Sarathkumar: பொறுமையாக காத்துட்டு இருக்கேன்..மீறினால் அண்ணாமலை மாதிரி புதிய இயக்கமா? சரத்குமார் கொடுத்த பதில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜகவில் இணைந்து 2.5 வருடம் ஆகிவிட்டது. எனக்கு பொறுப்பு இருக்கிறதோ? இல்லையோ? என்னுடன் பயணிப்பவர்களுக்கு பொறுப்பு வாங்கி கொடுத்துள்ளேன். பொறுத்தார் பூமி ஆள்வார் என்று சொல்கிறோம்.. எந்த பூமியை ஆள போறேன்னு எனக்கே தெரியாது. எது எப்போது நடக்கும் என்று தெரியாது என சரத்குமார் கூறினார். மேலும் அண்ணாமலை மாதிரி புதிய இயக்கம் தொடங்கப் போகிறீர்களா? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கும் சரத்குமார் பதில் அளித்தார்.

பாஜக நிர்வாகியும் நடிகருமான சரத்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சமத்துவ மக்கள் கட்சியை மறுபடியும் ஆரம்பிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. என்னை பொறுத்தவரை பாஜகவில் இணைந்து 2.5 வருடம் ஆகிவிட்டது. எனக்கு பொறுப்பு இருக்கிறதோ? இல்லையோ?.. என்னுடன் பயணிப்பவர்களுக்கு பொறுப்பு வாங்கி கொடுத்துள்ளேன்.

Sarathkumar BJP Annamalai


அண்ணாமலை மாதிரி புதிய இயக்கமா?

அதனால், பொறுத்தார் பூமி ஆள்வார் என்று சொல்கிறோம்.. எந்த பூமியை ஆள போறேன்னு எனக்கே தெரியாது. எது எப்போது நடக்கும் என்று தெரியாது. நான் பொறுமையாக காத்துக்கொண்டு இருக்கிறேன். என்னுடைய செயல், அறிவு, ஆற்றல் திறமை எல்லாமே அவர்களுக்கு தெரியும். அதை பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருந்தாலும் அது காலதாமதம் ஆகிறது.

எல்லோருக்கும் தெரிகிறது. அது விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கிறேன். நடக்காத போது அது பற்றி கேள்வி கேட்கலாம்.. என்றார். அப்போது அண்ணாமலை மாதிரி புதிய இயக்கம் தொடங்க வாய்ப்பு இருக்கிறதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த சரத்குமார், "அண்ணாமலை இயக்கம் ஆரம்பித்தது எனக்கு தெரியாது. பொதுநல சேவை எல்லாருமே செய்து கொண்டுதான் இருக்கிறோம். கடற்கரையோரம் குப்பையை அள்ள வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன். தென்காசி தொகுதியில் எனது சொந்த பணத்தில் பூங்கா ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறேன்.

எப்போது நடக்கும் என தெரியாது?

என்னை பொறுத்தவரை மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிறவன். இன்னும் வாய்ப்பு வராமல் இருக்கலாம். வாய்ப்பு எதிர்பார்க்கிறேன். வாய்ப்பு வரலாம். எது எப்போ நடக்கும் என்று இந்த உலகத்தில் யாருக்கும் தெரியாது. தவெக அரசின் பட்ஜெட் பற்றி கேட்கிறீர்கள்.. நான் அதை பார்க்கவே இல்லை. அதை பற்றி பேச வேண்டும் என்று நினைத்தால், ஒரு பொறுப்பு கொடுத்த பிறகு, தீவிரமாக பேச வேண்டும் என நினைத்தேன்.

பேப்பர் பார்த்த போது எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்தது. அந்த எதிர்ப்பார்ப்புகள் இல்லை என்று மட்டும் என்னால் சொல்ல முடியும். 2021-ல் எடப்பாடி பழனிசாமி உங்களை போன்ற கட்சிகளை அரவணைக்காமல் இருந்ததுதான் அதிமுக தோல்விக்கு காரணம் என்று நத்தம் விஸ்வநாதன் போன்றவர்கள் கூறியுள்ளதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த சரத்குமார் கூறியதாவது:-

புரட்சி தலைவருக்கு தெரியும்

1996-ல் ரஜினி, நான், மூப்பனார் எல்லாரும் ஒரு மாற்றம் வர வேண்டும் என நினைத்தோம். கடைசியில் திமுகவுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் சப்போர்ட் பண்ணும் என்று சொன்னவுடன் நான் 40 நாட்கள் பயணம் செய்தேன். நான் நினைத்து இருந்தால் அப்போது கட்சி ஆரம்பித்து இருக்க வேண்டும். அப்போது ஆரம்பித்து இருந்தால் 30, 40 சீட் கேட்டு, ஒரு இடம் ஜெய்ச்சிருக்கலாம்.

அப்போது எனக்கு அந்த எண்ணமே கிடையாது. என்னுடைய அறிவு, ஆற்றல் திறமை புரட்சி தலைவருக்கு தெரியும். 1996ல் எதிர்த்து பிரசாரம் செய்த எனக்கு நான் கட்சி துவங்கிய பிறகு இரண்டு இடம் கொடுத்து போய் நில்லுங்க.. என்று சொன்னார்கள். எந்த அளவுக்கு என்னுடைய மதிப்பும் அறிவும் ஆற்றலும் போற்றப்பட்டு இருக்கிறது என்பதை உணர முடியும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+