ரெட் சிக்னல்.. பேசும்போதே பட்டென "அவரை" பற்றி கேட்ட அமித் ஷா! அதுவும் மறைமுகமா.. படபடக்கும் அதிமுக

Subscribe to Oneindia Tamil

சென்னை: புதுச்சேரிக்கு செல்லும் முன் சென்னையில் தங்கி இருந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா அதிமுக குறித்து முக்கிய ஆலோசனைகள் சிலவற்றை செய்ததாக கூறப்படுகிறது.

நேற்று முதல்நாள் உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னைக்கு வந்தார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேரடியாக புதுச்சேரி செல்லாமல் சென்னை வந்து, முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து புதுச்சேரி சென்றார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று ஒருநாள் பயணமாக அமித்ஷா புதுச்சேரிக்கு வருகை தந்தார். புதுச்சேரியில் பல அரசியல் மோதல்கள் நடந்து வரும் நிலையில்தான் அமித் ஷாவின் இந்த வருகை அமைந்து இருந்தது.

அதிமுக டாப் தலைகள்

அதிமுக டாப் தலைகள்

இந்த நிலையில் அமித் ஷா சென்னையில் தங்கி இருந்த போது அவரை சந்திக்க அதிமுக இரண்டு டாப் தலைவர்கள் வரவில்லை. அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் மட்டுமே அமித் ஷாவை வரவேற்க பாஜக நிர்வாகிகளுடன் காத்து இருந்தார். ஆனால் வேறு அதிமுக தலைகள் யாரும் மரியாதைக்கு கூட அமித் ஷாவை சந்திக்கவில்லை. பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை என்றாலும் இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான நட்பு நன்றாகவே இருக்கிறது.

ஆளுநர்

ஆளுநர்

ஆளுநருக்கு ஆதரவு தரும் விவகாரம் தொடங்கி பல விஷயங்களில் இரண்டு கட்சிகளும் நட்பாக இருக்கின்றன. இருப்பினும் சென்னை வந்த அமித் ஷாவை அதிமுக டாப் தலைகள் இருவரும் நேரில் சென்று வரவேற்கவில்லை என்பதுதான் புதிராக உள்ளது. அதிமுக இப்படி திடீரென டிஸ்டன்ஸ் மெயின்டெயின் செய்வது பாஜக தலைவர்கள் சிலருக்கே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளதாம். ஏன் அதிமுக தலைகள் யாரும் அமித் ஷா வருகையை கண்டுகொள்ளவில்லை என்று ஆலோசித்து இருக்கிறார்களாம். இதை பற்றி அதிமுக தரப்பும் படபடப்புடன் விவாதித்து இருக்கிறதாம்.

புதுச்சேரி அமித் ஷா

புதுச்சேரி அமித் ஷா

இந்த நிலையில்தான் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு செல்லும் முன் அமித் ஷா திடீரென முக்கியமான ஆலோசனை கூட்டம் ஒன்றையும் சென்னையில் நடத்தி இருக்கிறார். பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட டாப் தலைவர்களை வைத்து அமித் ஷா ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. இதில்தான் அமித் ஷா பாஜக பற்றி பல விஷயங்களை பேசி இருக்கிறார். தமிழ்நாட்டில் எப்படி கட்சியை பலமாக்கலாம் என்று அவர் ஆலோசனை செய்துள்ளார்.

மதமாற்றம்

மதமாற்றம்

தமிழ்நாட்டில் மத மாற்ற விவகாரம் மோசமாக இருக்கிறது. இதை கவனிக்க வேண்டும் என்றெல்லாம் அமித் ஷா பல்வேறு ஆலோசனைகளை செய்ததாக கூறப்படுகிறது. பேசிக்கொண்டே இருக்கும் போதே சட்டென அமித் ஷா அதிமுக பற்றி கேள்வி எழுப்பி இருக்கிறாராம். அதிமுகவுடன் உறவு எப்படி இருக்கிறது.. கூட்டணியில் இல்லை என்றாலும் நட்பு இருக்கிறதா என்று கேள்வி எழுப்பி இருக்கிறாராம்.

கூட்டணி

கூட்டணி

ஒன்றுபட்ட அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாமா? இப்போது இருக்கிற சூழலிலேயே கூட்டணியை தொடரலாமா? எது பாஜகவுக்கு 2024 தேர்தலில் லாபம்? என்று என்று கேட்டுள்ளார். அதாவது ஒன்றுபட்ட அதிமுக என்றால் சசிகலா - இரட்டை தலைமை எல்லோரும் சேர்ந்த ஒன்றுபட்ட அதிமுக. சசிகலாவை இணைந்தது அதிமுகவோடு கூட்டணி வைத்தால் நன்றாக இருக்கும் என்று அமித் ஷா சசிகலா பெயரை குறிப்பிடாமல்.. மறைமுகமாக கேட்டதாக தெரிகிறது.

 அமித் ஷா அறிவுரை

அமித் ஷா அறிவுரை

அதற்கு, அதிமுக வலிமையின் மூலம்தான் திமுகவுக்கு செக் வைக்க முடியும். ஆனால், அக்கட்சி மொத்தமாக பழைய மாதிரி வலிமையடைந்தால் திமுகவின் அதிருப்தி வாக்குக்குகள் அதிமுகவுக்குத் தான் போகுமே தவிர அதனுடன் கூட்டணி வைக்கும் பாஜகவுக்கு பலனில்லை. நாம் இதனால் வளர முடியாது. இப்போது அதிமுக இருக்கும் நிலையிலேயே நீடித்தால்தான் நன்றாக இருக்கும்.

அதிமுக பாஜக

அதிமுக பாஜக

வெளியே இருப்பவர்களை உள்ளே கொண்டு வந்தால் அதிமுக பலமாகிவிடும். அப்படி நடந்தால் அதிமுக இரண்டாம் இடம் வந்துவிடும். நாம் இரண்டாம் இடம் பிடிக்க முடியாது என்று கூட்டத்தில் கலந்து கொண்ட தலைகள் சிலர் கூறி உள்ளனராம். இதை அமித் ஷா நோட் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் சசிகலாவிற்கு இப்போதைக்கு டெல்லி மேலிடத்தில் இருந்து கிரீன் சிக்னல் கிடைக்காது.. ரெட் சிக்னல்தான் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+