ஒரே ஒரு தொகுதிதான்.. திமுகவிற்கு நேரடியாக செக் வைக்கும் பாஜக.. எல். முருகன் நிகழ்த்தும் மேஜிக்!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் ஒரே ஒரு தொகுதியில் திமுகவிற்கு பாஜக நேரடியாக பெரிய போட்டியை கொடுக்கும் என்று சத்தியம் தொலைக்காட்சி சர்வே தெரிவித்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலுக்காக சத்தியம் தொலைக்காட்சி கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுக்க அனைத்து மாவட்டங்களிலும் தொகுதி வாரியாக சத்தியம் தொலைக்காட்சி கருத்து கணிப்புகளை வெளியிட்டுள்ளது.
அதிமுக - திமுக இடையே கடும் போட்டி, பல தொகுதிகளில் இழுபறி நீடிக்கும் என்று சத்தியம் தொலைக்காட்சி கூறியுள்ளது.

கணிப்பு
சத்தியம் தொலைக்காட்சியின் கருத்து கணிப்பின்படி திருப்பூர் மாவட்டத்தில் கடும் போட்டி நிலவும். அதன்படி
திருப்பூர் மாவட்டம்- காங்கேயம்: திமுக 56%; அதிமுக 40% வாக்குகள் கிடைக்கலாம்.
திருப்பூர் தெற்கு- அதிமுக 46%; திமுக 44%; அமமுக 2%; மநீம-2% வாக்குகள் பெறும்.
திருப்பூர் வடக்கு- அதிமுக 51%; சிபிஐ 44%; மநீம-2%; நாம் தமிழர் 2% தேமுதிக 1% வாக்குகள் பெறும்

உடுமலைப்பேட்டை
உடுமலைப்பேட்டை: அதிமுக 45%; திமுக- 30%; மநீம- 12%; நாம் தமிழர் 2% வாக்குகள் கிடைக்கும்.
மடத்துக்குளம்: திமுக 52%; அதிமுக 28%; அமமுக- 20% வாக்குகள் பெறலாம்
அவிநாசி: அதிமுக 47%; திமுக (ஆதி தமிழர் பேரவை அதியமான்) 42%; தேமுதிக- 3%; மநீம- 3%

தாராபுரம்
தாராபுரம்: பாஜக (தமிழக தலைவர் எல். முருகன்)- 48% திமுக 46%; நாம் தமிழர் 3%; அமமுக- 2%
பல்லடம்- அதிமுக 53%; மதிமுக 40%; அமமுக 4%; நாம் தமிழர் 1% வாக்குகள் கிடைக்கும் என்றது சத்தியம் டிவி சர்வே கூறியுள்ளது.

பாஜக
தமிழக சட்டசபை தேர்தலில் தாராபுரம் தொகுதியில் மட்டும்தான் திமுகவிற்கு பாஜக நேரடியாக பெரிய போட்டியை கொடுக்கிறது. இங்கு பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் போட்டியிடுகிறார். இவருக்கே இங்கு வெற்றிவாய்ப்பு அதிகம் உள்ளது என்று சத்தியம் தொலைக்காட்சி சர்வே தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications