அதிகாலை 4 மணிக்கு சென்னை ராமாவரம் தோட்டத்திற்கு வந்த சசிகலா.. எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை ராமாவரம் எம்ஜிஆர் தோட்டத்தில் அவரது சிலைக்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Recommended Video

    சென்னை: எம்ஜிஆர் சிலைக்கு மாலை, மரியாதை…ராமாவரம் தோட்டத்தில் சசிகலா!

    சொத்துக் குவிப்பு வழக்குகளுக்காக சிறை சென்ற சசிகலா 4 ஆண்டுகள் கழித்து தமிழகத்திற்கு நேற்று புறப்பட்டார். அவருக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    ஒசூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் வழியாக சென்னை நோக்கி புறப்பட்டார் சசிகலா. தொண்டர்களின் உற்சாக வரவேற்பினால் அவர் இரவும் தனது பயணத்தை தொடர்ந்தார்.

     Sasikala reached Ramapuram garden and pays tribute to MGR statue

    பின்னர் இன்று அதிகாலை 4 மணிக்கு ராமாவரம் தோட்டத்திற்கு அவர் வந்தடைந்தார். அங்கு அவருக்கு ஆப்பிள், சாத்துக்குடி, பைன்ஆப்பிள் ஆகியவற்றால் செய்யப்பட்ட மாலை அணிவிக்கப்பட்டது.

    அந்த மாலை ஒரு கம்பியில் தொங்கவிடப்பட்டிருந்தது. அந்தளவுக்கு எடை அதிகம் கொண்டதாக இருந்தது. ராமாவரத்தில் எம்ஜிஆர் நினைவிடம், ஜானகி நினைவிடத்தில் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

     Sasikala reached Ramapuram garden and pays tribute to MGR statue

    பின்னர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சசிகலா, அவரது வாரிசுகளிடம் நலம் விசாரித்தார். இதையடுத்து அங்கிருந்து புறப்பட்ட சசிகலா திநகரில் உள்ள கிருஷ்ணபிரியா வீட்டை வந்தடைந்தார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+