ஒரு வார்த்தை ட்வீட்.. சசிகலா சொன்ன “மெசேஜ்”! இதிலும் ஓபிஎஸ், இபிஎஸுக்கு பறந்த அட்வைஸ்
சென்னை: உலகம் முழுவதும் டிரெண்டான ஒற்றை வார்த்தை ட்வீட்டை தமிழ்நாடு அரசியல் தலைவர்களும் பதிவிட்டு வரும் நிலையில் சசிகலாவும் மறைமுக அறிவுரையுடன் ஒற்றை வார்த்தையை பதிவிட்டு உள்ளார்.
சமூக வலைதளங்கள் அடிக்கடி ஏதாவது ஒரு சேலஞ்ச் டிரெண்டாகி வருவது வழக்கம். யாராவது ஒருவர் ஏதோ ஒரு நாட்டில் இருந்துகொண்டு தொடங்கி வைக்கும் ஒரு விசயம் டிரெண்டாகி உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர்.
அந்த வகையில்தான் நேற்று முதல் ஒரு வார்த்தை சேலஞ்ச் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது. அமெரிக்கா மற்றும் கனடாவில் தனியார் ரயில் சேவை நிறுவனமான ஆம்டிராக், இன்று காலை தனது ட்விட்டரில் "trains" என்று ஒற்றை வார்த்தையில் ட்வீட் செய்தது.

ஸ்டாலின், எடப்பாடி
இது தமிழ்நாட்டில் டிரெண்டாக முக்கிய காரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவர் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் திராவிடம் என்று பதிவிட்டு ஒற்றை வார்த்தையின் தன்னுடைய கொள்கையையும் செயல்பாடுகளையும் வெளிப்படுத்தினார். அவரை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு என்றும், திருமாவளவன் சனநாயகம் என்று ட்விட்டரில் பதிவிட்டு இருந்தனர்.

அரசியல் தலைவர்கள்
திமுக எம்பி கனிமொழி பெரியார் என்றும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழ்த்தேசியம் என்றும், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனம் ராமதாஸ் எனவும், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தமிழன் என்றும், தேமுதிக தலைவர் விஜயகாந்த் #வறுமைஒழிப்பு என்றும் பதிவிட்டு இருக்கின்றனர்.

சசிகலா ட்வீட்
இவர்களைபோல் சசிகலாவும் ஒற்றை வார்த்தை டிரெண்டில் இணைந்து இருக்கிறார். அவர் தனது ட்விட்டர் கணக்கில் "ஒற்றுமை" என்று ட்வீட் செய்து உள்ளார். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு இடையே மோதல் ஏற்பட்டு நீதிமன்றத்தில் வழக்குகள் நடைபெற்று வரும் நிலையில் சசிகலா இந்த கருத்தை பதிவு செய்து இருக்கிறார்.

ஒற்றுமையை வலியுறுத்தும் சசிகலா
அதிமுகவில் ஓபிஎஸ் தரப்புக்கு சசிகலா ஆதரவாக இருப்பதாகவும் இவரும் தினகரனும் ஓபிஎஸ்-உடன் சேர்ந்து எடப்பாடி எதிர்க்கப்போவதாகவும் பேச்சுக்கள் உள்ளன. ஆனால், அனைவரும் ஒன்றுபட்டு பயணிக்க வேண்டும் என தொடர்ந்து பேட்டிகளிலும் சசிகலா வலியுறுத்தி வந்துள்ளார். விரைவில் மக்கள் சந்திப்பு பயணங்களையும் அவர் மேற்கொள்ள உள்ளார்.
-
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
அதிமுகவில் இருந்து வந்தவர்களை சேர்த்தால்.. தவெக மீதான நம்பிக்கை போய்விடும்.. திருமாவளவன் வார்னிங்! -
எடப்பாடி மீது அதிமுக எம்எல்ஏக்களுக்கு நம்பிக்கை இல்லை! எரியுதடி மாலானு ஏன் புலம்புறீங்க? தவெக பதிலடி -
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே!












Click it and Unblock the Notifications