கிருஷ்ணகிரி மாவட்டத்தின் 6 தொகுதிகளை கைப்பற்றப்போவது யார்? சத்தியம் டிவி கருத்துக்கணிப்பு ரிசல்ட்!
சென்னை: சத்தியம் செய்தி தொலைக்காட்சி, 2026 சட்டசபை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகிறது. தொகுதி வாரியாக கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்பது பற்றிய சர்வே முடிவுகளை வெளியிட்டுள்ளது சத்தியம் தொலைக்காட்சி.
2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாடு நான்கு முனைப் போட்டியை சந்திக்கப் போகிறது. இதுவரை தேர்தல் அரசியலில் கோலோச்சி வந்த திராவிடக் கட்சிகளுக்கு நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் டஃப் ஃபைட் கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் மக்களிடம் நேரடியாக சென்று பல்வேறு நிறுவனங்களும் கருத்துக்கணிப்புகளை நடத்தி வருகின்றன.

அந்தவகையில், சத்தியம் தொலைக்காட்சி, கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டு வருகிறது. மாவட்ட வாரியாக ஒவ்வொரு தொகுதிகளிலும் கட்சிகளின் வெற்றி வாய்ப்புகளை அலசி உள்ளது சத்தியம் டிவி. இதில் பெரும்பாலும் திமுக, அதிமுக அணிகளுக்கே வெற்றி வாய்ப்பு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் இந்த முறை திமுக 2 தொகுதிகளிலும், அதிமுக 2 தொகுதிகளிலும், 2 தொகுதிகளில் இழுபறி ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திமுக தளி, வேப்பனஹள்ளி ஆகிய 2 தொகுதிகளிலும், அதிமுக பர்கூர், ஊத்தங்கரை ஆகிய 2 தொகுதிகளிலும், ஓசூர், கிருஷ்ணகிரி ஆகிய 2 தொகுதிகளில் இழுபறி நிலை ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications