எதிரிகளை வீழ்த்த "மஹா யாகம்"! விக்கித்து நிற்கும் EPS- OPS! பிளைட் ஏறிய சசிகலா.. அதிமுகவில் பரபரப்பு
சென்னை: அதிமுகவில் ஒற்றை தலைமை குரல்கள் தீவிரம் எடுத்து உள்ள நிலையில் சசிகலா முக்கியமான திட்டம் ஒன்றை கையில் எடுத்து இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வருகின்றன. அதிமுகவை கலங்க வைக்க போகும் திட்டம் இது என்றும் சசிகலா தரப்பில் கூறுகிறார்கள்.
கடந்த 26 வருடங்களில் இல்லாத மிகப்பெரிய தோல்வியை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக பெற்றுள்ளது. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஒரு மாநகராட்சியை கூட அதிமுக கைப்பற்றவில்லை.
அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் கொங்கு மண்டலத்தில் கூட அக்கட்சியால் ஒரு மாநகராட்சியை கூட பிடிக்க முடியவில்லை. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் சேலம் மாவட்டத்திலும் அதிமுக மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ளது.

அதிமுக
இந்த படுதோல்வி அதிமுகவினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவுக்கு ஏற்பட்ட தேர்தல் தோல்வி எடப்பாடி-பன்னீர் தலைமைக்கு எதிரான விவாதங்களை அதிமுகவில் எதிரொலிக்கச் செய்து கொண்டிருக்கிறது. குறிப்பாக எடப்பாடி தலைமைக்கு எதிராக கட்டமைக்கப்படுகின்றன. இந்த சூழலை பயன்படுத்தி அதிமுகவுக்குள் நுழைந்து விட காய்களை நகர்த்தி வருகிறார் சசிகலா.

படுதோல்வி
எடப்பாடி பழனிசாமி தன்னை அதிகம் முன்னிறுத்துகிறார். அவரின் தலைமை சரியில்லை. வேறு ஒரு நல்ல தலைமை இருந்தால் அதிமுக இவ்வளவு மோசமான தோல்வியை சந்தித்து இருக்காது. நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் சோர்வடைந்துவிட்டனர் என்று கட்சிக்கு உள்ளேயே எதிர்ப்பு குரல்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளன. தென் மாவட்டங்களில் இது அதிகம் கேட்க தொடங்கி உள்ளது.

மோதல்
இதை பயன்படுத்தி சசிகலா தனது ஆதரவாளர்கள், அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், மா.செ.க்கள், மாநில நிர்வாகிகள் என பல தரப்பினரிடமும் சீக்ரெட்டாக பேசிக் கொண்டு இருக்கிறாராம்.. அதாவது, சசிகலாவுக்கு ஆதரவாக அதிமுகவில் குரல் கொடுக்க வேண்டும் என்பதே இந்த போன் கால்களின் நோக்கம். இதன் பயனாகவே ஏற்கனவே சில மாவட்ட நிர்வாகிகள் சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சசிகலா
அதிலும் நேற்று புதிய திருப்பமாக தேனியில் இருந்தே சசிகலாவிற்கு ஆதரவாக குரல்கள் வந்தன. ஓபிஎஸ்ஸுக்கு மிகவும் நெருக்கமான தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையது கான் நேற்று சசிகலாவிற்கு ஆதரவாக பேசினார். அதில், சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டும். டிடிவி தினகரனையும் அதிமுகவில் சேர்க்க வேண்டும். இவர்கள் இருவரையும் அதிமுகவில் மீண்டும் சேர்த்தாலே கட்சியில் எல்லா பிரச்சனையும் சரியாகிவிடும் என்று கூறினார்

யாகம்
இப்படி அதிமுகவில் தனது ஆதரவு பெருகி வரும் நிலையில், நாளைக்கு திருச்செந்தூர் செல்ல சசிகலா திட்டமிட்டுள்ளார். சிறப்பு திட்டங்களோடு அவர் திருச்செந்தூர் செல்கிறார். சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு ப்ளைட் ஏறுகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் திருச்செந்தூர் செல்கிறார். திருச்செந்தூர் முருகன் கோவிலில் யாக வழிபாடு நடத்துகிறார். எடப்பாடி உள்ளிட்ட தனது எதிரிகளை வீழ்த்தும் யாகம் அது என்று சசிகலா தரப்பிலிருந்து கூறப்படுகிறது.

பிளான் என்ன
பூஜைகளை முடித்து விட்டு நாளை திருச்செந்தூரில் தங்குகிறார். மறுநாள் கார் மூலம் மதுரை வந்து அங்கிருந்து ப்ளைட் பிடித்து சென்னை வருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதிமுகவில் இணைய இதுவே சரியான தருணம். இப்போது விட்டால் இனி எப்போதும் இணைய முடியாது. எனவே இப்போது யாகம் நடத்துவதே சரியாக இருக்கும் என்று சசிகலா முடிவு எடுத்து இந்த மகா யாகத்திற்கு ஏற்பாடு செய்து இருக்கிறாராம்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications