் இணைந்து சிறிய கட்சிகள் கூட்டணி அமைப்பது வழக்கம். அதேநேரம் அபூர்வமாக சில சிறிய கட்சிகள், தங்கள் கட்சியை கலைத்து பெரிய கட்சியில் ஐக்கியமாவார்கள்.. அந்த வகையில் இந்த முறை சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், தனது கட்சியை கலைத்து பாஜவில் இணைத்துள்ளார். இதன் மூலம் கட்சி நடத்த செலவு செய்ய வேண்டிய அவசியம் இனி சரத்குமாருக்கு ஏற்படாது.. பாஜகவில் இணைந்துள்ளதால் முக்கிய பொறுப்பு கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. மேலும் லோக்சபா தேர்தலில் தென்மாவட்டத்தில் ஏதேனும் ஒரு தொகுதியில பாஜக வேட்பாளராக சரத்குமார் போட்டியிடும் வாய்ப்பு உள்ளது.
நடிகர் சரத்குமார் இப்படி எல்லாம், கமல்ஹாசன் நிலைமை வித்தியாசமானது. அவரும் இந்த தேர்தலில் கட்சிக்காக எந்த செலவும் செய்ய வேண்டியது இல்லை.. லோக்சபா தேர்தலில் ஒரு சீட் கூட வாங்காமல் மக்கள் நீதி மய்யம் கட்சியை திமுக கூட்டணியில் இணைத்துள்ளார் கமல் ஹாசன்..
அதேநேரம் கமலுக்கு ராஜ்யசபா சீட் வழங்க திமுக முடிவு எடுத்துள்ளதால் அவர் கைகாசு எதுவும் செலவு செய்யாமல் எம்பியாகிவிட முடியும்.. கமல்ஹாசன் தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு பிரச்சாரம் செய்யப்போவதாக அறிவித்துள்ள நிலையில், அதையும் அந்த கட்சிகளே பார்க்கும் என்பதால் கமல்ஹாசனுக்கு இந்த முறை எந்த செலவும் இல்லை.. சரத்குமார் இனி கை காசு போட்டு கட்சி நடத்த வேண்டாம் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தலில் நடந்த இரண்டு வினோதங்கள் தற்போது பேசுபொருளாக உள்ளது.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications