அதிமுக கொடி கட்டிய காரில் சசிகலா.. மதுசூதனனின் உடல்நிலையை விசாரிக்க அப்பல்லோவுக்கு விசிட்!
சென்னை: அதிமுக அவைத் தலைவர் மதுசூதனனின் உடல்நலம் குறித்து விசாரிக்க சசிகலா அப்பல்லோ மருத்துவமனை வந்தார். அவர் அதிமுக கொடி கட்டிய காரில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுசூதனன் உடல்நிலை குறித்து விசாரிக்க நேற்றைய தினம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மருத்துவமனையில் விசாரித்தார். இன்றைய தினம் அப்பல்லோ மருத்துவமனைக்கு சசிகலா வந்த நிலையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் அங்கு வந்ததால் சலசலப்பு ஏற்பட்டது.
சில ஆண்டுகளாகவே அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்
இந்த நிலையில் நேற்றைய தினம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் நேரில் சந்தித்து மதுசூதனனின் உடல்நிலை குறித்து விசாரித்தார். இதையடுத்து இன்றைய தினம் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று மதுசூதனனின் உடல்நிலை குறித்து விசாரித்தார்.

முன்னறிவிப்பு
அப்போது திடீரென சசிகலாவும் முன்னறிவிப்பு ஏதும் இன்றி அப்பல்லோ மருத்துவமனைக்கு வருகை தந்தார். அவர் மதுசூதனனின் உடல்நிலை குறித்து விசாரிக்க சென்றார். மருத்துவர்கள் மற்றும் மதுசூதனனின் குடும்பத்தினரிடம் உடல்நிலை குறித்து சசிகலா கேட்டறிந்தார்.

அதிமுக கொடி
சசிகலா அப்பல்லோ மருத்துவமனைக்கு அதிமுக கொடி பொருத்திய காரில் வந்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் 8-ஆம் தேதி பெங்களூரிலிருந்து சென்னைக்கு வந்த சசிகலா தனது காரில் அதிமுக கொடி கட்டி சென்ற நிலையில் அதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
Recommended Video

எடப்பாடி பழனிச்சாமி
சசிகலா மருத்துவமனைக்கு வந்த போது அங்கு எடப்பாடி பழனிச்சாமியும் இருந்தார். இதனால் சசிகலா வருவதை அறிந்து அவசர அவசரமாக விசாரித்துவிட்டு எடப்பாடி வெளியேறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications