"சின்ன நம்பிக்கை ஒளி".. வீடு முழுக்க உற்சாகம்.. சந்தோஷத்தில் திளைக்கும் சசிகலா? அப்படி என்ன நடந்தது?
சென்னை: அதிமுகவில் சமீப நாட்களாக நடக்கும் விஷயங்கள் காரணமாக சசிகலா தரப்பு மகிழ்ச்சியில் இருக்கிறதாம். அதிலும் கடந்த 2-3 நாட்களாகவே சசிகலா வெளியில் பெரிதாக மீடியா முன் தோன்றவில்லை என்றாலும் வீட்டிற்கு உள்ளே சந்தோச மிகுதியில் இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
சசிகலா தீவிர கடவுள் நம்பிக்கை கொண்டவர். அதிலும் ஜெயலலிதா, எம்ஜிஆர் போலவே இவரும் தீவிரமான விநாயகர் பக்தி கொண்டவர். அந்த வகையில் கடந்த 2-3 நாட்களாக சசிகலா தனது வீட்டில் பல்வேறு பூஜைகளை நடத்தி வருகிறாராம்.
அதிமுகவில் கடந்த சில நாட்களாக நடந்த விஷயங்களை பார்த்து.. தனக்கு ஆதரவாக எல்லாம் திரும்பும் என்ற நம்பிக்கையில் சசிகலா இப்படி பூஜையில் இறங்கி உள்ளார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

எடப்பாடி ஓரம்கட்டப்பட்டார்
சமீபத்தில் டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி.. அங்கு 5 நாட்கள் இருப்பதற்கு பதிலாக 4 நாட்கள் மட்டும் இருந்துவிட்டு திரும்பி வந்தார். பிரதமர் மோடியை சந்திப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அவரை சந்திப்பிற்கு நேரம் கிடைக்காத காரணத்தால் எடப்பாடி பழனிசாமி பாதியில் சென்னைக்கு திரும்பினார். எப்போதும் திடமாக காணப்படும் எடப்பாடி டெல்லி பயணத்திற்கு பின் மிகவும் சோம்பலாக காணப்படுகிறார். டெல்லி பாஜக தலைகள் யாரும் பெரிதாக எடப்பாடியை சந்திக்கவில்லை.

விரும்பவில்லை
அதிமுகவில் எடப்பாடி ஒற்றை தலைமையாக உருவெடுப்பதை பாஜக விரும்பவில்லை என்றே அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எடப்பாடி - ஓபிஎஸ் - சசிகலா சேர்ந்து இயங்கினால்தான் முக்குலத்தோர் வாக்குகள் பிரியாது. அப்போதுதான் அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜகவும் தமிழ்நாட்டில் அதிக இடங்களை வெல்லும் என்று பாஜக தலைகள் நம்புகிறார்களாம். இதனால்தான் ஓபிஎஸ், சசிகலா இன்றி எடப்பாடி மட்டும் ஒற்றை தலைமையாக உருவெடுப்பதை பாஜக விரும்பவில்லை என்கிறார்கள். எடப்பாடியை டெல்லி புறக்கணிக்கவும் இதுவே காரணம் என்கிறார்கள்.

பாஜக
அதோடு எடப்பாடியின் எழுச்சியால் பாஜகவின் எதிர்க்கட்சி ஆகும் திட்டமும் சிக்கலாகும் என்று டெல்லி தலைகள் கருதுகிறார்களாம். இதன் காரணமாகவே எடப்பாடியை சந்திக்க மோடி, அமித் ஷா விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. எடப்பாடி டெல்லியில் இருந்து பாதியில் இருந்து திரும்பி வந்ததால் ஓ பன்னீர்செல்வம் தரப்பு ஒரு பக்கம் உற்சாகத்தில் இருக்கிறதாம். எடப்பாடியை டெல்லி மதிக்கவில்லை.

ஓபிஎஸ் எழுச்சி
டெல்லி சப்போர்ட் எங்களுக்குத்தான் என்ற உற்சாகத்தில் ஓபிஎஸ் தரப்பு இருக்கிறதாம். அதேபோல் சசிகலாவும்.. டெல்லியில் எடப்பாடியை யாரும் கண்டுகொள்ளவில்லை. அப்படி என்றால் டெல்லி சப்போர்ட்டை பெற நாம் முயற்சி செய்யலாம். எடப்பாடியை மோடி சந்திக்க மறுத்தது நமக்கு கிடைத்த சின்ன நம்பிக்கை ஒளி கீற்று என்று சசிகலா நம்பிக்கையிலும் உற்சாகத்திலும் இருக்கிறாராம். அவர் தி நகர் வீடு கொஞ்சம் உற்சாகம் கூடித்தான் காணப்படுகிறது என்கிறார்கள் மன்னார்குடி சொந்தங்கள். சென்னை வரும் பிரதமர் மோடிக்கு எப்படியாவது தூது அனுப்பிவிட வேண்டும் என்ற திட்டத்திலும் சசிகலா இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

முக்கிய புள்ளி பேச்சு வார்த்தை
நாளை சென்னை வரும் பிரதமர் மோடியை சந்திக்க எடப்பாடி, ஓபிஎஸ் இருவரும் தனி தனியாக முயன்று வருகிறார்கள். அதேபோல் சசிகலாவும் மோடி தரப்பிடம் பேசி விட வேண்டும் என்ற திட்டத்தில் இருக்கிறாராம். மோடியை சசிகலா சந்திக்க வாய்ப்பே இல்லை. ஆனால் "தூதுவர்கள்" சிலர் மூலம் மோடியிடம் சில விஷயங்களை தெரிவிக்க வேண்டும் என்று சசிகலா நினைக்கிறாராம். தமிழ்நாடு பாஜகவில் தனக்கு ஆதரவாக உள்ள சில தலைகள் மூலம் இதை சாத்தியப்படுத்தலாம் என்று அவர் தீவிரமாக நம்புகிறாராம்.

இணைப்பு
முன்பு ஊழல் கறை படிந்தவர் என்பதால் சசிகலா பாஜக பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஆனால் இப்போது எடப்பாடி எழுச்சிக்கு முடிவு கட்டும் விதமாக சசிகலா - ஓபிஎஸ் இருவருக்கும் பாஜக கிரீன் சிக்னல் கொடுக்க வாய்ப்பு உள்ளது என்கிறார்கள். நாளை சென்னை வரும் பிரதமர் மோடி மாலை 7.30 மணிக்கு பின் ராஜ்பவனில் பல அரசியல் தலைகளை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பில் கண்டிப்பாக சசிகலா பற்றியும் ஆலோசனை செய்யப்படும்.. இதில் சில முக்கிய முடிவுகளும் எடுக்கப்படலாம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications