“விஜயிடம் அரசியல் தெளிவு இல்லை.. எதையாச்சு பேசிகிட்டு இருக்காரு” - சசிகாந்த் செந்தில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது அரசியல் பரப்புரையை தீவிரப்படுத்தி வருகிறார். ஆனால், விஜயிடம் அரசியல் தெளிவு இல்லை என்றும், எதையாவது பேசிக்கொண்டிருக்கிறார் எனவும் காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் விமர்சித்திருக்கிறார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் சசிகாந்த் செந்தில் பேசியதாவது, "அவருடைய எண்ணத்தை அப்படியே வெளியே வந்து, ஏதாவது சொல்லிட்டு இருக்காரு. ஆனா, இன்னும் கூட விஜய் எந்த கொள்கையில் நிற்கிறார் என்பது தெளிவில்லாமல் இருக்கிறது. தொடக்கத்திலிருந்து விஜயின் பேச்சு அரசியல் மாண்பு கொஞ்சமும் இல்லாததாக இருக்கிறது. அவரிடம் இது ஒரு குறையாகவே நீடிக்கிறது. இந்த போக்கை தமிழக மக்கள் என்றும் ஏற்றுக்கொண்டது கிடையாது" என்று பேசியிருக்கிறார்.

Sasikanth Senthil Vijay

வாக்குத் திருட்டு குறித்து ராகுல் காந்தி மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் மீதும் மத்திய அரசு மீதும் அடுக்கி இருக்கிறார். வாக்குத்திருட்டின் மூலம் தேர்தல்கள் தேர்தல் முடிவுகள் மாற்றி அமைக்கப்படுகின்றன என்று குற்றச்சாட்டு இருக்கிறது. இந்நிலையில் வாக்கு திருட்டுக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தை திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் முன்னெடுத்துள்ளது.

முன்னதாக நாகையில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டிருந்தபோது விஜய் பேசுகையில், "தமிழகத்தில் மீன் ஏற்றுமதியில் இரண்டாவது இடத்தில் இருக்கும் நாகையில், நவீன வசதியுடன் மீன்களை பதப்படுத்தும் தொழிற்சாலைகள் இல்லை. மீனவர்கள் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை வசதிகள் இல்லை. இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து குரல் கொடுப்பது நமது கடமை. நாகையில் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பே, மீனவர்கள் தாக்கப்பட்டவை கண்டித்து பொதுக்கூட்டம் நடத்தினோம். நான் எப்போதும் மக்கள் பக்கம்தான் இருக்கிறேன்.

மீனவர்கள் பிரச்சனையில் திமுக நாடகமாடுகிறது. முதல்வரே நேரடியாகவே நான் கேட்கிறேன், நீங்கள் மிரட்டி பார்க்கிறீர்களா? குடும்பத்தை வைத்து கொள்ளை அடிக்கும் உங்களுக்கே இவ்வளவு இருக்கும் எனில்.. சொந்தமாக உழைத்து சம்பாதிக்கும் எனக்கு எவ்வளவு இருக்கும்? மக்களை சந்திக்க அனுமதி கேட்கும் இடத்தில் அனுமதி வழங்காமல், நெருக்கடியாக உள்ள இடத்தில் அனுமதி தருகிறீர்கள். இந்த அடக்குமுறை அராஜகமெல்லாம் தவறானது. நான் மக்கள் சக்தியின் பிரதிநிதி. 2026 இல் திமுகவுக்கும் தவெகவுக்கும்தான் போட்டி" என்று விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+