சார்வரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள் : கும்பம் ராசிக்கு வரவும் செலவும் சேர்ந்தே வரும்
சார்வரி தமிழ் புது வருடம் பிறக்கப் போகிறது. புதிய தமிழ் புத்தாண்டில் நமக்கு நல்லது நடக்குமா? வேலை கிடைக்குமா இருக்கிற வேலையை தக்க வைத்துக்கொள்ள முடியுமா? வருமானம் வருமா? என்ற எதிர்பார்ப்பு எல்லோருக்க
சென்னை: சார்வரி தமிழ் வருடம் பிறக்கும் போது திருக்கணிதப்பஞ்சாங்கப்படி மேஷத்தில் சூரியன், ரிஷபத்தில் சுக்கிரன், மிதுனத்தில் ராகு, மீனம் ராசியில் புதன், மகரத்தில் செவ்வாய்,குரு, சனி, தனுசு ராசியில் சந்திரன் கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த சார்வரி ஆண்டுக்கு தமிழில் வீறியெழல் என்று பெயர். சார்வரி தமிழ் புத்தாண்டில் சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்பம் ராசிக்காரர்களுக்கு பணவரவும் கூடவே செலவும் சேர்ந்தே வரும் ஆண்டாக இருக்கப் போகிறது. இது பொதுவான பலன்தான். ஜாதகத்தில் கிரகங்கள் சேர்க்கை, தசாபுத்தி நடப்பதை பொருத்து பலன்கள் மாறுபடலாம்.
ஆண்டு கிரகங்களான குரு, சனி, ராகு கேது பெயர்ச்சிகள் சாதமான நிலையில் உள்ளது. சனி பகவான் மகரம் ராசியில் ஆட்சி பெற்றிருக்கிறார். குருவும் அதிசாரமாக சென்றாலும் பின்னர் தனுசு ராசியில் ஆட்சி பெற்று அமர்கிறார். ஆவணியில் மிதுனம் ராசியில் இருந்து ராகு ரிஷபம் ராசிக்கும் கேது பகவான் தனுசு ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைகிறார். மார்கழி மாதத்தில் வாக்கிய பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி நடக்கிறது. இந்த கிரகங்களின் சஞ்சாரம் பார்வை பல ராசிக்காரர்களுக்கு சந்தோஷங்களை தரப்போகிறது.
சார்வரி வருடம் பிறக்கும் போது மூலம் நட்சத்திரம் 4ம் பாதத்தில் தனுசு ராசி, துலாம் லக்னத்திலும், நவாம்சத்தில் கடகம் ராசி, கும்ப லக்னத்திலும், புதன் ஓரை, கேது மகா தசை சனி புத்தியில் பிறக்கிறது. புது வருடம் தொடங்கும் போது கும்பம் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் குரு, சனி, செவ்வாய், லாப ஸ்தானத்தில் சந்திரன், கேது இரண்டாம் வீட்டில் புதன் மூன்றாம் வீட்டில் சூரியன் உச்சம் பெற்று அமர்ந்திருக்கிறார். நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் சுக்கிரன் ஐந்தாம் வீட்டில் ராகு என கிகரகங்கள் சஞ்சாரம் உள்ளது.

விரைய சனி
கும்பம் ராசிக்காரர்களே உங்களுக்கு சார்வரி புத்தாண்டு உங்களுக்கு அதிக அளவில் லாபங்களை அள்ளித்தரப்போகிறது. உங்க ராசிநாதன் சனிபகவான் திருக்கணித பஞ்சாங்கப்படி உங்க ராசிக்கு விரைய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். உங்களுக்கு ஏழரை சனியில் விரைய சனி நீடிப்பதால் உங்களுக்கு செலவுகள் அதிகம் வரும் அதை சுப விரைய செலவுகளாக மாற்றுங்கள். அதே போல உங்களுக்கு எதிர்பாராத பக்கம் இருந்தெல்லாம் பணம் வரும். லாபம் வருமே என்று பணத்தை இஷ்டத்திற்கு செலவு செய்ய வேண்டாம். கொஞ்சமாவது பத்திரப்படுத்துங்கள் இல்லாவிட்டால் கையில் உள்ளதை செலவு செய்து விட்டு கடன் வாங்க வேண்டியிருக்கும். தேவையில்லாமல் கடனாளி ஆக வேண்டாம்.

நிதி நிலைமை அற்புதம்
குருபகவான் முதலில் அதிசாரமாக விரைய ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் சில மாதங்களில் லாப ஸ்தானத்திற்கே வருகிறார். செய்யும் தொழிலில் லாபம் அதிகம் கிடைக்கும். உங்களின் நிதி நிலைமை இந்த ஆண்டு முழுவதும் நன்றாக இருக்கும். ஆரோக்கியமும் அற்புதமாக இருக்கும்.
நீங்கள் இந்த ஆண்டு எடுக்கும் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். தொழில் மந்தமாக இருந்தாலும் வியாபாரிகளுக்கு இந்த ஆண்டு லாபகரமான ஆண்டாக அமைந்துள்ளது. ஒன்றுக்கு இரண்டாக லாபம் கிடைக்கும். மாணவர்களுக்கு இது அற்புதமான ஆண்டு உயர்கல்வி யோகம் தேடி வருகிறது.

சொந்தங்களால் நன்மை
கடந்த காலங்களில் உங்களை வாட்டி வதைத்த பிச்சினைகள் தீரும். சொந்த பந்தங்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலமாக இருப்பீர்கள் பணப்புழக்கம் அதிகரிக்கும். நீங்க நினைத்தது நிறைவேறும். திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் இந்த ஆண்டு நடைபெறும். குழந்தைக்காக தவித்துக்கொண்டிருந்தவர்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். நோய் பாதிப்பு பற்றிய அச்சம் நீங்கும். ஏழரை சனியால் சின்னச் சின்ன பாதிப்புகள் வந்தாலும் அது விரைவில் தீரும். வாழ்க்கைத்துணையில் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

வேலையில் கவனம்
வேலையில் சிலருக்கு பிரச்சினை வரும் என்பதால் கவனமாக இருங்க. யாரோ செய்த தவறுக்கு நீங்க பொறுப்பேற்ற வேண்டியிருக்கும் என்பதால் வேலை செய்யும் இடத்தில் விழிப்புணர்வு அவசியம். உங்களின் கடின உழைப்பு, திறமைக்கு மதிப்பு மரியாதை கிடைக்கும். சம்பள உயர்வும் கிடைக்கும். சிலருக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த புரமோசன் கிடைக்கும். ஏழரை சனி எதுவும் செய்யும் என்பதால் வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளிடம் பேசும் போது நிதானமாக பேசுங்க. வேலை போய்விட்டதே வருமானம் இல்லையே என்று கவலைப்பட்டவர்களுக்கு நல்ல சம்பளத்தில் புதிய வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

இழந்ததை மீட்பீர்கள்
இந்த புத்தாண்டில் உங்களுக்கு புது வீடு கட்டும் யோகம் வந்திருக்கிறது. சிலர் வீடு கட்ட மனை வாங்குவீர்கள். சிலர் வாங்கிப்போட்ட இடத்தில் வீடு கட்ட ஆரம்பிப்பீர்கள். திட்டமிட்டு செயல்படுத்தினால் நீங்க நினைத்த காரியம் நிறைவேறும். நிதானமாகவும் பொறுமையாகவும் செயல்படுங்கள். உங்களுக்கு ஏற்பட்டிருந்த மன உளைச்சல் நீங்கும். மறைமுக நெருக்கடிகள் தீரும். சிலருக்கு பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். ராகு கேதுவின் இடம் மாற்றம் உங்களுக்கு சில பிரச்சினைகளை தரலாம் என்றாலும் போராடி வெற்றி பெறுவீர்கள். எந்த புதிய முடிவு எடுக்கும் முன்பாகவும், புதிய முதலீடுகள் செய்யும் முன்பாகவும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவு செய்யுங்க நன்மையில் முடியும்.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications