அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் கட்சி மீது பற்றுக் கொண்டவர்.. விரைவில் நலம் பெற பிரார்த்தனை- சசிகலா
சென்னை: அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் விரைவில் உடல்நலம் பெற வேண்டும் என சசிகலா பிரார்த்திப்பதாக தெரிவித்தார்.
அதிமுகவின் அவைத் தலைவராக உள்ள மதுசூதனன் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல்நலம் குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வரும் நிலையில் இன்றைய தினம் சசிகலா அப்பல்லோ சென்று நேரில் விசாரித்தார். அந்த சமயம் மருத்துவமனையின் வளாகத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் இருந்தார்.

எடப்பாடி பழனிச்சாமி
சசிகலா வருவதை அறிந்து எடப்பாடி பழனிச்சாமி மருத்துவர்களிடம் அவசர அவசரமாக பேசிவிட்டு வெளியே வந்தார். பின்னர் சசிகலா உள்ளே சென்று மதுசூதனனின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் கேட்டறிந்தார்.

அப்பல்லோ மருத்துவமனையில் சசிகலா
இதையடுத்து அப்பல்லோ மருத்துவமனையில் சசிகலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் அதிமுக மீது மிகவும் பற்றுக் கொண்டவர் மதுசூதனன். அவர் உடல்நலம் குன்றியதை அறிந்து நேரில் சந்திக்க வந்தேன்.

இறைவன்
அவர் விரைவில் நல்ல உடல்நலம் பெற வேண்டும் என இறைவனை பிரார்த்திப்பதாக சசிகலா தெரிவித்தார். நேற்றைய தினம் ஓபிஎஸ் அப்பல்லோ வந்த நிலையில் இன்றைய தினம் ஒரே நேரத்தில் எடப்பாடியும் சசிகலாவும் மருத்துவமனைக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video

ஜெயலலிதா
மதுசூதனன் எம்ஜிஆர் காலத்திலிருந்தே கட்சியில் இருந்து வருகிறார். ஜெயலலிதா பொதுச் செயலாளராக இருந்த நாள் முதல் மதுசூதனன் அவைத் தலைவராக இருந்து வருகிறார். 2017இல் தர்ம யுத்தத்தின் போது ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்ததை அடுத்து அவர் அப்பதவியிலிருந்து சசிகலாவால் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications