இதுதான் நிவர் புயலா.. அதுக்குள் இவ்வளவு கிட்ட வந்துடுச்சா.. சென்னையை நெருங்கியது.. சாட்டிலைட் போட்டோ
சென்னை: நிவர் புயல் தற்போது எங்கே இருக்கிறது என்பது தொடர்பான சாட்டிலைட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
Recommended Video
தமிழகத்தை வரும் 25ம் தேதி நிவர் புயல் தாக்க உள்ளது. காரைக்கால் - மஹாபலிபுரம் இடையே இந்த புயல் கரையை கடக்க அதிக வாய்ப்புள்ளது.
இன்னும் நிவர் புயல் முழுமையாக உருவாகவில்லை. தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருக்கும் இது இன்னும் சில மணி நேரங்களில் புயலாக உருவெடுக்கும்.
|
புயல்
இந்த நிவர் புயல் வங்கக்கடலில் இருந்து வடமேற்கு திசையில் நகர்ந்து சென்னைக்கு அருகே வரும். சென்னைக்கு அருகில் மஹாபலிபுரம் இடையே இந்த புயல் கரையை கடக்கலாம். தற்போது வரை இது கணிக்கப்பட்ட பாதையில்தான் பயணிக்கிறது.
|
வேகம்
இந்த புயல் கரையை கடக்கும் போது 120 கிமீ வேகம் வரை செல்ல வாய்ப்பு உள்ளது. இது அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்கும். நிவர் புயல் தற்போது எங்கே இருக்கிறது என்பது தொடர்பான சாட்டிலைட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. சென்னையில் இருந்து 620 கிமீ தூரத்தில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் உள்ளது.
|
வலிமை பெற்றுள்ளது
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது இன்னும் வலிமை அடைந்துள்ளது சாட்டிலைட் புகைப்படங்கள் படங்கள் மூலம் உறுதியாகி உள்ளது. மேலே இருக்கும் புகைப்படத்தில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காட்டப்பட்டுள்ளது. இதன் மையப்பகுதி தற்போது இலங்கைக்கு அருகில் இருக்கிறது.
|
நகரும்
புகைப்படத்தில் இது கொஞ்சம் சென்னைக்கு அருகில் உள்ளது போல தோன்றினாலும், மாமல்லபுரம் அருகே வர 30 மணி நேரத்திற்கும் அதிகம் ஆகும். இதில் மையம் போல இருக்கும் பகுதிதான் புயலின் கண் பகுதியாக மாற்றம் அடையும். இதுதான் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.
|
எங்கே
இந்த சாட்டிலைட் புகைப்படங்களின் புயலின் பாதையும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புயல் மாமல்லபுரம் வழியே கடந்து சென்று, ஆந்திர பிரதேச வரை சென்று பின் வலிமை இழக்கும். இதனால் தமிழகம் மட்டுமின்றி பாண்டிச்சேரி, ஆந்திர பிரதேசத்திலும் நல்ல மழை பெய்யும்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து












Click it and Unblock the Notifications