Sathankulam case: 9 பேருக்கு தூக்கு தண்டனையா? வாழ்நாள் சிறை தண்டனையானு முடிவெடுக்கனும்! அதிரடியாக பேசிய நீதிபதி!
சென்னை: தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சாத்தான்குளம் ஜெயராஜ் - பென்னிக்ஸ் வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், தண்டனை விபரங்கள் அறிவிப்பதற்கு வழக்கு விசாரணையை ஏப்ரல் - 2 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார் மதுரை மாவட்ட முதலாவது நீதிமன்றம் நீதிபதி முத்துக்குமரன். இந்நிலையில், ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 பேரின் மனநிலை , உடல்நிலை மற்றும் சொத்து, ஊதிய விவரங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய மாநில அரசுகள் தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. இந்நிலையில், 9 பேருக்கும் தூக்கு தண்டனையா ஆயுள் தண்டனையா வாழ்நாள் சிறைத் தண்டனையா என நான் முடிவெடுக்க வேண்டும்.. அதற்காகவே அறிக்கை கேட்கிறேன் என நீதிபதி அதிரடியாகக் கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகனான ஜெயராஜ் - பென்னிக்கிஸ் கடந்த கடந்த 2020- ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்துசெல்லப்பட்ட நிலையில் விசாரணையின் போது காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர்.

இதனையடுத்து தந்தை - மகன் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் தொடரப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9பேரின் மீது சிபிஐ தரப்பில் முதற்கட்டமாக 2027 பக்கம் குற்றப்பத்திரிகையும், இரண்டாம் கட்டமாக கூடுதலாக 400பக்கம் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் ஐந்தரை ஆண்டுகளுக்கு மேலாக இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. வழக்கில் 100க்கும் மேற்பட்ட சாட்சிய விசாரணை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் 9பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் இந்த கொலை வழக்கில் மதுரை மாவட்டம் முதலாவது குழுக்கள் நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பளிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் 23 ஆம் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்
அப்போது நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பு வாசித்த போது," வழக்கின் அனைத்து தரப்பு விசாரணைகளையும் பார்க்கும்போது சம்பந்தப்பட்ட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் என தீர்மானிப்பதாக தெரிவித்ததோடு குற்றம்சாட்டப்பட்ட 9 பேரின் உடல்நிலை, மனநிலை குறித்தான அறிக்கை மற்றும் சம்பள கணக்கு மற்றும் சொத்து விவரங்களையும் சிறைச்சாலையில் உள்ள நன்னடத்தை அதிகாரிகள் 9பேரின் செயல்பாடுகள் குறித்தும் மத்திய அரசு மாநில அரசுகள் மூலமாக அறிக்கையாக வரும் 30 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
அதன்படி நேற்று அறிக்கை தாக்கல் செய்வது தொடர்பாக விசாரணைக்கு வந்து போது மத்திய மாநில அரசுகள் சார்பில் அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என கோரப்பட்டது. அப்போது நீதிபதி அவர்கள் சாத்தான்குளம் வழக்கு மிக முக்கியமான வழக்கு இதில் அறிக்கை தாக்கல் செய்ய தாமதிப்பது ஏன் என அரசு வழக்கறிஞர்களிடம் கேள்வி எழுப்பினார். கால அவகாசம் கோரியதையடுத்து ஏப்ரல் 2 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி தெரிவித்தார்.
ஏப்ரல் 2 ஆம் தேதிக்குள் மத்திய மத்திய மாநில அரசுகள் சார்பில் 9 பேர் குறித்தான அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் தண்டனை விவரங்கள் வெளியாக வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் நீதிமன்ற வளாகத்தில் சில கருத்துகளை நீதிபதி தெரிவித்துள்ளார்.
அதில்," தமிழக அரசு மத்திய அரசு அறிக்கை இதுவரை இருதரப்பிலும் இருந்து பதில் வரவில்லை. சாத்தான் குளம் வழக்கு மிக முக்கியமாகும். கடந்த 23 ம் தேதி கூறியும் ஏன் அறிக்கை தாக்கல் செய்வதில் என்ன பிரச்சனை. எந்த கருத்தாக இருந்தாலும் மனுவாக தாக்கல் செய்யுங்கள். 9 பேருக்கும் தூக்கு தண்டனையா? ஆயுள் தண்டனையா? வாழ்நாள் சிறைத் தண்டனையா? என நான் முடிவெடுக்க வேண்டும் அதற்காகவே அறிக்கை கேட்கிறேன்" என்ற நீதிபதி, பின்னர் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications