சர்க்காரிய கமிஷன் விசாரணையில் எம்ஜிஆர் என்ன சொன்னார் தெரியுமா? சட்டசபையில் எவ வேலு சொன்ன சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபையில் காவல்துறை மீதான மானியக் கோரிக்கைக்கு முதல்வர் விஜய் பதில் அளிக்கையில், என் மேஜையில் 3 துறை சார்ந்த கோப்புகள் உள்ளன. அதனை திறக்க வேண்டிய நேரத்தில் திறப்போம் என்று கூறினேன். இப்போதே திறங்கள் என்று எதிர்க்கட்சியினர் தெரிவித்தனர். 1970களில் திமுக ஆட்சியில் வீராணம் திட்ட குழாய் தயாரிக்க டெண்டர் வழங்கிய விவகாரம் குறித்து சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2001ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் அமைச்சார் பொன்னையன் இதே சர்க்காரியா கமிஷன் அறிக்கை குறித்து பேரவையில் பேசியுள்ளனர். அந்த அறிக்கை வந்து இப்போது பொன்விழா ஆண்டை எட்டியுள்ளது. பவள விழா கண்ட கட்சியின் பொன்விழா சாதனை தான் இந்த சர்க்காரியா கமிஷன் அறிக்கை. அதில் அப்போதைய முதல்வர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sarkaria Commission DMK EV Velu

நீங்கள் ஆதாரம் கேட்டால், சட்டசபை நூலகத்திலேயே சர்க்காரியா கமிஷன் புத்தகம் இருக்கிறது என்று தெரிவித்தார். 50 ஆண்டுகளுக்கும் மேல் சர்க்காரியா கமிஷன் அறிக்கை வெளியான பின்னரும் கூட, இதுவரை நீதிமன்றத்தில் எந்த வழக்கு தொடுக்கப்படவில்லை. இந்த நிலையில் முதல்வர் விஜய்யின் பேச்சு தொடர்பாக இன்று சட்டசபையில் முன்னாள் அமைச்சர் எவ வேலு பேசினார்.

அதில் எவ வேலு பேசுகையில், முதல்வர் விஜய் பேசும் போது 26 நிமிடங்கள் நாங்கள் அமைதியாகவே இருந்தோம். அமலாக்கத்துறை வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. அதில் அமலாக்கத்துறை ஆவணத்தை எடுத்து இங்கு படித்தார். அது விதிக்கு உட்பட்டது இல்லை. அதேபோல் மிசா என்பது அனைவருக்கும் தெரிந்தது. தமிழ்நாட்டில் 450க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றார்கள்.

மிசா கொடுக்கைக்கு ஆளாக்கப்பட்டு ஸ்டாலின் ஓராண்டு காலம் சிறையில் அடைக்கப்பட்டார். திக, கம்யூனிஸ்ட்டுகளும் கூட மிசா கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். சர்க்காரியா கமிஷன் பற்றி பேசப்பட்டது. அதுதொடர்பாக பலமுறை சட்டசபையில் பேசப்பட்டிருக்கிறது. முரசொலி மாறனின் பெயர் இங்கு பேசப்பட்டது. சர்க்காரியா கமிஷன் நிறைவாக என்ன சொல்லப்பட்டது என்றால், 28 குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டது.

அந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக எம்ஜிஆரிடம் விசாரணை செய்யப்பட்டது. அந்த விசாரணைக்கு எம்ஜிஆர் சென்ற போது, அவர் என்ன சொன்னார் என்றால், எனக்கு இதைப்பற்றி எதுவும் தெரியாது. வழக்கறிஞர் கண்ணன் கொடுத்ததை வைத்தே சொன்னேன் என்றார். அதேபோல் சர்க்காரியா கமிஷன் அறிக்கையில், 28 குற்றச்சாட்டுகள் எந்தவிதத்திலும் நிரூபிக்கப்படவில்லை. அதனால் வழக்கு தொடுக்க முடியாது என்றே முடிக்கப்பட்டது.

அந்த கமிஷனில் ஏதாவது ஆதாரம் இருந்தால் தான், எஃப்ஐஆர் பதிவு செய்து சார்ட்ஷீட் பதிவு செய்து வழக்குக்கு செல்ல முடியும். ஆனால் சர்க்காரியா கமிஷனில் வழக்கு தொடர முடியாது என்று முடித்துவிட்டதை ஏதோ தவறு நடந்ததை போல் பேசுகின்றனர். மாறன் குடும்பத்தின் நிறுவனத்தில் விஜய் நடித்திருக்கிறார். இதனால் இந்த 3 விஷயங்களையும் அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+