சசிகலா ஆவடி ஆட்டம் ஆரம்பம்.. சின்னம்மா மெகா ஸ்கெட்ச்! தென்மாவட்டம் இருக்க, சென்னை ஏன்? யாருக்கு செக்
சென்னை: தமிழக அரசியலில் புயலைக் கிளப்பியிருக்கும் விகே சசிகலாவின் சென்னை ஆவடி தேர்தல் முடிவு, பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சசிகலா எடுத்துள்ள அதிரடி முடிவு, ஆவடி தொகுதியில் ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றத்திற்கான தொடக்கப்புள்ளியாக அமைந்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்களாம்.. இதற்கு என்ன காரணம்?
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட பிளவுகள், சட்டப் போராட்டங்கள் என அனைத்தையும் கடந்து, இப்போது "அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்" என்ற புதிய கட்சியைத் ஆரம்பித்திருக்கிறார் சசிகலா.. "தென்னந்தோப்பு" சின்னத்துடனும் களம் காண போகிறார்.

சசிகலா ஆவடி ஆட்டம் ஆரம்பம்
ஆவடி தொகுதியில் போட்டியிட இன்று விருப்ப மனு அளித்துள்ளார் சசிகலா.. தென் மாவட்டங்கள்தான் அவரது வலுவான கோட்டை, அங்குதான் அவரது சமுதாய வாக்குகள் அதிகம் என்ற பொதுவான கருத்தை உடைத்து, சென்னைக்கு அருகிலுள்ள ஆவடி தொகுதியை அவர் தேர்ந்தெடுத்திருப்பது அரசியல் விமர்சகர்களை புருவம் உயர்த்த வைத்துள்ளது..
தென் மாவட்டங்களை விட்டுவிட்டு, ஆவடியை ஏன் சசிகலா தேர்வு செய்ய வேண்டும்? ஆவடி தொகுதியை இதற்கு பின்னால் ஒரு பலமான கணக்கு இருக்கலாம் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
தென்மாவட்டம் - சமூக வாக்குகள்
தென் மாவட்டங்களில் போட்டியிட்டால் அவர் ஒரு குறிப்பிட்ட சமுதாய தலைவராக மட்டுமே பார்க்கப்படுவார் என்ற அச்சம் அவருக்கு இருந்திருக்கலாம்.. அதைத் தவிர்த்து, ஒரு மாநில அளவிலான தலைவராக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டுமெனில், தலைநகரை ஒட்டியுள்ள ஒரு தொகுதியில் வெற்றி பெறுவதுதான் சரியாக இருக்கும் என்றும் சசிகலா கணக்கு போடுவதாக இருக்கலாம்..
அதுமட்டுமல்லால் ஆவடி தொகுதியில் கணிசமான அளவில் தென் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் குடியேறியிருப்பதால், அவர்கள் சசிகலாவிற்கு ஆதரவாக இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் சசிகலாவுக்கு இருக்கலாம் என்கிறார்கள்.
ஆவடி தொகுதியின் இப்போதைய கள நிலவரத்தைப் பார்த்தால், அங்கு திமுகவின் சா.மு. நாசர் அமைச்சராக இருந்து மிக வலுவாக இருக்கிறார்.. கடந்த தேர்தலில் அவர் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்.. அதிமுக தரப்பில் பாண்டியராஜன் போன்ற முன்னாள் அமைச்சர்கள் செல்வாக்குடன் இருக்கிறார்கள்.
சின்னம்மா வாக்கு வியூகம்
இப்படி பலமான எதிரிகளை எதிர்கொள்ள சசிகலா துணிந்திருப்பதற்கு காரணம், அதிமுகவின் வாக்கு வங்கியில் ஒரு பெரிய விரிசலை ஏற்படுத்த முடியும் என்கிற நம்பிக்கைதான்.. அதிமுக தொண்டர்களில் ஒரு பிரிவினர் இன்னும் சசிகலாவை "சின்னம்மா" என்று ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், அந்த வாக்குகள் தன்பக்கம் திரும்பும் பட்சத்தில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்றும் சசிகலா கணக்கு போட்டிருக்கலாம் என தெரிகிறது.
ஆனா.ல் இந்த முடிவினால் சசிகலாவிற்கு லாபம் கிடைக்குமா தெரியவில்லை.. ஆனால் அரசியல் ரீதியாகப் பார்த்தால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவிற்கு இது ஒரு மிகப்பெரிய சவால்தான்..
தர்மயுத்தம் மீண்டும் ஆரம்பம்
சசிகலா பிரிக்கும் ஒவ்வொரு வாக்கும் அதிமுகவின் வெற்றியை கண்டிப்பாக பாதிக்கும் என்பதால், அதிமுகவை வீழ்த்துவதே சசிகலாவின் இப்போதைய மறைமுக வியூகமாக தெரிகிறது..
சுருக்கமாக சொல்லப்போனால் "தர்மயுத்தம்" தொடங்கிய இடத்திலேயே தனது பலத்தை நிரூபிக்க வேண்டும் என்ற வேகத்தில் அவர் ஆவடியைக் குறி வைத்திருக்கிறார்.. அதிமுகவில் தன்னை ஓரங்கட்டியவர்களுக்கு பாடம் புகட்டவும், தான் இன்னும் அரசியலில் ஒரு தவிர்க்க முடியாத சக்தி என்பதைக் காட்டவும் இந்த ஆவடி களம் அவருக்கு ஒரு அக்னிப் பரீட்சையாக அமையும் என்றே தெரிகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்...!!
-
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
15 ஆண்டுகளாக 1 சீட் கூட ஜெயிக்காத தேமுதிகவுக்கு 10 தொகுதிகளா? திமுக கூட்டணிக்குள் கொதிப்பு! -
கலைஞர் மகள் கனிமொழிக்கே சீட் இல்லை.. உதயநிதிக்கும் சிக்கல் வரும்னு பயம்! விளாசிய நாம் தமிழர் சீமான்! -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
விஜய்க்கு எதிராக களமிறங்கும் பாமக.. தேர்தலில் போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? எடப்பாடி அறிவிப்பு -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே! -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக












Click it and Unblock the Notifications