முன்னோர்கள் முட்டாள்கள் இல்ல.. வாட்ஸ் அப் ஃபார்வேர்டு.. சர்தார் 2 கதை சரியா?

Subscribe to Oneindia Tamil

சென்னை : ஒரு வாட்ஸ்அப் ஃபார்வேர்டு கிடைச்சா போதும், முன்னோர்கள் முட்டாள்கள் இல்ல அப்படிங்கிற குரூப்ல இருந்து எதையாச்சும் இவங்க படிச்சிட்டா போதும், உடனே அதை ஒரு கதையா எழுதி, படமா எடுத்துடுவாங்க. நேற்று ரிலிஸான சர்தார் -2 திரைப்படத்துல, கோழிகளுக்கு ஆன்டிபயாடிக் கொடுக்குறதுனால மனுஷன் உடம்பு ஃபுல்லா ஆன்ட்டிபயாட்டிக்குக்கு எதிராக வேலை செஞ்சு, சீக்கிரத்துல மனுஷன் அழிஞ்சிடுவான்னு ஒரு பொய்யான கருத்தை முன்வைக்கிறாங்க என சர்தார் 2 படம் குறித்து நெட்டிசன் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

அந்த நெட்டிசன் மேலும் தெரிவித்த கருத்தினை அப்படியே அவரது மொழியில் பார்ப்போம். "ஒரு கோழிக்கு என்னதான் ஆன்டிபயாட்டிக் கொடுத்திருந்தாலும், 100 டிகிரியில சமைக்கும்போது அந்த ஆன்டிபயாட்டிக் எல்லாம் அழிஞ்சிடும்னு அறிவியல் சொல்லுது.

Sardar 2 Shouldn t broiler chicken be eaten Strong opposition to PS Mithran s story

அதே மாதிரி கோழிக்கு Growth hormone கொடுக்குறாங்க அப்படின்னும் ஒரு Pseudoscience சொல்றாங்க. ஒரு குரோத் ஹார்மோனோட இன்ஜெக்ஷனே மினிமம் 400 ரூபாய். அதை எல்லாம் கோழிகளுக்கு கொடுக்க முடியாதுன்னு எத்தனையோ அறிவியல் விளக்கங்கள், மருத்துவத்துறை விளக்கங்கள், டாக்டர்ஸோட கைடுலென்ஸ் இப்படின்னு ஏகப்பட்ட வீடியோக்கள் கொட்டி கிடக்கு. இது எதையுமே ஆழ்ந்து படிக்காம முழுசா தெரிஞ்சுக்காம இப்படி ஒரு கருத்தை மக்கள் மனசுல விதைச்சீங்கன்னா என்னத்துக்கு ஆகுறது?

ஒரு திரைப்படம் கோடிக்கணக்கான மக்களோட மனசுல ஒரு கருத்தை விதைக்கும். அது பல நூற்றாண்டுகளுக்கு அப்படியே நிலைச்சு நிக்கும். நாளைக்கு எங்கேயோ குக்கிராமத்துல கூட, "இந்தப் படத்துல சொன்னாங்க. அதுக்காக பிராய்லர் கோழிய குழந்தைகளுக்கு கொடுக்காம புரதச்சத்து குறைபாட்டை ஏற்படுத்தி தள்ளுறதுல உங்களுக்கு ஒரு பெரிய பங்கு இருக்கு மிஸ்டர் மித்ரன்.. உங்களோட டேட்டா தீனிக்கு மக்கள் சோதனை எலிகள் இல்ல..

இந்தியா ஏன் டயாபடிக் கேப்பிட்டல்'லா இருக்குன்னா, நம்ம ஆட்கள் ஒரு நாளைக்கு 10 கிராம் கூட ப்ரோட்டின் எடுக்கிறது இல்லைன்னு ஆய்வுகள் சொல்லுது. புரதச்சத்து குறைபாடுள்ள நாமதான் உலக அளவுல எல்லா நோய்கள்'லையும் முன்னணியில இருக்கோம்..

இந்த மாதிரி ஒரு பொய் பிரச்சாரத்தை நம்பித்தான் எங்க சித்தப்பு வருஷக்கணக்காக பிராய்லர் கோழியை சாப்பிடாம, பிராய்லர் முட்டையை சாப்பிடாம, மட்டன் சாப்பிட்டா கொலஸ்ட்ரால் ஏறும்னு வாரத்துல அஞ்சு நாள் சைவமா இருந்து, உடம்புக்கு சரியான நியூட்ரிஷியன் கிடைக்காம வெயிட் ஏறி ஏறி ஒரு நாள் கார்டியாக் அரெஸ்ட்'ல செத்துப் போனான்.

எளிமையா கிடைக்கிற இந்த புரதத்தை கூட எளிய மக்களை சாப்பிட விடாம தடுக்கிற உங்களை மாதிரி ஆட்கள் தான் உண்மையிலேயே இலுமினாட்டிஸ்..ஆனா இதுல இருக்குற முரண் என்ன தெரியுமா? இந்த படத்தோட ஒவ்வொரு நாள் ஷூட்டிங்'லையும் நீங்க நான்வெஜ்தான் சாப்பிட்டு இருப்பீங்க.. இதே பிராய்லர் கோழியோட சிக்கன் 65, பட்டர் சிக்கன் மசாலா'ன்னுதான் சாப்பிட்டு இருப்பீங்க.. ஏன் படம் ரிலீஸாகுற அன்னைக்கு கொடுத்த பார்ட்டியிலும் நான்வெஜ்'தான் பரிமாறி இருப்பீங்க.. எப்படிங்க மக்கள் மனசுல இந்த மாதிரி மூடநம்பிக்கைகளை உங்களால் விதைக்க முடியுது" இவ்வாறு கூறியிருக்கிறார்.இன்னும் சிலரும் கோழிக்கறி குறித்த இயக்குனர் மித்ரனின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+