சமக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு : 37 தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளர்களை அறிவித்த சரத்குமார்
மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சிக்கு 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் 37 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
சென்னை: மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சிக்கு 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அந்த 40 தொகுதிகளை அக்கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார் இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் வெளியிட்டார். அதில் தற்போது 3 தொகுதிகளை திருப்பி கொடுத்து விட்ட சரத்குமார் 37 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை வெளியிட்டுள்ளார்.
Recommended Video
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 20 நாட்களே உள்ளன. கடந்த 12ஆம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. அரசியல் கட்சி தலைவர்கள் அவரவர் போட்டியிடும் தொகுதிகளில் வேட்புமனுவை தாக்கல் செய்துவருகின்றனர்.

திமுக, அதிமுகவுக்கு எதிராக மூன்றாவது அணியாக உருவாகி இருக்கும் மக்கள் நீதி மய்யமும் கூட்டணியில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சிக்கு 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தலைமையிலான கூட்டணியில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி தென்காசி, ஆலங்குளம், நெல்லை, அம்பாசமுத்திரம் உள்ளிட்ட 40 தொகுதிகளில் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொகுதிகள் பட்டியலை வெளியிட்டார் சரத்குமார்.
1.துறைமுகம் 2.உத்திரமேரூர் 3. அரக்கோணம் (தனி) 4.சோளிங்கர் 5.ஆற்காடு 6.வாணியம்பாடி 7.ஆம்பூர் 8.ஜோலார்பேட்டை 9.போளூர் 10.உளுந்தூர்பேட்டை 11.ரிஷிவந்தியம் 12. ஆத்தூர் (தனி) 13. சங்ககிரி 14. திருச்செங்கோடு 15. அந்தியூர் 16. கிருஷ்ணராயபுரம் (தனி) 17. லால்குடி 18. கடலூர் 19.சிதம்பரம் 20.சீர்காழி (தனி). 21.திருத்துறைப்பூண்டி (தனி) 22.சிவகங்கை 23.மதுரை தெற்கு 24.பெரியகுளம் (தனி) 25. ராஜபாளையம் 26. விருதுநகர் 27.விளாத்திகுளம் 28.தூத்துக்குடி 29.திருச்செந்தூர் 30. ஒட்டப்பிடாரம் (தனி) 31. வாசுதேவநல்லூர் (தனி) 32.தென்காசி 33.ஆலங்குளம் 34. நெல்லை 35. அம்பாசமுத்திரம் 36,நாங்குநேரி 37.ராதாபுரம் 38.பத்மநாபபுரம் 39.விளவங்கோடு 40.கிள்ளியூர் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
இந்த நிலையில் இன்று அக்கட்சியின் வேட்பாளர் பட்டியலை சரத்குமார் அறிவித்துள்ளார்.
- துாத்துக்குடி -சுந்தர்
- மதுரை தெற்கு-ஈஸ்வரன்
- ராஜபாளையம்-விவேகானந்தன்
- சிவகங்கை- நேசம் ஜோசப்
- வாணியம்பாடி- ஞானதாஸ்
- விளாத்திகுளம்- வில்சன்
- முதுகுளத்துார்- நவபன்னீர் செல்வம்
- சங்ககிரி- செங்கோடன்
- தென்காசி- தங்கராஜ்
- பத்மநாபபுரம்- ஜெயராஜ்
- அம்பாசமுத்திரம்- செங்குளம் கணேசன்
- வாசுதேவநல்லுார்- சின்னசாமி
- அந்தியூர்- குருநாதன்
- ஆத்துார்(தனி) -சிவா
- விருதுநகர்- மணிமாறன்
- திருநெல்வேலி- அழகேசன்
- திருச்செந்துார்- ஜெயந்திகுமார்
- கிருஷ்ணராயபுரம்-சரவணன்
- பெரியகுளம்- அரசுப்பாண்டி
- கிள்ளியூர்- ஆண்டனி
- உத்திரமேரூர்- சூசையப்பர்
- விளவங்கோடு- அருள்மணி
- கடலுார்- ஆனந்தராஜ்
- ஆலங்குளம்- செல்வக்குமார்
- திருச்செங்கோடு- குட்டி(எ) ஜனகராஜ்
- ராதாபுரம்-உத்திரலிங்கம்
- நாங்குநேரி- சார்லஸ் ராஜா
- ஆம்பூர்-ராஜா
- ஜோலார்பேட்டை-கருணாநிதி
- போளூர்-கலாவதி
- உளுந்துார்பேட்டை-சின்னையன்
- ரிஷிவந்தியம்- சண்முகசுந்தரம்
- லால்குடி-முரளிகிருஷ்ணன்
- சிதம்பரம்-தேவசகாயம்
- சீர்காழி(தனி)- பிரபு
- திருத்துறைப்பூண்டி(தனி)- பாரிவேந்தன்
ஆகியோர் போட்டியிட உள்ளதாக சரத்குமார் அறிவித்துள்ளார். ராதிகாவும் சரத்குமாரும் வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை.












Click it and Unblock the Notifications