ஹசினா சையத் செயல் முற்றிலும் முறையற்றது.. சசிகாந்த் செந்தில் விமர்சனம்
சென்னை: காங்கிரஸ் நிர்வாகியும் திருவள்ளூர் எம்பியுமான சசிகாந்த் செந்தில் வெளியிட்ட பதிவில் கூறுகையில், "முன்னாள் தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் ஹசீனா சையத் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். தனிப்பட்ட அதிருப்தி அல்லது ஏமாற்றத்தின் காரணமாக காங்கிரஸ் தலைமையைக் குறிவைப்பது முற்றிலும் முறையற்றது என்று கூறியுள்ளார்.
மகிளா காங்கிரஸ் கட்சிக்கு எம்.எல்.ஏ சீட் கொடுக்காமல் போனதற்கு காங்கிரஸ் கட்சியில் பணத்திற்கு சீட்டை விற்றதே காரணம் என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார் மகிளா காங்கிரஸ் மாநில தலைவர் ஹசினா சையத். செய்தியாளர்களிடம் இதுபற்றி பேசிய ஹசினா சையத் "மகளிருக்கு 33 சதவீத இடஒதிக்கீடு நாடு தோறும் காங்கிரஸ் கட்சி முழங்கி வருகிறது. ஆனால் தமிழக மகிளா காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட ஒதுக்கிவில்லை. இரண்டு பெண் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது காங்கிரஸ் கட்சி. அதில் சிங்காநல்லுாரில் போட்டியிடும் பெண் வேட்பாளர் கட்சிக்கு எப்போது வந்தார்?

காங்கிரஸ் நிர்வாகியும் திருவள்ளூர் எம்பியுமான சசிகாந்த் செந்தில் வெளியிட்ட பதிவில் கூறுகையில், "முன்னாள் தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் ஹசீனா சையத் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். தனிப்பட்ட அதிருப்தி அல்லது ஏமாற்றத்தின் காரணமாக காங்கிரஸ் தலைமையைக் குறிவைப்பது முற்றிலும் முறையற்றது.
எனக்கு கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை இரண்டு இடங்களில் ஒரு இடத்தில் வாய்ப்பு கொடுக்க சொல்லி, ராகுல் காந்தி சொல்லியபிறகும், செல்வபெருந்தகை சீட் ஒதுக்கவில்லை. கார்கேவிடம் பணம் கொடுத்து இங்குள்ள சீட்களை செல்வபெருந்தகை விற்றிருக்கிறார்" என்று கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.
நிறுவனத்திற்குள் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டு உண்மையல்ல, அது முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றது. ஆரம்பத்திலிருந்தே, காங்கிரஸ் கட்சியில் பெண்கள் முக்கியப் பங்காற்றி வருகின்றனர்; அவர்களின் உரிமைகள், கண்ணியம் மற்றும் பாதுகாப்பு தொடர்ந்து நிலைநாட்டப்பட்டு, அவர்கள் குறிப்பிடத்தக்க பொறுப்புகளை ஏற்று நடத்தி வருகின்றனர். காங்கிரஸ் கட்சிக்குள் தாங்கள் எவ்வளவு சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் உணர்கிறோம் என்பதை எண்ணற்ற முறை என்னிடம் கூறியிருக்கிறார்கள்.
தனிப்பட்ட குறைகளை நிறுவனத்தின் தோல்வியாகச் சித்தரிக்க முடியாது. இத்தகைய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் பொதுமக்களைத் தவறாக வழிநடத்துவது மட்டுமல்லாமல், கட்சியை வலுப்படுத்தத் தொடர்ந்து உழைக்கும் எண்ணற்ற பெண்களின் உண்மையான பங்களிப்பையும் குறைத்து மதிப்பிடுகின்றன.
விமர்சனங்கள் உண்மையை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டுமே தவிர, தனிப்பட்ட அதிருப்தியாலோ அல்லது வாய்ப்புகள் மறுக்கப்பட்டதாலோ தூண்டப்பட்டதாக இருக்கக் கூடாது." இவ்வாறு கூறியுள்ளார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications