கொஞ்சம்கூட டயர்ட் ஆகாத சசிகலா.. தி.நகர் வீட்டிற்குள் நுழைந்ததுமே.. ஒரே நாளில் கெத்து டிராவல்!
இன்று விடிகாலை தி.நகர் வீட்டுக்கு வந்து சேர்ந்தார் சசிகலா
சென்னை: கொஞ்சம்கூட டயர்ட் ஆகாத சசிகலாவை வியந்துபோய் பார்த்து வருகின்றனர் அமமுகவினர்..!
ஒரு வார ரெஸ்ட்டுக்கு பிறகு, நேற்று காலை காரில் கிளம்பி சென்னைக்கு வர தொடங்கினார் சசிகலா.. நான் தான் அதிமுக, நான்தான் பொதுச்செயலாளர் என்பதை அதிமுகவுக்கு பறைசாற்ற அதிமுக கொடியை காரில் கட்டி கொண்டார்.. கழுத்தில் அதிமுக துண்டு போட்டுக் கொண்டார்.
பெங்களூரிலேயே பதற்றம் ஏதாவது வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரொம்ப கூலாகவே அவரது கார் பயணம் அமைந்தது.. போலீசாரே அவரது காருக்கு வழிவிட்டு, அதேசமயம் அங்குள்ள பொதுமக்களுக்கும் எந்தவித பாதிப்பும், இடையூறும் ஏற்படாத வண்ணம் சரிசெய்து நிலைமையை கட்டுக்குள் வைத்திருந்தனர்.. கர்நாடக மக்களுக்கே இது ஆச்சரியம்தான்.

பட்டாசுகள்
வழியில் ஆங்காங்கே கார் மாற்றப்பட்டது.. முட்டி மோதி வந்த தொண்டர்களால் கார்களில் விபத்துக்கள் ஏற்பட்டது.. பட்டாசுகள் கொளுத்தி மகிழ்ந்ததால், 2, 3, கார்கள் குபுக்கென தீப்பற்றி கொண்டு நடுரோட்டிலேயே எரிந்தன.. எனினும் சசிகலாவின் பயணம் தடையின்றி தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. வாணியம்பாடியில் மட்டும் கொஞ்ச நேரம் தொண்டர்கள் மத்தியில் ஒருசில வார்த்தைகள் பேசினார் சசிகலா.. அந்த பேச்சிலேயும் புரிந்துவிட்டது மொத்த குறியும் அதிமுகதான் என்று.

எம்ஜிஆர்
இதற்கு பிறகு, இன்று விடிகாலை அரசின் பல மறைமுக எதிர்ப்புகளையும் தாண்டி எல்லைக்குள் வந்தார் சசிகலா.. அதன்பிறகு ராமாவரத்தில் இருக்கும் எம்ஜிஆர் நினைவு இல்லத்துக்கு தினகரனோடு சென்றார்.. எம்ஜிஆர் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்... கொஞ்ச நேரம் அங்கேயே உட்கார்ந்து தினகரனுடன் பேசிக்கொண்டிருந்தார்..

நாதஸ்வரம்
அதன்பிறகு கிளம்பி தி.நகர் வீட்டிற்கு வந்துவிட்டார். காலையில் வீட்டிற்குள் சசிகலா வந்தபோது, மேளதாளம், நாதஸ்வரங்கள் முழங்க, பெண்கள் சூழ, வரவேற்பு தரப்பட்டது. வீட்டுக்குள் நுழைந்ததுமே அவருக்கு திருஷ்டி சுற்றி போடப்பட்டது. 23 மணி நேரம் காரிலேயே பயணம் என்பதால், இன்று முழுவதும் சசிகலா ரெஸ்ட் எடுப்பார் என்று தெரிகிறது..

ரெஸ்ட்
அதனால், நாளைதான் அநேகமாக செய்தியாளர்களையோ அல்லது கட்சி நிர்வாகிகளையோ சந்திக்கக்கூடும் என்று தெரிகிறது. 23 மணி நேரம் காரில் பயணம் என்றாலும், முகத்தில் அவருக்கு களைப்பே தெரியவில்லையாம்.. அதேபோல., விடிய விடிய ஆதரவாளர்கள் சசிகலாவுக்காக காத்திருந்ததும், அவர் வந்ததும் பூக்களை தூவி ஆரவாரம் செய்ததும் அதிமுகவுக்கு மலைப்பு தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications