சசிகலா சந்திக்க போகும் முக்கிய தலைவர் இவரா?.. பரபரக்கும் தஞ்சை அதிமுக.. டென்ஷனில் ஈபிஎஸ்-ஓபிஎஸ்?
சென்னை: திருச்செந்தூர் ஆன்மீக பயணத்தின் போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்ஸின் சகோதரர் ஓ ராஜாவை சந்தித்தது போல் தஞ்சை ஆன்மீக பயணத்திலும் ஒரு முக்கிய தலைவரை சசிகலா சந்திக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெயலலிதா விட்டு சென்ற அதிமுக எனும் மாபெரும் இயக்கம், கஷ்டமே இல்லாமல் தனது கைகளுக்கு வர வேண்டும் என சசிகலா நினைப்பது நன்றாகவே தெரிகிறது.
சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற போது அவர் ஜெயலலிதா சமாதியில் 3 முறை அடித்து சத்தியம் செய்தார். அடுத்தது சசிகலா, தினகரனை கட்சியிலிருந்து ஓபிஎஸ்- ஈபிஎஸ் நீக்கினர்.

விடுதலை
இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது விடுதலையாகி சசிகலா வெளியே வந்ததும் ஏதோ தரமான சம்பவம் இருக்கும் என கருதப்பட்டது. ஆனால் அவர் எந்த முயற்சியும் எடுக்காமல் அமைதியாக இருந்தார். அவ்வப்போது அதிமுக, அமமுக நிர்வாகிகளுடன் பேசினார். அந்த ஆடியோ "லீக்கானது".

ஓராண்டு
இந்த நிலையில் சிறையிலிருந்து வெளியே வந்து ஓராண்டு ஆன நிலையில் தற்போது அதிமுகவை கையிலெடுக்க மெல்ல மெல்ல காய் நகர்த்தி வருகிறார் சசிகலா. இத்தனை நாட்கள் இரட்டை தலைமையின் செயல்பாடுகளை நடந்து முடிந்த தேர்தல்கள் வரை பார்த்த அவர் தற்போது தொடர் தோல்வியால் கட்சியை கையில் எடுத்துக் கொள்ள முடிவு செய்துவிட்டார்.

ஆன்மீக பயணம்
இதற்காக ஆதரவாளர்களை திரட்ட ஆன்மிக பயணம் என்ற பெயரில் முக்கிய இடங்களுக்கு செல்கிறார். ஆனால் அது பெரும்பாலும் அரசியல் பயணமாகவே இருக்கிறது. கடந்த 4ஆம் தேதி தென் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட சசிகலாவை திருச்செந்தூரில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்ஸின் சகோதரர் ஓ ராஜா சந்தித்து பேசினார்.

கட்சியிலிருந்து நீக்கம்
இதையடுத்து அடுத்த நாளே ராஜா கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். ஆனால் இந்த பயணங்களில் சசிகலா எதிர்பார்த்த தலைகள் அவரை சந்திக்கவில்லை என்றே கூறப்படுகிறது. இதனால் அப்செட்டில் இருந்த அவர் விமான பயணத்தை கேன்சல் செய்துவிட்டு சாலை மார்க்கமாகவே சென்னை திரும்பினார். ஆனாலும் பலனில்லையாம்.

இரண்டாம் கட்டம்
இந்த நிலையில் இரண்டாவது கட்டமாக தஞ்சை மாவட்டத்திற்கு சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். செல்லும் வழியில் மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோயில், மருவத்தூர் ஆதிபராசக்தி, மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி, மயிலம் முருகன் ஆகிய கோயில்களில் தரிசனம் செய்கிறார்.

அதிமுகவில் பரபரப்பு
தஞ்சையில் இரு தினங்கள் தங்கும் அவர் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கத்தை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தஞ்சை அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரை சந்திக்கும் அளவுக்கு சசிகலாவின் முயற்சியை கண்டு அதிமுக இரட்டை தலைமை அப்செட்டிலும் டென்ஷனிலும் இருப்பதாக சொல்லப்படுகிறது.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்?












Click it and Unblock the Notifications