Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆரம்பமே அதகளம்.. யார் கார்னு பார்த்தீங்களா.. "அம்மா"வை கையில் எடுத்த சசிகலா!

ஜெயலலிதாவின் காரில் சசிகலா வந்துள்ளதாக கூறப்படுகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: சசிகலாவின் என்ட்ரியே அதகளமாக இருக்கிறது.. முதல்நாளிலேயே ஜெயலலிதா பயன்படுத்திய காரில் வந்துள்ளார்.. அதிலும் அந்த காரில் அதிமுக கொடி பறக்க விட்டு கெத்தாக வந்திருக்கிறார்.. இதனால் அதிமுக வட்டாரமே வெலவெலத்து போயுள்ளது.. !

விக்டோரியா ஆஸ்பத்திரியில், 7 நாள் தனிமையில் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் சசிகலாவுக்கு அறிவுறுத்திய நிலையில், சசிகலாவின் டிஸ்சார்ஜ் செய்திகள் 4 நாட்களுக்கு முன்பேயே செய்திகள் வந்த வண்ணம் இருந்தன..

Recommended Video

    சசிகலாவுக்கு பூசணிக்காயில் திருஷ்டி கழித்த தொண்டர்கள்.. பிரம்மாண்ட வரவேற்பு.. அதிர்ச்சியில் அதிமுக!

    அஷ்டமி, நவமி என அடுத்தடுத்து வருவதால், முதல் வாரத்துக்கு முன்பேயே சசிகலா சென்னைக்கு வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது... அதன்படியே இன்று சென்னைக்கு வர இருப்பதாக நேற்று செய்திகள் உறுதியாயின.

     தனி கார்

    தனி கார்

    ஆனால், சசிகலாவை வரவேற்க அமமுகவில் மிகப்பெரிய வரவேற்புக்கு ஒரு வாரமாகவே தடபுடல் ஏற்பாடுகள் நடந்து வந்தன.. சசிகலாவின் கார் வரும்வழி முழுக்க உற்சாக வரவேற்பை தர வேண்டும் என்றும் முடிவாயின.. அதன்படியே இன்று மதியம் 12 மணிக்கு சசிகலா டிஸ்சார்ஜ் ஆனார். அவரை அழைத்து செல்வதற்காக டிடிவி தினகரன் ஆஸ்பத்திரிக்கு வந்தார்... சசிகலாவுக்கு தனியாக ஒரு கார் தயார் செய்யப்பட்டிருந்தது.

     முழக்கங்கள்

    முழக்கங்கள்

    டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலா காரில் ஏறி அமர்ந்தார்.. அப்போது அவரது ஆதரவாளர்களின் முழக்கம் விண்ணை பிளந்தது. இந்த 10 நாட்களாகவே இப்படித்தான்.. சசிகலா ட்ரீட்மென்ட்டில் இருந்தபோது, ஆஸ்பத்திரிக்கு வெளியே அவரது ஆதரவாளர்கள் பெருமளவில் குவிந்து முழக்கங்களை எழுப்பியபடி இருந்தனர்.

     அதிமுக

    அதிமுக

    சசிகலாவுக்கு சொந்தமான அந்த காரின் முன் பக்கத்தில் அதிமுக கொடி கட்டப்பட்டிருந்தது.. சசிகலா கார் முன்னாடி செல்ல, அவரை பின்தொடர்ந்து டிடிவி தினகரன் உள்ளிட்டோர் காரில் சென்றனர்.. மேலும் தொண்டர்களும், சசிகலாவின் ஆதரவாளர்கள் அதிகமாக குவிந்துவிட்டதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.. அதிமுக கொடி கட்டப்பட்ட காரில் சசிகலா சென்றது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சசிகலா

    சசிகலா

    இதற்கு காரணம், ரிலீசுக்கு பிறகு அதிமுகவை சசிகலா மீட்டெடுப்பதே முதல் வேலையாக இருக்கும் என்று அமமுக தரப்பில் தொடந்து சொல்லி வரும் நிலையில், காரில் இப்படி அதிமுக கொடி பறப்பது மேலும் எதிர்பார்ப்பை கூட்டி உள்ளது. இதில் இன்னொரு விசேஷமும் உள்ளது.. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது இந்தக் காரைத்தான் பயன்படுத்தி வந்தார். இது ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவன கார் என்று கூறப்படுகிறது.

     சென்ட்டிமென்ட்

    சென்ட்டிமென்ட்

    காரின் எண் டிஎன் 09 3737 என்பதாகும். இந்த கார் எண்ணின் கூட்டுத் தொகை 2 ஆகும். இதிலும் ஒரு முக்கியமான மேட்டர் இருக்கிறது. அதாவது ஜெயலலிதாவுக்கு ஒரு காலத்தில் 9, 5, 7 ஆகிய எண்கள்தான் ராசி எண்ணாக இருந்தது. கூட்டுத் தொகை அது போல வருவதாக பார்த்துக் கொள்வார். அதே போல 2 என்ற எண் சசிகலாவுக்கு ராசியான எண்ணாகும். ஜெயலலிதாவும் இதையே ராசி எண்ணாகவும் தனது கடைசி நாட்களில் வைத்துக் கொண்டார்.

    ஜெயலலிதா

    ஜெயலலிதா

    காரணம் கர்நாடக ஹைகோர்ட்டில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்த தேதி 11 ஆகும். அதேபோல மே 11ம் தேதி நடந்த சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்றதால் 11 அல்லது 2 என்ற எண் அவருக்கு ராசியாக மாறியது.. சசிகலாவும் இதையே தனது ராசி எண்ணாக பின்னாளில் மாற்றிக் கொண்டார். இந்தக் காரைத்தான் இன்று சசிகலாவும் மருத்துவமனையிலிருந்து வந்தபோது பயன்படுத்தியுள்ளார். அன்று அந்தக் காரில் தேசிய கொடி பறந்தது. இன்று அதிமுக கொடி பறந்தது.

     ஜெயக்குமார்

    ஜெயக்குமார்

    ஜெயலலிதாவின் காரை கையில் எடுத்த சசிகலா அடுத்து அதிமுகவையும் கைப்பற்றுவாரா என்ற பரபரப்பான எதிர்பார்ப்புக் கிளம்பியுள்ளது. இந்த சூழலில், அமைச்சர் ஜெயக்குமார் ஒரு டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில், "சசிகலாவுக்கு அதிமுக கொடியை பயன்படுத்த உரிமை இல்லை. அதிமுக கொடி சசிகலா காரில் இருப்பது சட்டப்படி தவறு" என்று கொந்தளித்து உள்ளார். ஆக, தன்னுடைய முதல் பரபரப்பை, காரில் இருந்து துவக்கி அதகளப்படுத்த ஆரம்பித்து விட்டார் சசிகலா..!

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+