ஓ.பி.எஸ். வாக்குமூலத்தால் உற்சாகத்தில் சசிகலா ஆதரவாளர்கள்! நிம்மதி பெருமூச்சு விடும் உறவுகள்!
சென்னை: ஜெயலலிதா மரண விவகாரத்தில் சசிகலா மீது எந்த தவறும் இல்லை என ஓ.பி.எஸ். அளித்துள்ள வாக்குமூலத்தால் மன்னார்குடி உறவுகள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளன.
கோவில் கோவிலாக சென்று சசிகலா வழிபாடு நடத்தி வரும் சூழலில், தன் மீது சுமத்தப்பட்ட வாழ்நாளின் மிகப்பெரிய குற்றச்சாட்டை தூள் தூளாக உடைத்தெறிந்துள்ளார் சசிகலா.
இதனால் சசிகலா ஆதரவாளர்களும் குடும்ப உறவுகளும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறார்கள்.

ஜெயலலிதா மரணம்
ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் எனவும் அன்று குரல் கொடுத்த ஓ.பன்னீர்செல்வம், இன்று அந்தர்பல்டி அடித்து தன் மீதான 2 நாள் விசாரணையை நிறைவு செய்துள்ளார். இதனிடையே சசிகலா மீது எந்த தவறும் இல்லை என்று ஓ.பி.எஸ். அளித்துள்ள வாக்குமூலத்தால், மன்னார்குடி உறவுகள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளன. சசிகலாவின் வாழ்நாளில் அவர் மீது சுமத்தப்பட்ட மிகப் பெரும் குற்றச்சாட்டாக ஜெயலலிதா மரண விவகாரம் பார்க்கப்பட்டது.

சசிகலா இமேஜ்
சசிகலாவின் இமேஜை கேள்விக்குறியாக்கும் வகையில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் இப்போது பனிக்கட்டிகள் உருகுவது போல் உருகத் தொடங்கியுள்ளன. இதனிடையே சிறையிலிருந்து வெளியே வந்தது முதல் ஆன்மிக சுற்றுப்பயணங்களில் அதிகம் கவனம் செலுத்தி வரும் சசிகலா, அண்மையில் கூட தஞ்சாவூர் சென்றிருந்த போது ஒரே நாளில் 7 கோவில்களில் வழிபாடு நடத்தி மனம் உருகி பிரார்த்தனை செய்தார். சசிகலாவின் அந்த பிரார்த்தனை அவரை கைவிடவில்லை என மகிழ்ச்சி தெரிவிக்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

நிச்சயம் வெல்வார்
ஜெயலலிதா மரணத்துடன் சசிகலாவை தொடர்புப்படுத்தி பேசி அவரது இமேஜை பாதிக்க வைக்க சிலர் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டதாகவும் ஆனால் உண்மையும், நீதியும் வென்றதை போல், விரைவில் கட்சியையும், ஆட்சியையும் சசிகலா பிடிப்பார் என சத்தியம் செய்யாத குறையாக நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் சசியின் தீவிர ஆதரவாளர்கள். இதனால் இனி அதிமுகவில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது எனத் தெரிகிறது.
Recommended Video

எதிரிகளை வீழ்த்த
எதிரிகளை வீழ்த்தும் வகையில் சசிகலா அண்மைக்காலமாக சிறப்பு யாகங்கள் நடத்தி வருவது கவனிக்கத்தக்கது. மேலும், தனது ஜோதிடர்களின் அறிவுரைப்படி இன்னும் பல ஆன்மிகத் தலங்களுக்கு சசிகலா விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது..
-
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications