வடக்கே வன்னியர்..தெற்கே தேவர்! 3 பேருக்கு செக்.. அய்யா ராமதாஸை வைத்து சின்னம்மா சசிகலா போடும் கணக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 இல் சட்டமன்ற தேர்தலில் திடீர் திருப்பமாக அதிமுகவின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் நிழலாக பல ஆண்டுகாலம் பயணித்த சசிகலா தனது கட்சியின் பெயரை ஆரம்பித்திருக்கிறார். இறுதி வாய்ப்பாக ராமதாசுடன் அவர் கூட்டணி சேரலாம் என சொல்லப்படும் நிலையில், 'வடக்கே வன்னியர் தெற்கே தேவர். என்ற வாக்கு வங்கியை குறிவைத்து அதிமுகவுக்கு சிக்கல் அளிக்கும் வகையில் திட்டம் தீட்டி இருப்பதாக சொல்லப்படுகிறது.

2026 சட்டமன்றத் தேர்தலில் இன்னும் என்னென்ன மாற்றங்கள் நிகழப்போகிறது என்பது இன்னும் சில நாட்களில் தெரிய வந்துவிடும். பாஜகவுடன் தமிழக வெற்றி கழகம் கூட்டணி சேர்வது கிட்டத்தட்ட உறுதியாக இருக்கிறது.
இதனால் பாஜக தரப்பு உற்சாகமடைந்திருக்கும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

TN Election Exclusive Tamil Nadu Assembly Election 2026 Sasikala

தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி என்ற எடப்பாடியின் கனவில் மண்ணை அள்ளிப் போட்டு இருக்கிறது பாஜக. பீகார் மாடலில் அதிமுகவுக்கு 110 தொகுதிகள், பாஜக, தவெக, பாமக உள்ளிட்ட கூட்டணிகளுக்கு 120 தொகுதிகள் என பாஜக பெரும்பான்மை பெற முயற்சித்து வருகிறது.

2026 சட்டமன்ற தேர்தல்

ஒரு வேளை அதிமுக ஆட்சி அமைந்தாலும் எடப்பாடி பழனிச்சாமி தனித்து பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க கூடாது என்று பாஜகவை திட்டமிடுகிறது என்ற விமர்சனமும் உள்ளது. மறுபுறம் அசுர கூட்டணி பலத்துடன் திமுக களத்தில் இறங்குகிறது. காங்கிரஸ், தேமுதிக, விசிக, மதிமுக உள்ளிட்ட 22 கட்சிகளும் அமைப்புகளும் திமுகவின் பின்னால் அணிவகுகின்றன.

பாஜக அதிமுக

தற்போதைய சூழலில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு என சொல்லப்படும் நிலையில் ஒருவேளை பாஜக அதிமுக தமிழக வெற்றிக்கழக கூட்டணி அமைந்தால் அது தமிழக அரசியல் களத்தில் திருப்புமுனை கூட்டணியாக அமையும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. மறுபுறம் நாம் தமிழர் கட்சியின் சீமான் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டார். தற்போதைய சூழ்நிலையில் தமிழகத்தில் 4 முனைப் போட்டி என சொல்லப்படும் நிலையில் தற்போது குறுக்கே இந்த கௌசிக் வந்தா என்பது போல ராமதாஸ் சசிகலா கூட்டணி அமையலாம் என சொல்லப்படுகிறது.

ராமதாஸ் சசிகலா

மகனால் கட்சியிலிருந்து ஓரம் கட்டப்பட்ட ராமதாஸ் தற்போது புதிய அமைப்பை ஏற்படுத்தலாம் என யோசித்து வருவதாக சொல்லப்படுகிறது. திமுகவும் அதிமுகவும் தமிழக வெற்றி கழகமும் ராமதாசை கூட்டணியில் சேர்க்க விரும்பாத நிலையில் தற்போது சசிகலா ராமதாசை சந்தித்து பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் ஏற்கனவே தொண்டர் ஒருவர் ஆரம்பித்த கட்சியில் எம்ஜிஆர் பாதையில் இணைந்திருக்கிறார். அதன் பொதுச்செயலாளராக சிகலா தேர்ந்தெடுக்கப்படலாம் என்கின்றனர்.

எடப்பாடி பழனிச்சாமி

இது ஒரு புறம் இருக்க 2026 தேர்தலில் தன்னை நெருக்கடிக்கு உள்ளாக்கிய எடப்பாடி பழனிச்சாமி, டிடிவி தினகரன், பாஜக உள்ளிட்ட முக்கிய புள்ளிகளுக்கு நெருக்கடி தரும் வகையில் புதிய திட்டம் ஒன்றை சசிகலா வகுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. அது ராமதாசுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிடுவது. சசிகலாவுக்கு என ஆதரவாளர் வட்டமும் சமூக ஆதரவும் இருக்கும் நிலையில் அதனை தேர்தலில் வாக்குகளாக மாற்ற சசிகலா திட்டமிட்டு இருக்கிறார் .

வன்னியர் தேவர் வாக்கு வங்கி

அதற்காக அவர் தேர்ந்தெடுத்தது பாமக நிறுவனர் ராமதாசை.. ராமதாசும் தனது ஆதரவாளர்களால் ஓரங்கட்டப்பட்டிருக்கும் நிலையில் திமுக அதிமுக என யாருமே கூட்டணி சேரவில்லை. இதனால் அதிமுக திமுக என அனைத்து தரப்புக்கும் நெருக்கடி கொடுக்கும் வகையில் வாக்கு வங்கியை உடைப்பது தான் சசிகலாவின் எண்ணம். வட மாவட்டங்களில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு வாக்கு வங்கி இருந்தாலும், தற்போது ராமதாஸுக்கு என தனித்த செல்வாக்கும் ஆதரவாளர் வட்டமும் இருக்கிறது. மேலும் மன்னார்குடி, தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா பகுதிகளிலும், தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட சில பகுதிகளிலும் சசிகலாவுக்கு என ஆதரவாளர் வட்டம் இருக்கிறது.

கூட்டணி கணக்கு

இதனால் வடக்கே வன்னியர் தெற்கு தேவர் சமூக வாக்குகளை உடைக்கும் வகையில் கூட்டணி சேரலாம் என சசிகலாவின் திட்டத்தை ராமதாஸ் ஏற்றுக்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் ஓபிஎஸ் திமுகவுக்கு சென்றது, தினகரன் அதிமுகவுடன் கூட்டணி சென்றது என முக்குலத்தோர் வாக்குகள் உடைந்து நிற்கும் நிலையில் சசிகலாவுக்கு தனித்த செல்வாக்கு கிடைக்குமா? திமுகவுக்கு என ஒரு குறிப்பிட்ட வன்னியர் சமூக வாக்குகளும், பாமக அதிமுகவுக்கு சென்றதால் பிரிந்த வன்னியர் வாக்குகளும் இருக்கும் நிலையில் ராமராசுக்கு என தனித்த செல்வாக்கு சசிகலாவுக்கு திருப்பமாக அமையுமா? 2026 தேர்தலில் இருவர் கூட்டணி வெற்றி பெறுமா? என பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+