சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நள்ளிரவு "ரகசிய" விசிட்.. 30 நிமிடம் அசையாமல் உட்கார்ந்த சசிகலா.. போயஸ்கார்டனில் நேற்று நடந்தது என்ன

Google Oneindia Tamil News

சென்னை: நேற்று போயஸ்கார்டனில் விநாயகர் கோவிலில் வழிபட்ட சசிகலா அங்கு நீண்ட நேரம் தியானம் மற்றும் வழிபாடு நடத்தினார்.

லைம்லைட் வேண்டாம்.. மீடியா வெளிச்சமே வேண்டாம்.. முக்கியமாக தேர்தல் நேரத்தில் எந்த விதத்திலும் அதிமுகவிற்கு இடைஞ்சலாக இருக்க வேண்டாம்.. இதுதான் தற்போது சசிகலா தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லிக்கொண்டு இருப்பது. முடிந்த வரை யாருக்குக்கு தெரியாமல் "சில காலத்திற்கு" சைலன்ட் மோடிலேயே இருப்போம் என்பதுதான் சசிகலாவின் தற்போதைய திட்டம்.

அமைதியாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர் ஏன் தேர்தல் நேரத்தில் கோவில், கோவிலாக சுற்றுகிறார் என்று கேள்வி எழுவது இயல்புதான். சசிகலாவின் திட்டம் என்ன? ஏன் கோவில்களுக்கு விசிட் அடிக்கிறார் என்று மன்னார்குடி வட்டாரத்தில் விசாரித்தோம்.

சசிகலா

சசிகலா

சசிகலா நான்கு வருடம் சிறையில் இருந்தே போது கோபமாக இருந்திருப்பார்.. ஏமாற்றத்தில் இருந்திருப்பார் என்றுதான் பலரும் நினைத்தனர். ஆனால் சசியோ.. அரசியலை பற்றி பெரிதாக பேசாமல் முடிந்த அளவு ஜெயில் பணிகளை செய்து கொண்டு, இன்மேட்டுடன் நெறுக்கமாகவே இருந்துள்ளார். முக்கியமாக ஆன்மீக ஈடுபாடு இவருக்கு ஜெயிலில் அதிகரித்து இருந்ததாக கூறப்படுகிறது.

கோவில்கள்

கோவில்கள்

அப்போதே சிறையில் இருந்து வெளியே வந்ததும் கோவில்களுக்கு செல்ல வேண்டும் என்று சசிகலா திட்டமிட்டு இருந்தாராம். முக்கியமாக டெல்டாவில் இருக்கும் சில பிரசித்தி பெற்ற கோவில்கள், ஸ்ரீரங்கம் கோவில், சென்னையில் இருக்கும் சில கோவில்கள்,குலதெய்வம் கோவில்களில் வழிபாடு நடத்த வேண்டும் என்பதில் சசிகலா தீர்க்கமாக இருந்துள்ளார்.

நீட்சி

நீட்சி

இந்த திட்டத்தின் நீட்சிதான் தற்போதைய கோவில் வழிபாடு என்கிறார்கள். சசிகலாவிற்கு இப்போது அரசியல் திட்டமெல்லாம் எதுவும் இல்லை. அவருக்கு இப்போது ஆன்மிகம் மீது மட்டுமே நாட்டம். தேர்தல் மீது கவனம் இல்லை. அதிமுகவை கைப்பற்றும் எண்ணமும் இல்லை. இதனால்தான் அவர் அதிமுக பற்றியும் பேசவது இல்லை.

கோவில்

கோவில்

சசிகலாவின் தற்போதைய எண்ணம் எல்லாம் கோவில் வழிபாடு மீது மட்டுமே உள்ளது. அவருக்கு மீடியா வெளிச்சம் கூட பிடிக்கவில்லை என்று நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். இதனால்தான் முடிந்த வரை சைலண்டாக கோவில் விசிட்களை சசிகலா செய்து வருகிறார். கோவில் விசிட்களில் கூட இதனால்தான் பெரிய அளவில் அவர் யாரையும் சந்திக்கவில்லை.

நேற்று விசிட்

நேற்று விசிட்

நேற்று இதேபோல் சசிகலா தி நகரில் இருந்து போயஸ்கார்டனுக்கு கோவில் விசிட் அடித்தார். போயஸ்கார்டனில் வேதா நிலையத்திற்கு அருகே இருக்கும் விநாயகர் கோவிலுக்கு சென்றார். கோவில் பூசாரி அந்த நேரத்தில் இல்லாததால் பூசாரி வந்து, பூஜை நடக்கும் வரை சசிகலா கோவிலுக்கு உள்ளேயே தியானம் செய்தார். சுமார் 30 நிமிடங்கள் கோவிலுக்கு உள்ளேயே சசிகலா நீண்ட தியானம் செய்தார் .

சசிகலா தியானம்

சசிகலா தியானம்

சிறைக்கு செல்லும் முன்பே சசிகலா தியானம் செய்துவிட்டுதான் சென்றார். இந்த புகைப்படங்களும் கூட அந்த நேரத்தில் வெளியானது. இதேபோல் சிறையில் பல முறை நீண்ட தியானங்களில் சசிகலா ஈடுபட்டு இருக்கிறார். பெரிய அளவில் கோபத்தை வெளிகாட்டாமல், மன அமைதிக்காக சசிகலா தியானத்தில் ஈடுபடுவதை இயல்பாக வைத்து இருந்தார்.

போயஸ்கார்டன்

போயஸ்கார்டன்

நேற்றும் போயஸ்கார்டனில் இதேபோல்தான் சசிகலா தியானம் செய்துள்ளார். விநாயகர் கோவிலுக்கு நேற்று சென்றவர்.. அருகில் அவருக்காக கட்டப்படும் வீட்டை கூட பார்க்காமல் கிளம்பிவிட்டார். வேதா இல்லத்திற்கு எதிராக இருக்கும் இந்த புதிய வீட்டின் கட்டுமானத்தை கூட இவர் பார்க்கவில்லை.கடந்த சில நாட்களுக்கு முன்பே இந்த வீட்டிற்கு சசிகலா சென்று பார்த்துவிட்டார் என்று கூறப்படுகிறது.

இரவு

இரவு

சில நாட்களுக்கு முன் இரவு நேரத்தில் சசிகலா இந்த புதிய கட்டுமான வீட்டிற்கு விசிட் அடித்து இருக்கிறார். கட்டுமானம் எப்படி இருக்கிறது என்பதை மட்டும் பார்க்க இங்கே சென்றுள்ளார் என்கிறார்கள். மீடியா வெளிச்சம் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக முடிந்த அளவு அமைதியாக சசிகலா இந்த விசிட்களை செய்து வருகிறார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

English summary
Sasikala prayed and did some meditation in Poes Garden yesterday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X