ஹய்யய்யோ.. சசிகலா புஷ்பா வீடியோ.. "உங்க பார்வை எப்பவுமே குஜால்கள்தான்".. பாஜக காயத்ரி ரகுராம் நறுக்
காயத்ரி ரகுராம் சசிகலா புஷ்பா குறித்த வீடியோவை பதிவிட்டு திமுகவை சாடியுள்ளார்
சென்னை: சசிகலா புஷ்பாவிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட பாஜக மாநில பொதுசெயலாளர் பொன்.பாலகணபதிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், இந்த வீடியோ குறித்து காயத்ரி ரகுராம் ஒரு ட்வீட் பதிவிட்டு கருத்து கூறியுள்ளார்.
2 தினங்களாக ஒரு வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.. தியாகி இமானுவேல் சேகரனின் 65 ஆவது நினைவு நாள் நேற்று முன்தினம் அனுசகரிக்கப்பட்டது.
இதனையொட்டி பரமக்குடியில் இருக்கும் தியாகி இமானுவேல் சேகரனின் நினைவிடத்தில் தமிழக பாஜக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

நயினார் நாகேந்திரன்
அக்கட்சியின் மாநில துணைத் தலைவா் நயினாா் நாகேந்திரன், மாநில பொதுச்செயலாளா் பொன்.பாலகணபதி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் மாணிக்கம், முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா, மாநிலச் செயலாளா் அஸ்வத்தாமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்... அப்போது சசிகலா புஷ்பாவை சுற்றி நிறைய ஆண்கள் கூட்டம் நின்றிருந்தது.. அந்தசமயத்தில், அவருக்கு பின்னால் இருந்து, ஒரு கை அவரின் முடியை பிடித்து இழுத்துள்ளது.... அப்படி சசிகலாவின் புஷ்பாவின் தலைமுடியை, பொன்.பாலகணபதி என்பவர்தான் பிடித்து இழுத்ததாக கூறப்படுகிறது..

முந்தானை
அதுமட்டுமல்ல, சசிகலா புஷ்பாவின் கையை அவர் பிடிக்க முயன்றதாகவும், கைகளால் தொடும்படி செய்ய முயன்றபோதெல்லாம் அவரின் கையை சசிகலா புஷ்பா தள்ளிவிட்டுக் கொண்டேயிருந்ததாகவும் தெரிகிறது.. பொன்.பாலகணபதி என்பவர், பாஜக நிர்வாகியும், பொதுச்செயலாளரும் ஆவார்.. கட்சியில் மிக முக்கிய பொறுப்பில் இருப்பவரும்கூட.. இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. ஒரு பெண் என்றும் பாராமல், முன்னாள் எம்பி என்றும் பாராமல், பொதுவெளி என்றும் பாராமல், தான் ஒரு மூத்த நிர்வாகி என்றும் பாராமல் சசிகலாவுக்கு இப்படித்தான் சில்மிஷ டார்ச்சர் தருவதா என்று சோஷியல் மீடியாவில் பலரும் கேள்வி எழுப்பினர்..

சில்மிஷம்
அத்துடன் பாஜகவையும் சரமாரியாக திட்டி தீர்த்தனர்.. சசிகலா புஷ்பாவுக்கே இந்த கதி என்றால், மற்ற இளம் பெண்களின் நிலைமை என்னாவது? என்று அண்ணாமலைக்கே டேக் செய்து கேள்விகளை எழுப்ப ஆரம்பித்தனர்.. எல்லாவற்றுக்கும் மேலாக, பாஜகவின் மாநில பொதுச்செயலாளர் பொன்.பாலகணபதிக்கே நேரடியாக பலர் கடும் கண்டனம் தெரிவித்தனர்... இதனிடையே, பாஜகவின் சசிகலா புஷ்பாவிடம் பொது இடத்தில் அக்கட்சியின் மாநில பொதுசெயலாளர் பொன்.பாலகணபதி அநாகரீகமாக நடந்து கொண்டதாக எழுந்த குற்றச்சாட்டில் நேரில் வந்து ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு பொன்.பாலகணபதிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது..

காயத்ரி
இந்த சம்பவம் நடந்து இதுவரை, பாஜக தரப்பில் யாருமே பதிலளிக்கவில்லை.. கருத்தும் சொல்லவில்லை.. கண்டனமும் தெரிவிக்கவில்லை.. மறுப்பும் கூறவில்லை.. ஆனால், தமிழக பாஜக தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநிலத் தலைவர் காயத்ரி ரகுராம் இதுகுறித்து ஒரு ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.. அத்துடன் இதே நிகழ்வு தொடர்பான இன்னொரு வீடியோவையும் தன்னுடைய ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

சேலை முந்தானை
அந்த வீடியோவில் சசிகலா புஷ்பாவின் பின்னால் நின்றிருந்த பாலகணபதி மலர்வளையம் வைக்க முன்னால் வருவதும், கூட்ட நெரிசலில் சசிகலா புஷ்பா அவர்களின் சேலை முந்தானை, 2 நபர்களுக்கு இடையில் சிக்கிக்கொண்டதால் அதனை விடுவித்து பாலகணபதி உதவி செய்வது போல காட்சிகள் பதிவாகியுள்ளது. மேலும், "திமுகவின் பார்வை எப்போதும் குஜால்கள்தான். அவர்களால் எதையும் சரியாக பார்க்க முடியாது. மூளை அத்தகையது" என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார் காயத்ரி ரகுராம். டெல்லியில் இருக்கக்கூடிய தேசிய மகளிர் ஆணையமே, பாலகணபதிக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கும் நிலையில், காயத்ரியின் இந்த விளக்கம் சலசலப்பை கூட்டி வருகிறது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை












Click it and Unblock the Notifications