சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டுவிட்டரில் டிரெண்டிங்கான சசிகலா... வாழ்த்து மழை பொழியும் ஆதரவாளர்கள்!

Google Oneindia Tamil News

சென்னை: சசிகலாவின் வருகையை ஆதரித்து பலரும் டுவிட்டரில் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

#TN welcome சின்னம்மா என்ற ஹேஷ் டேக் இந்திய அளவில் டுவிட்டரில் டிரண்டாகி வருகிறது.

சசிகலாவுக்கு பெங்களுருவில் இருந்து சென்னை வரை ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் மாஸ் வரவேற்பு அளிக்க அமமுகவினர் தயாராக உள்ளனர்.

வருகிறார் சசிகலா.. மாவட்டந்தோறும் தடபுடல் வரவேற்பு.. ஆட்டம் பாட்டத்துடன் காத்திருக்கும் அமமுக!வருகிறார் சசிகலா.. மாவட்டந்தோறும் தடபுடல் வரவேற்பு.. ஆட்டம் பாட்டத்துடன் காத்திருக்கும் அமமுக!

சசிகலா விடுதலை

சசிகலா விடுதலை

சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த ஜனவரி மாதம் விடுதலையானார். விடுதலை நெருங்கிய நேரத்தில் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் குணமடைந்த அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

மாஸ் வரவேற்புக்கு ரெடி

மாஸ் வரவேற்புக்கு ரெடி

பின்பு சசிகலா மருத்துவர்களின் அறிவுரைப்படி பெங்களூரு அருகே உள்ள பண்ணை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். இந்த நிலையில் சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகம் வருகை தர உள்ளார் சசிகலா. சசிகலாவுக்கு வரலாறு காணாத வரவேற்பு அளிக்க அமமுகவினர் முடிவு செய்துள்ளனர். பெங்களுருவில் இருந்து சென்னை வரை ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் மாஸ் வரவேற்பு அளிக்க அவர்கள் தயாராக உள்ளனர்.

டுவிட்டரில் டிரெண்டிங்

சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு சசிகலா வருகை தர உள்ளதால் அமமுகவினர் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் அவர்கள் கட்டுப்படுத்த முடியாத தங்களது உற்சாகத்தை டுவிட்டரில் கொட்டி தீர்த்து வருகின்றனர். சசிகலாவின் வருகையை ஆதரித்து பலரும் டுவிட்டரில் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். #TN welcome சின்னம்மா என்ற ஹேஷ் டேக் இந்திய அளவில் டுவிட்டரில் டிரண்டாகி வருகிறது.

அதிமுகவை மீட்போம்

சசிகலா, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படங்களை டுவிட்டரில் பகிர்ந்துள்ள ஒருஇவர் ஜெயலலிதாவும் 33 ஆண்டுகால நண்பர்கள், சகோதரிகள் என்றும் மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர். ஜெயலலிதாவின் வேதா இல்லம், ஜெயலலிதா நினைவிடம் ஆகியவை திறக்கப்பட்டு மூடப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிலர், அதிமுகவை மீட்போம் என்றும் கூறியுள்ளனர்.

நாளைய பிரேக்கிங் நியூஸ்

நாளைய பிரேக்கிங் நியூஸ்

நாளைய பிரேக்கிங் நியூஸ், ப்ளாஷ் நியூஸ், பிக் பிரேக்கிங் & டிஆர்பி இந்த ஒரு பெண்ணால் தீர்மானிக்கப்படும். எல்லா கண்களும் அவள் மீது இருக்கும் & அவள் அடுத்து என்ன செய்யப் போகிறாள் என்று என ஒருவர் குறிப்பிட்டுள்ளார். சக்திவாய்ந்த நபர்கள் தங்கள் இடத்தை சக்திவாய்ந்தவர்களாக ஆக்குகிறார்கள்! அத்தகைய ஒரு பெண்மணி எங்கள் சின்னம்மா! என்று ஒருவர் கூறியுள்ளார். இதே போல் பல்வேறு தரப்பினரும் சசிகலா சென்னை வருகைக்கு வரவேற்பு தெரிவித்து டுவிட் போட்டுள்ளனர்.

English summary
Many have been cheering on Twitter in support of Sasikala’s arrival. The hashtag #TN welcomeChinnamma is trending on Twitter across India
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X