சாட்டை துரைமுருகன் யூடியூப் சேனல்.. நடந்தது என்ன? அறிக்கை வெளியிட்டது ஏன்? போட்டு உடைத்த சீமான்
சென்னை: நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் நடத்தும் யூடியூப் சேனலுக்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என சீமான் அறிக்கை வெளியிட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், சீமான் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக இருப்பவர் சாட்டை துரைமுருகன். சீமான் கட்சியில் அவருக்கு அடுத்தபடியாக தமிழகம் முழுக்க அறியப்பட்ட நபராக இருந்து வரும் சாட்டை துரைமுருகன், தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்த யூடியூப் சேனலில் அரசியல் கட்சிகளை விமர்சித்து அவ்வப்போது சாட்டை துரைமுருகன் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

வீடியோ வெளியிட்ட சாட்டை துரைமுருகன்
இந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பாக சீமானிடம் இருந்து அறிக்கை ஒன்று வெளியானது. அதில், நாதக கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் நடத்தும் யூடியூப் சேனலுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் தொடர்பு இல்லை. அந்த யூடியூப் சேனலின் கருத்துகள், நாம் தமிழர் கட்சியின் கருத்துகள் இல்லை என கூறியிருந்தார். இந்த அறிக்கையை தமது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த சாட்டை துரைமுருகன், தனது எக்ஸ் பயோவில், திடீரென நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் என்பதையும் நீக்கி இருந்தார்.
அத்துடன் முகப்புப் படமாக கட்சி சாராத ஒரு படத்தை பதிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், சாட்டை துரைமுருகன் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுகிறாரா? வேறு கட்சியில் இணைய திட்டமிட்டுள்ளாரா? என இணையத்தில் நெட்டிசன்கள் இடையே விவாதம் அதிகரித்தது. எனினும், சீமானின் அறிக்கை தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்ட சாட்டை துரைமுருகன், நாம் தமிழர் கட்சியில் இருந்து 2 முறை ஏற்கனவே நீக்கப்பட்டேன்.
சீமானின் தம்பியாகவே இருப்பேன்
அப்போது நான் பாடம் கற்றுக் கொண்டேன். இதேபோல 5 ஆண்டுகளுக்கு முன்னரும் என்னுடைய யூடியூப் சேனலுக்கும் கட்சிக்கும் தொடர்பு இல்லை என சீமான் அறிவித்திருந்தார். இப்போதும் அப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நான் வேறு கட்சியில் இணைய போவதாக பரவும் தகவலில் உண்மையில்லை. நாம் தமிழர் கட்சியில் நான் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சீமானின் தம்பியாகவே இருப்பேன்.
சீமானுக்கு ஒருபோதும் நான் துரோகம் செய்யவே மாட்டேன். துரோகம் என்பது என் மரபணுவிலேயே கிடையாது. தமிழ்த் தேசியத்துக்காக தொடர்ந்து நான் பணியாற்றுவேன்" என்று கூறியிருந்தார். எனினும், சீமான் இது தொடர்பாக எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார். இந்த நிலையில்தான் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சீமானிடம் செய்தியாளர்கள் சாட்டை துரைமுருகன் விவகாரம் குறித்து கேட்டனர். இதற்கு பதிலளித்த சீமான் கூறியதாவது:-
சீமான் பதில்
உண்மையிலேயே அது சாட்டை துரைமுருகனின் தனிப்பட்ட யூடியூப் சேனல். எல்லோரும் என்ன நினைக்கிறார்கள் என்றால் அவர் பேசுறார்.. உஙக்ளுக்கு தெரியாமல் எப்படி பேசுவார்.. இப்படி பக்கத்தில் நிற்கிறார்.. அவர் ஒரு கருத்தை பேசுகிறார். அது கட்சியின் கருத்தாக பார்க்கப்படுகிறது. அதை தெளிவுபடுத்தவே அப்படி ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது.
உங்களுக்கு தெரியாமலா பேசுகிறார்.. நீங்கள் சொல்லாமலா பேசுகிறார் என்று கேட்டால்.. உண்மையிலேயே அது எனக்கு தெரியாது. அவர் ஒரு கருத்தை வைத்து இருக்கிறார். அந்த கருத்தை வலையொளியில் பதிவிடுகிறார். இதை தெளிவுபடுத்த வேண்டும் என்பதற்காகவே அறிக்கை கொடுக்க வேண்டியது ஆகியுள்ளது. இவ்வாறு சீமான் கூறினார்.
-
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்!












Click it and Unblock the Notifications