யாரு சாமி நீங்க.. திட்டு வாங்கியே வைரலான சரத்குமார் ஆதரவாளர்.. மீண்டும் மீண்டும் சம்பவம்
சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. பரபரப்பான சூழ்நிலையில் பாஜகவில் இணைந்த சரத்குமார், பதவி வழங்காத அதிருப்தியில் தன் ஆதரவாளர்களுடன் நேற்று முக்கிய ஆலோசனை வழங்கினார். இந்த பிரச்சனை பரபரப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கு, அந்தக் கூட்டத்தில் சரத்குமாரிடம் திட்டு வாங்கிய அவரின் ஆதரவாளர் வைரலாகிவிட்டார்.
நடிகர் சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சி என்கிற பெயரில் கட்சி நடத்தி வந்தார். அதிமுக, திமுகவுடன் கூட்டணி வைத்து வந்தார். கடந்த 2024 மார்ச் மாதம் திடீரென சமகவை பாஜகவுடன் இணைத்தார். நள்ளிரவில் தோன்றிய திடீர் எண்ணத்தால் கட்சியை கலைத்துவிட்டு பாஜகவில் இணைந்ததாக சரத்குமார் கூறியிருந்தார். பாஜகவில் பதவி வழங்காததால் சரத் அப்செட்டில் உள்ளார்.

ப்ரஸ் மீட்டில் திட்டு
சென்னையில் தன் ஆதரவாளர்களை அழைத்து ஆலோசனை மேற்கொண்டார். அங்கு சரத்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ஒரு செய்தியாளர், "தனிக் கட்சியாகவே இருந்திருக்கலாமே என ஃபீல் செய்கிறீர்களா என கேள்வி எழுப்பினார். அதற்கு சரத்குமார், எல்லாரும் ஃபீல் பண்ணறாங்க" என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது, அருகில் இருந்த ஆதரவாளர் ஒருவர், "ஆமா நாங்க ஃபீல் பண்ணறோம்" என்று பதில் சொன்னார்.
இதற்கு கடுப்பான சரத்குமார், "உன்னை கேட்டாரா.. நீ இங்க வந்து பதில் சொல்றியா" என கேட்டார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. சரத்குமார், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் ஒன்றாக பேசிக் கொண்டிருந்தனர். அப்போது சரத்குமாரிடம் திட்டு வாங்கிய நிர்வாகியும் உடனிருந்தார். அவரை சரத்குமார் நயினார் நாகேந்திரனுக்கு அறிமுகப்படுத்தி கொண்டிருந்தார்.
பயங்கர பேமஸ்
அவர் நயினார் நாகேந்திரனிடம் கைக்குலுக்கினார் அங்கிருந்த மற்றொரு ஒரு பாஜக நிர்வாகி, "உங்களிடம் திட்டு வாங்க இவரு பயங்கர பேமஸ் ஆகிவிட்டார்" என்று சொன்னார். அதற்கு சரத்குமார் சிரித்துக் கொண்டே, "ஆமா.. நான் திட்டியதற்காக வைரலாகிவிட்டார்" என்று சொல்ல அங்கிருந்த திட்டு வாங்கிய நிர்வாகி, நயினார் உள்பட அனைவரும் சிரித்தனர்.
தமிழகம் வந்துள்ள பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயலை வரவேற்க சரத்குமார் சென்றிருந்தார். அவருடன் திட்டு வாங்கிய நிர்வாகியும் சென்றார். சரத்குமார் காரில் செல்லும்போது செய்தியாளர்கள் வீடியோ எடுத்து கொண்டிருந்தனர். அப்போது திட்டி வாங்கிய நிர்வாகி காருக்கு வெளியே சரத்குமாரை மறைத்தபடி நின்று கொண்டிருந்தார்.
திட்டு வாங்கியே
அதற்கு சரத்குமார், "நவுரு. பாவம் அங்க பாரு.. இன்னிக்கும் திட்டு வாங்கி வைரலாக போகற" என்று சிரித்தபடியே கூறினார். சரத் சொல்லியதை கேட்டு அங்கிருந்த அனைவரும் சிரித்தனர். இந்த வீடியோவும் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள், "யார் சாமி நீங்க. திட்டு வாங்கியே வைரலாகிட்டிங்க" என்று அவரை கலாய்த்து வருகிறார்கள்.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications