வில்லிக்கு ஜெயலலிதா பெயர்.. சர்கார் பட விவகாரத்தில் நடந்தது என்ன? விஜய் பேனரை அதிமுக கிழித்ததா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் நடித்த சர்கார் படத்தின் பேனரை கிழித்ததால் தான் 2021ல் அதிமுக ஆட்சி அமைக்கவில்லை என்று சட்டசபையில் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் சாடியுள்ளார். இதற்கு அதிமுக தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் அதிமுக ஆட்சி காலத்தில் சர்கார் படம் ரிலீஸான போதும், பேனர் கிழிக்கப்பட்டது ஏன் என்பது தொடர்பாக முழுமையாக பார்க்கலாம்.

சட்டசபையில் நீர்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பேசுகையில், சர்கார் படத்தின் பேனரை கிழிக்காமல் இருந்திருந்தால், அதிமுக இந்த இடத்தில் இருந்திருப்பார்கள். பேனரை கிழித்ததால் அவர்கள் அங்கே இருக்கிறார்கள் என்றார். இது அதிமுக தொண்டர்கள் மட்டுமல்லாமல் தவெக தொண்டர்கள் மத்தியிலும் விவாதப் பொருளாக மாறியது.

Sarkar

2018ஆம் ஆண்டு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்து வெளியான திரைப்படம் சர்கார். இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி இருந்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் சர்கார் படம் உருவாக்கப்பட்டிருந்தது. இதனால் ஜெயலலிதா தொடர்புடைய காட்சிகளின் பாதிப்பின் இந்தப் படத்தில் அதிகமாகவே இடம்பெற்றிருந்தது.

குறிப்பாக ஜெயலலிதாவின் உண்மையான பெயரான கோமளவள்ளி எனும் பெயர் வில்லியான வரலட்சுமிக்கு சூட்டப்பட்டிருந்தது. அதேபோல் அதிமுக ஆட்சி காலத்தில் நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீ வைத்து கொண்ட இசக்கிமுத்துவின் கதை ஒரு காட்சியாக வரும். அந்த குழந்தையை விஜய் பார்ப்பது போல் ஒரு காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.

அந்த காட்சியில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி வகித்து வந்த பொதுப்பணித்துறை காரணம் என்று விஜய் பேசி இருந்தார். அதேபோல் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கொடுக்கப்பட்ட இலவச மிக்ஸி, கிரைண்டர் ஆகிய பொருட்களை மக்கள் தூக்கி எறிவது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். இடஒதுக்கீட்டுக்கு எதிரான சில கருத்துக்களும் இடம்பெற்றிருக்கும்.

இதற்கு அதிமுகவினர் கடுமையான கொந்தளிப்பை வெளிப்படுத்தினர். சென்னையில் உள்ள பல்வேறு திரையரங்குகளிலும் விஜய் பேனர் கிழிக்கப்பட்டது. காசி தியேட்டரில் அதிமுக தொண்டர் ஒருவர் தனியாளாக பேனரை கிழிக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் டிரெண்டாகியது. இதன்பின் அதிமுக அமைச்சர்களுடன் சர்கார் படத்தின் தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தின.

பின் அதிமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட காட்சிகள் மட்டும் நீக்க ஒப்புக்கொள்ளப்பட்டது. பொதுப்பணித்துறை என்று விஜய் சொல்லும் வசனமும் மியூட் செய்யப்பட்டது. மற்றபடி மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட பொருட்களை மக்கள் வீசி எறியும் காட்சிகள் எல்லாம் படத்திலேயே இருந்தன. பெரிதாக எந்த காட்சியும் நீக்கப்படவில்லை. புஸ்ஸி ஆனந்தின் பேச்சால், இந்த விவகாரம் மீண்டும் விவாதமாகி இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+