• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

முக்கியமான 17 தொகுதிகள்.. ராம்நாடு, திருவள்ளூர், நீலகிரி மாவட்ட நிலை என்ன? பரபர சத்தியம் சர்வே!

|

சென்னை: ராம்நாடு, திருவள்ளூர், நீலகிரி மாவட்டங்களில் அதிமுக, திமுக இடையே போட்டி எப்படி இருக்கும் என்று சத்தியம் தொலைகாட்சி கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலுக்காக சத்தியம் தொலைக்காட்சி கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது. பல தொகுதிகளில் இழுபறி நீடிக்கும் என்று சத்தியம் தொலைக்காட்சி கூறியுள்ளது.

3% வாக்குகளுக்கும் குறைவாக வித்தியாசம் உள்ள தொகுதிகளை இழுபறி நீடிக்கும் தொகுதிகளாக சத்தியம் தொலைக்காட்சி கூறியுள்ளது.

திருவள்ளூர்

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிபூண்டி தொகுதியில் திமுக 46%; பா.ம.க. 42%; மநீம- 7% நாம் தமிழர்-2% ; அமமுக- 2% வாக்குகள் பெறும். பூந்தமல்லி தொகுதியில் திமுக 53%; பா.மக. 33%; வாக்குகள் பெறும். ஆவடி தொகுதியில் அதிமுக 43%; திமுக 40% ; மநீம- 9% வாக்குகள் கிடைக்கும். பொன்னேரி தொகுதியில் அதிமுக 44%; காங்கிரஸ் 40% ; வாக்குகள் கிடைக்கும். திருவள்ளூர் தொகுதியில் அதிமுக 40%; திமுக 36% ; நாம் தமிழர்-9%; மநீம- 6% வாக்குகள் பெறும். திருத்தணி தொகுதியில் திமுக 39%; அதிமுக 36%; தேமுதிக- 8% நாம் தமிழர்- 6% வாக்குகள் பெறும்.

எவ்வளவு

எவ்வளவு

மாதவரம் தொகுதியில் திமுக 42%; அதிமுக 39%; நாம் தமிழர்- 5%; அமமுக- 5%வாக்குகள் பெறும். திருவொற்றியூரில் திமுக- 29%; நாம் தமிழர் (சீமான்)- 28%; அதிமுக- 26%; அமமுக- 6% மநீம-5% வாக்குகள் பெறும். மதுரவாயல் திமுக- 41%; அதிமுக- 36%; அமமுக- 8% நாம் தமிழர்- 6% மநீம-5% வாக்குகள் பெறும். மொத்தமாக திருவள்ளூர் மாவட்டத்தில் திமுக 3, அதிமுக 3 இடங்களில் வெல்லும். 4 இடங்களில் இழுபறி நீடிக்கும்.

நீலகிரி

நீலகிரி

நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் தொகுதியில் திமுக 43%; அதிமுக 32%; அமமுக 8%; நாம் தமிழர் 5% மநீம- 4% வாக்குகள் பெறும். உதகமண்டலம் தொகுதியில் காங்கிரஸ் 43%; பாஜக 35%; மநீம-4%; நாம் தமிழர் 1% வாக்குகள் பெறும். கூடலூர் தொகுதியில் திமுக 45%; அதிமுக 36%; தேமுதிக- 2; நாம் தமிழர் 2% மநீம- 1% வாக்குகள் பெறும். நீலகிரியில் மொத்தமாக உள்ள 3ல் அனைத்திலும் திமுகவே வெல்லும்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம்

பரமக்குடி தொகுதியில் அதிமுக 46%; திமுக- 32%; மநீம-5%; நாம் தமிழர் 4% வாக்குகள் பெறும். முதுகுளத்தூர் தொகுதியில் திமுக 40%; அதிமுக- 35%; அமமுக- 14% நாம் தமிழர் 4%; மநீம-1% வாக்குகள் பெறும். ராமநாதபுரம் தொகுதியில் திமுக 25%; அதிமுக கூட்டணி- 24%; அமமுக- 22% மநீம-5% ; நாம் தமிழர்- 1% வாக்குகள் பெறும்.

மொத்தம்

மொத்தம்

திருவாடனை தொகுதியில் அதிமுக 35%; திமுக- 27%; மநீம- 14%; அமமுக- 9% நாம் தமிழர்- 7% வாக்குகள் பெறும். மொத்தமாக ராமநாதபுரத்தில் 2ல் அதிமுக, 1ல் திமுக , 1ல் இழுபறி நீடிக்கும் என்று சத்தியம் கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. மொத்தமாக இந்த மூன்று மாவட்டங்களில் உள்ள 17 தொகுதிகளில் அதிமுக 5ல், திமுக 7ல் இழுபறி 5ல் நீடிக்கும்.

 
 
 
English summary
Sathiyam Tv opinion poll: DMK will get 7 seats and ADMK will get 5 seat in 3 districts.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X