Sasikala: முதுகுளத்தூர் டூ சாத்தூர் வரை.. 4 தொகுதிகளில் அதிமுக கூட்டணிக்கு கட்டம் கட்டிய சசிகலா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த முறை எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்ற அதிமுக இந்த தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாமல் தோற்று போயுள்ளது. மொத்தம் 53 தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக கூட்டணிக்கு 4 தொகுதிகளில் சசிகலா ஷாக் கொடுத்துள்ளார். சாத்தூர், முதுகுளத்தூர், தென்காசி, உசிலம்பட்டி ஆகிய தொகுதிகளில் சசிகலா கட்சி பெரும் வாக்குகளை பெற்று அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. அதிலும் முதுகுளத்தூர், சாத்தூர், உசிலம்பட்டியில் என்.டி.ஏவின் வெற்றியை பறித்துவிட்டது என்றே சொல்லலாம்.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவாகி சாதனை படைத்துள்ளது. ஆளும் கட்சியில் இருந்த திமுக எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. எதிர்க்கட்சியாக இருந்த அதிமுக தற்போது அதில் இருந்து சறுக்கி உள்ளது. அதிமுக கூட்டணி மொத்தத்தில் 53 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

Sasikala Jolts AIADMK Alliance in Four Key Constituencies from Mudukulathur to Sattur

என்.டி.ஏ வெற்றியை பறித்த சசிகலா

பாஜக, அமமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளோடு கூட்டணி அமைத்து 53 இடங்களை மட்டுமே பெற முடிந்தது. அதிமுக மட்டும் 47 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக பாஜக கூட்டனியில் முதுகுளத்தூர், உசிலம்பட்டி, சாத்தூர் மற்றும் தென்காசி ஆகிய 4 தொகுதிகளில் என்.டி.ஏ கூட்டணி வெற்றி பெற முடியாதபடி சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சி வாக்குகளை பிரித்துள்ளது.

குறிப்பாக முதுகுளத்தூர் தொகுதியில் 40,282 வாக்குகளை பெற்று அதிமுகவுக்கு மிகப்பெரிய ஷாக் கொடுத்தது. இதேபோன்று உசிலம்பட்டியில் 16,620 வாக்குகள் பெற்று அந்த தொகுதியிலும் அதிமுக வேட்பாளருக்கு பேரிடியை கொடுத்தது.

நயினார் நாகேந்திரன் வெற்றிக்கும் தடை

குறிப்பாக சாத்தூர் தொகுதியில் நயினார் நாகேந்திரன் தோல்விக்கும் சசிகலா பிரித்த ஓட்டுக்களே காரணம் என சொல்லப்படுகிறது. சாத்தூர் தொகுதியில் சுமார் 6 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கடற்கரை ராஜிடம் தோல்வியை சந்தித்து இருந்தார். அதே நேரம் சசிகலா கட்சி வேட்பாளர் இசக்கி ராஜா சாத்தூர் தொகுதியில் 11,602 வாக்குகள் பெற்றிருந்தார்.

இந்த வாக்குகளில் கிட்டத்தட்ட பாதி வாக்குகளை பெற்றிருந்தால் கூட நயினார் நாகேந்திரன் வெற்றி பெற்று இருப்பார். மொத்தமாக 30 தொகுதிகளில் களம் இறங்கிய சசிகலா கட்சி 1,04,006 வாக்குகளை பெற்றுள்ளது. குறைந்தபட்சமாக ஆம்பூர் தொகுதியில் 87 வாக்குகளை பெற்றிருந்தது.

முதுகுளத்தூர்

* ஆர். எஸ் ராஜகண்ணப்பன் - திமுக - 68,003
* மலர்விழி - தவெக - 51,405
* எஸ் பாண்டி - அதிமுக - 47,501
* டாக்டர் ரா. ராம்குமார் - அஇபுதமமுக (சசிகலா கட்சி) - 40,422
* சந்திரபிரபா ஜெயபால் - நாம் தமிழர் - 15,112

உசிலம்பட்டி

* விஜய் எம் - தவெக - 65,743
* மகேந்திரன் - அதிமுக - 63,938
* சரவணகுமார் - காங்கிரஸ் - 59,465
* அய்யப்பன் - அஇபுதமமுக (சசிகலா கட்சி) - 16,620

சாத்தூர்

* கடற்கரை ராஜ் - திமுக - 62,060
* நயினார் நாகேந்திரன் - பாஜக - 56,071
* அஜித் - தவெக - 53,498
* இசக்கி ராஜா - அஇபுதமமுக (சசிகலா கட்சி) - 11,602
* ஆனந்தராஜா - நாம் தமிழர் கட்சி - 9,235
* வேல்முருகன் - புதிய தமிழகம் - 2,343

தென்காசி

* கலை கதிரவன் - திமுக - 79,699
* செல்வ மோகன்தாஸ் பாண்டியன் - அதிமுக - 69,400
* ராஜபிரகாஷ் - தவெக - 55,543
* புஷ்பலதா - நாம் தமிழர் கட்சி - 16,394
* பூசதுரை - அஇபுதமமுக (சசிகலா கட்சி) - 7,715

சசிகலா கட்சி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்:

* முதுகுளத்தூர் 40,282
* உசிலம்பட்டி 16,620
* சாத்தூர் 11,488
* தென்காசி 7,715
* சங்கரன்கோவில் 6,519

* திருமங்கலம் 2,668
* மேலூர் 2,628
* பரமக்குடி 2,239
* வாசுதேவநல்லூர் 1,993
* மன்னார்குடி 1,949

* சிவகாசி 1,729
* ராஜபாளையம் 1,547
* சிவகங்கை 1,170
* அருப்புக்கோட்டை 1,147
* நாங்குநேரி 1,048

* போடிநாயக்கனூர் 659
* விராலிமலை 645
* திருப்பத்தூர் 539
* காரைக்குடி 532
* ஸ்ரீபெரும்புதூர் 451

* எடப்பாடி 429
* சீர்காழி 365
* அரவக்குறிச்சி 290
* லால்குடி 192
* காட்பாடி 175

* பல்லாவரம் 147
* குளச்சல் 142
* செங்கல்பட்டு 117
* திரு.வி.க நகர் 94
* ஆம்பூர் 87

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+