சென்னையே மிரள போகுது.. பெருங்குடியை புரட்டி போட போகும் பிரம்மாண்ட திட்டம்.. இது மட்டும் வந்தால் செம!
சென்னை: சென்னை பெருங்குடியில் புதிய ஐடி பார்க் ஒன்று அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை உட்பட 10 நகரங்களில் ஐடி பார்க் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு சமீபத்தில் தெரிவித்தது. இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. சமீபத்தில் கூட சேலம், தூத்துக்குடி மற்றும் தஞ்சாவூரில் என்று சமீபத்தில் மூன்று டைடல் பார்க் அமைக்க முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

மதுரை உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள ஐடி பூங்காக்களில் புதிய நிறுவனங்கள் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் ஓசூர், கோவை, சென்னை உள்ளிட்ட 10 இடங்களில் ஐடி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தகவல் தொழில்நுட்பத் துறையானது தாமதமின்றி செயல்படுத்தப்படும், என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தஞ்சாவூர் பூங்கா; சமீபத்தில்தான் தஞ்சையில் , 92.50 கோடி செலவில் அமைக்கப்படவுள்ள மினி டைடல் பூங்காவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
இந்த நிலையில் தஞ்சாவூரில் டைடல் பார்க் அமைப்பதற்கான பணிகள் தொடங்கி உள்ளன தற்போது நிலையில் போர்வெல் பணிகள் முடிந்து தரைத்தளம் முடிந்து 1 தளம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் பிளான்படி பணிகள் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. ஹை ரைஸ் : இதற்காக இந்த மூன்று மாவட்டங்களில் பல்வேறு விதிகள் மாற்றப்பட உள்ளன. ஐடி பார்க்க தொடங்க வசதியாக மின்சார சலுகைகள் , பல மாடி கட்டிடம்கட்ட வசதியாக எப்எஸ்ஐ சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட உள்ளன. தஞ்சையிலும் இந்த விதிகள் மாற்றப்பட்டு உள்ளன.
சென்னை புதிய பூங்கா: இந்த நிலையில் சென்னை பெருங்குடியில் புதிய ஐடி பார்க் ஒன்று அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. சென்னையில் ஏற்கனவே ஐடி பூங்காக்கள் உள்ள நிலையில் புதிய ஐடி பார்க் ஒன்று அமைக்கப்பட உள்ளது.
அதன்படி பெருங்குடி சுங்கச்சாவடி அருகே பிரமாண்ட தகவல் தொழில்நுட்ப பூங்கா கட்டப்பட உள்ளது. இது அமைக்க முன்வந்துள்ள சத்வா குழுமம் தனது திட்டத்தை சமீபத்தில் திருத்தியுள்ளது. தற்போது 21 தளங்கள் கொண்ட 4 கோபுரங்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 2 டவருக்கு பதில் 4 டவர் அமைக்கப்படும். அதன் பரப்பளவு முன்பு 3.81 லட்சம் சதுர மீட்டரில் இருந்து 5.24 லட்சம் சதுர மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
திருச்சி பூங்கா: இந்த நிலையில் திருச்சி மாநகராட்சி சார்பில் திருச்சி பஞ்சப்பூரில் டைடல் பூங்கா அமைக்க 14.1 ஏக்கர் நிலம் ஒதுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (டிட்கோ) மற்றும் தமிழ்நாடு எலக்ட்ரானிக் கார்ப்பரேஷன் ஆஃப் தமிழ்நாடு (ELCOT) ஆகியவற்றின் கூட்டு நிறுவனமான டைடல் பார்க் லிமிடெட் நிறுவனத்திடம் ஐடி மற்றும் ஐடி அலுவலகம் கட்டுவதற்காக திருச்சி மாநகராட்சி பஞ்சப்பூரில் 8.9 ஏக்கர் நிலத்தை இறுதி செய்துள்ளது.
இந்த நிலையில்தான் முந்தைய ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு, பெரிய அலுவலக இடத்துக்கு புதிதாக தற்போது இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சில், டைடல் பூங்காவிடம் நிலத்தை ஒப்படைப்பதற்கு முன் அதன் மதிப்பை மதிப்பீடு செய்ய தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
திருச்சியில் இத்திட்டத்திற்காக 2023-24 பட்ஜெட்டில் மாநில தொழில் துறையும் ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. பல இட ஆய்வுகளுக்குப் பிறகு, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு, பஞ்சப்பூர் வருவாய் கிராமத்தில் மாநகராட்சியின் 8.9 ஏக்கர் நிலம் திட்டத்திற்கு சாத்தியமானது என்று தெரிவித்தது. இது தற்போது 14.1 ஏக்கராக மாற்றப்பட்டு உள்ளது.
இங்கே கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இன்றுதான் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த கேப்பிட்டாலாண்ட்(Capitaland) குழுமம் 50,000 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னை பல்லாவரம் ரேடியல் சாலையில் அமைத்துள்ள சர்வதேச தொழில்நுட்ப பூங்காவை (International Tech Park) அமைத்துள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த பூங்காவை இன்று திறந்து வைத்தார். ஆட்டோமொபைல் துறையில் டாப்பில் இருக்கும் தமிழ்நாடு தற்போது ஐடி துறையிலும் பாய்ச்சலை நிகழ்த்த தொடங்கி உள்ளது.
-
HCL: 200 ஊழியர்கள் திடீர் பணிநீக்கம்.. கையைவிட்டு போகும் 2வது அமெரிக்க டீல்.. அதிர்ச்சியில் ஐடி துறை -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications