நள்ளிரவு 2 மணிக்கு ராதிகாவை எழுப்பிய சரத்குமார்.. அப்படியே அண்ணாமலைக்கும் போன்.. ஒரு திகில் அனுபவம்
சென்னை: சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைப்பதற்கு முன்பு என் மனைவியிடம் கேட்டுவிட்டுதான் செய்தேன் என நடிகரும் பாஜகவில் தன்னை ஐக்கியமாக்கிக் கொண்டவருமான சரத்குமார் இன்று தெரிவித்துள்ளார்.
2007 ஆம் ஆண்டு தொடங்கிய சமத்துவ மக்கள் கட்சியை இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் கலைத்துவிட்டு பாஜகவில் தன்னையும் அதன் நிர்வாகிகளையும் சரத்குமார் இன்று இணைத்துக் கொண்டார்.

அப்போது சரத்குமார் பேசுகையில் பாஜகவில் இணைந்தது சமத்துவ மக்கள் கட்சியின் முடிவு அல்ல. மாறாக மக்கள் பணிக்கான தொடக்கம். நாங்கள் மக்கள் பணியில் தொடர்கிறோம். இது நாளைய எழுச்சிக்காக எடுக்கப்பட்ட முடிவு. நாட்டின் வளர்ச்சிக்காகவும் வருங்கால இளைஞர்களின் நலனுக்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி காமராஜரை போல் ஆட்சி நடத்துகிறார் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார். மேலும் அவர் கூறுகையில் நள்ளிரவு 2 மணி இருக்கும். அந்த நேரத்தில் என் மனைவியை எழுப்பி, எனக்கு பாஜகவுடன் இணைய தோன்றுகிறது என கூறினேன். அதற்கு அவர், நீங்கள் எந்த ஒரு முடிவு எடுத்தாலும் நான் உங்களோடு உறுதுணையாக இருப்பேன் என கூறினார். பிறகு அண்ணாமலைக்கு போனை போட்டு தகவல் சொன்னேன். இவ்வாறு சரத்குமார் சீரியஸ் தொனியில் தெரிவித்தார்.
காலம் எவ்வளவு வேகமாக சுழலுது பார்த்தீங்களா? அன்று கரு நாகராஜன்.. இன்று சரத்குமார்!
இதைத் தொடர்ந்து பேசிய அண்ணாமலை, சரத்குமார் தேசியத்திற்கு தேவைப்படுகிறார். அவரை சிறிய வட்டத்திற்குள் அடைத்து வைக்கக் கூடாது என்று கூறினார். சரத்குமார் தான் சினிமாவில் உச்சத்தில் இருந்த போதே திமுகவில் இணைந்து அரசியல் பயணத்தை தொடங்கினார். பிறகு அதிமுகவில் இணைந்தார்.
இதையடுத்து 2007ஆம் ஆண்டு சமத்துவ மக்கள் கட்சியை சரத்குமார் தொடங்கினார். இந்த கட்சி 2011 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் இரட்டை இலைச் சின்னத்தில் தென்காசி, நாங்குநேரி ஆகிய இரு சட்டசபைத் தொகுதிகளில் வெற்றி பெற்றது. தென்காசியில் சரத்குமாரும், நாங்குநேரியில் எர்ணாவூர் நாராயணனும் வென்றனர்.
அதன் பின்னர் உட்கட்சிப் பூசலால் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டது. இந்த நிலையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சரத்குமார் பாஜக சார்பில் களம் காண்பார் என்றே தெரிகிறது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications