அதிமுக இரண்டாக உடைகிறதா? பண்ணை வீட்டில் கர்ஜித்த ஓபிஎஸ்.. காரில் பறந்த உதயகுமார்.. என்ன நடக்கிறது?
சென்னை: அதிமுகவில் மீண்டும் சசிகலாவை சேர்க்க வேண்டும் என்று குரல்கள் எழ தொடங்கி உள்ளன. முக்கியமாக நேற்று ஓபிஎஸ்ஸின் பண்ணை வீட்டில் நடந்த கூட்டம் ஒன்று அதிமுக கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்த நிலையில்தான் தற்போது சசிகலா ஆதரவு குரல்கள் கட்சிக்குள் கேட்க தொடங்கி உள்ளது. தேர்தலில் தோல்வி அடைந்ததும் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர்செல்வம் ஆகியோரின் இரட்டை தலைமையை பறிக்க வேண்டும்.
கட்சிக்குள் வலுவான ஒரு ஒற்றை தலைமை இருக்க வேண்டும் என்று குரல்கள் கேட்க தொடங்கின. அதிலும் தென் மண்டல அதிமுக தலைவர்கள் பலர் சசிகலாவிற்கு ஆதரவாக கொஞ்சம் கொஞ்சமாக குரல் கொடுக்க தொடங்கினர்.

தேனி மாவட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம்
ஏற்கனவே முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு , கடம்பூர் ராஜு ஆகியோர் ஒற்றை தலைமைக்கு ஆதரவாக குரல் கொடுத்து இருந்தனர். இந்த நிலையில்தான் நேற்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வத்திற்கு சொந்தமான பண்ணை வீட்டில் அந்த பரபரப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டமே ஓ பன்னீர்செல்வத்தின் தலைமையில்தான் நடத்தப்பட்டது. அதிமுக தேனி மாவட்ட செயலாளர் சையது கான் தலைமையில் இந்த கூட்டத்தில் நீண்ட நேரம் பேசினார்.

சையது கான்
இதில் பேசிய சையது கான் கூட்டத்தின் தொடக்கத்திலேயே சசிகலாவை கட்சிக்குள் சேர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டார். அதிமுக ஒரு குறிப்பிட்ட ஜாதிக்கான ஜாதி கட்சி போல மாறிவிட்டது. மற்ற ஜாதியினர் யாரும் வாக்கு போடுவது இல்லை. சட்டசபை தேர்தல், லோக்சபா தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நாம் தோல்வி அடைய இது மட்டுமே காரணம். ஒரு குறிப்பிட்ட ஜாதி மட்டும் ஆதிக்கம் செலுத்தும் வழக்கம் அதிமுகவில் இருந்தது இல்லை. அதை மாற்ற வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

மிக நெருக்கம்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சையது கான் ஓ பன்னீர்செல்வத்திற்கு மிகவும் நெருக்கமானவர். இவர் இப்படி பேசுகிறார் என்றால் அது ஓபிஎஸ் ஆதரவு இல்லாமல் வரும் கருத்தாக இருக்காது. இதனால் அப்போதே அந்த செயல் வீரர்கள் கூட்டம் சசிகலாவிற்கு ஆதரவான கூட்டம் போல உருவெடுத்தது. இதையடுத்து ஓபிஎஸ்ஸும் சசிகலாவிற்கு ஆதரவாக பேசி இருக்கிறார். கட்சியில் நிறைய விஷயங்களை மாற்ற வேண்டும். எதுவும் சரியில்லை என்று அவர் கோபமாக பேசியதாக அவருக்கு நெருக்கமான தேனி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தீர்மானம்
சசிகலா, டிடிவி மீண்டும் வந்தால் முக்குலத்தோர் வாக்குகள் அதிமுகவிற்கு வரும். இது தேர்தலில் நாம் வெற்றிபெற உதவியாக இருக்கும் என்று இதில் சையது கான் கூற.. அதற்கு ஓபிஎஸ் ஆதரவாக குரல் கொடுத்ததாகவும் தெரிகிறது. அதோடு சில கொங்கு மண்டல நிர்வாகிகள் பற்றி ஓபிஎஸ் இந்த பண்ணை வீட்டு கூட்டத்தில் கொஞ்சம் ஆக்ரோஷமாக விமர்சனம் வைத்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்தே சசிகலா, டிடிவியை மீண்டும் அதிமுகவில் சேர்க்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எதிர்வினை
இந்த கூட்டத்தில் ஓபிஎஸ் கலந்து கொண்டாலும், அது பெரிய அளவில் வெளியே தெரியாத வகையில் பார்த்துக்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. சையது கான்தான் கூட்டத்தை முன்னின்று நடத்தினார் என்பது போல வெளியே காட்டிக்கொள்ளப்பட்டது. கூட்டம் முடிந்தும் கூட, சசிகலாவை அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்று சையது கான்தான் செய்தியாளர்களிடம் பேசினார். மாறாக ஓபிஎஸ் பேசவில்லை. இந்த கூட்டத்தை தொடர்ந்து சசிகலா, டிடிவி ஆதரவு தீர்மானம் ஓ பன்னீர்செல்வத்திடம் கொடுக்கப்பட்டது.

எதிர்ப்பு
இந்த பேட்டி வந்த பின் இன்று காலையே எதிர்பார்த்தது போலவே புவனகிரி எம்எல்ஏ அருள்மொழித்தேவன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். சசிகலாவிற்கு எதிராக தேனி உட்பட பல்வேறு மாவட்ட அதிமுகவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுவிட்டது. அதை மீறி இப்போது தேனியில் புதிய தீர்மானம் போட கூடாது என்று குறிப்பிட்டார். இவரின் கூற்றை தொடந்து கொங்கு மண்டல நிர்வாகிகள் வரிசையாக தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகளுக்கு எதிராக கருத்து தெரிவிப்பார்கள் என்று கருதப்படுகிறது.

ஆறுக்குட்டி
இப்படி இருக்க அந்த கோவையில் இருந்தே சசிகலாவிற்கு ஆதரவாக குரல் வந்துள்ளது. அதிமுக கோவை முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி அளித்த பேட்டியில், சசிகலா, டிடிவி தினகரன் தலைமையில் அதிமுக ஒன்றுபட வேண்டும், தோற்றதற்கு காரணம் தனித்தனியாக இருந்ததால் தான், கொங்குமண்டலமே கையைவிட்டு போயிடுச்சு என்று குறிப்பிட்டார். கொங்கு மண்டல தோல்வியால் அவர் இப்படி கலக்கத்தோடு பேசியதாக கூறப்படுகிறது.

எதிர்ப்பு
இப்படி திடீரென ஓபிஎஸ் தரப்பு அதிமுகவில் தீர்மானம் நிறைவேற்றும் அளவிற்கு வேகம் காட்டி வருவதை எடப்பாடி பழனிச்சாமி விரும்பவில்லை. எஸ்பி வேலுமணி, தங்கமணி , சி வி சண்முகம் ஆகியோரும் இதை சுத்தமாக விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. தமிழ்நாடு முழுக்க மற்ற மாவட்ட அதிமுகவில் தேனி மாவட்ட அதிமுகவை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று இவர்கள் உத்தரவு பிறப்பிக்க, அழுத்தம் கொடுக்க உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
Recommended Video

இரண்டாக பிளவு?
இதனால் ஓபிஎஸ் தரப்புடன் ஆலோசனை நடத்த முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் அவசர அவசரமாக தேனிக்கு காரில் பறந்து உள்ளார். தற்போது சமாதான பேச்சுக்களை நடத்த முயற்சிகள் நடக்கின்றன. சசிகலா ஆதரவு - எதிர்ப்பு என்று மேல்மட்ட நிர்வாகிகள் முதல் அடிமட்ட நிர்வாகிகள் வரை எல்லோரிடமும் பிளவு ஏற்பட்டுள்ளது. இப்படியே நிலைமை அது அதிமுக இரண்டாக பிரிய வாய்ப்பை ஏற்படுத்திவிடும். சசிகலாவை எடப்பாடி தரப்பு ஏற்காத நிலையில் கட்சி உடைய அது காரணம் ஆகிவிடும். அதனால் இப்போதே சமாதான பணிகளை மேற்கொள்ளும் வகையில் உதயகுமார் தேனி பறந்துள்ளதாக கூறப்படுகிறது.
-
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்?










Click it and Unblock the Notifications