பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது?
சென்னை: உலகமே உற்று நோக்கும் ஒரு செய்தி இப்போது ஹாட் டாப்பிக். உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி நிறுவனமான சவுதி அராம்கோ (Saudi Aramco), ஆசிய நாடுகளுக்கான கச்சா எண்ணெய் விநியோகத்தை அதிரடியாகக் குறைத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழலில், இந்தத் தகவல் ஆசியப் பொருளாதாரத்தில் ஒரு மினி நிலநடுக்கத்தையே ஏற்படுத்தியுள்ளது.

என்ன நடக்கிறது நிஜத்தில்?
கடந்த சில வாரங்களாகவே ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) நிலவி வரும் போர் பதற்றத்தால் கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளது. ஈரானுக்கும் இஸ்ரேல் - அமெரிக்க கூட்டணிக்கும் இடையே நடக்கும் இந்த 'ஈகோ' யுத்தத்தில், பலியாகப்போவது என்னவோ சாமானிய மக்களின் பாக்கெட்டுகள் தான் போலிருக்கிறது. ஹார்முஸ் பாதை அடைக்கப்பட்டுள்ளதால், சவுதி அரேபியா தனது கிழக்கு-மேற்கு பைப்லைன் வழியாக செங்கடல் துறைமுகமான 'யான்பு' (Yanbu) மூலம் மட்டுமே எண்ணெயை அனுப்ப வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
ஆனால், இந்தப் பைப்லைனில் ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே எண்ணெயை அனுப்ப முடியும் என்பதால், ஆசிய நாடுகளுக்குத் தரும் பங்கீட்டை (Allocations) அராம்கோ குறைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆசியாவிற்கு ஏன் இந்த அடி?
லிமிட்டெட் சப்ளை: வழக்கமாக ஹார்முஸ் வழியாகச் செல்லும் பிரம்மாண்ட கப்பல்கள் இப்போது முடங்கிக் கிடக்கின்றன. மாற்றுப் பாதையான யான்பு துறைமுகத்தின் கொள்ளளவு மிகக் குறைவு. இப்படிப்பட்ட நிலையில்தான் உலகமே உற்று நோக்கும் ஒரு செய்தி இப்போது ஹாட் டாப்பிக். உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி நிறுவனமான சவுதி அராம்கோ (Saudi Aramco), ஆசிய நாடுகளுக்கான கச்சா எண்ணெய் விநியோகத்தை அதிரடியாகக் குறைத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிரேடு சிக்கல்: ஆசிய சுத்திகரிப்பு நிலையங்களுக்குத் தேவையான பல தரப்பட்ட கச்சா எண்ணெய்களை வழங்க முடியாமல், தற்போது 'அரப் லைட்' (Arab Light) ரகத்தை மட்டுமே அராம்கோ வழங்கி வருவதாகத் தெரிகிறது. இது சீனா, இந்தியா போன்ற நாடுகளின் சுத்திகரிப்பு வேகத்தைப் பாதிக்கும்.
விலை ஏற்றம்: சப்ளை குறைந்தால் விலை ஏறும் என்பது சந்தை விதி. இதன் எதிரொலியாக பெட்ரோல், டீசல் விலை விண்ணைத் தொடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அராம்கோவின் 'மாஸ்டர் பிளான்'?
அராம்கோ சி.இ.ஓ அமீன் நாசர் (Amin Nasser), "உலக எண்ணெய் சந்தையில் ஒரு பேரிடர் உருவாக வாய்ப்புள்ளது" என ஏற்கெனவே எச்சரித்திருந்தார். தற்போது தனது கவனத்தை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகளுக்குத் திருப்பியுள்ளாரா அல்லது வெறும் போக்குவரத்து சிக்கல் தானா என்ற கேள்வி ஒருபுறம் இருக்க, ஆசிய ரிஃபைனரிகள் (Refineries) இப்போது மாற்றுத் திட்டங்களைத் தேடி அலையத் தொடங்கிவிட்டன.
இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?
இந்தியாவைப் பொறுத்தவரை, நமது கச்சா எண்ணெய் தேவையில் மூன்றில் ஒரு பங்கு மத்திய கிழக்கு நாடுகளையே சார்ந்துள்ளது. அராம்கோவின் இந்த விநியோகக் குறைப்பு நீண்ட காலத்திற்குத் தொடர்ந்தால், இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடும் விலை உயர்வும் தவிர்க்க முடியாததாகிவிடும். மத்திய அரசு ரஷ்யா அல்லது ஆப்பிரிக்க நாடுகளிடமிருந்து கூடுதலாக எண்ணெய் வாங்க முயற்சிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
போர் முழக்கங்களுக்கு இடையே எண்ணெய் அரசியல் விளையாடத் தொடங்கிவிட்டது. இது வெறும் டிரெய்லர் தான், மெயின் பிக்சரில் விலைவாசி உயர்வு என்னென்ன அதிரடிகளைச் செய்யப்போகிறதோ?
-
ஈரானை நம்புவது ஆபத்து.. டிரம்ப் டீமிற்குள்ளேயே வந்த எதிர்ப்பு.. "அவரே" சொல்லிட்டாராம்! பதற்றம் -
இனி ஹார்முஸ் முழுக்க ஈரானுக்கு தான்.. டிரம்பே சொல்லிட்டாராம்.. குத்தாட்டம் போடும் ஈரான் மக்கள்.. ஏன்? -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
போர் முடிந்தது.. சுவிட்ச் போட்டது போல் பெட்ரோல் விலை நாளைக்கே குறையுமா..? வாய்ப்பில்ல ராஜா, ஏன்? -
$300 பில்லியன் கொடுக்க முடியாது.. டிரம்ப் திட்டவட்டம்! ஈரான் முடிவு என்ன? அமைதி ஒப்பந்தம் ஏற்படுமா? -
லீக்கான அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம்.. அட இதெல்லாம் இருக்கா.. ஈரானுக்கு இனி ராஜவாழ்க்கை! -
ராஜா மாதிரி மீண்டும் தலையெடுக்கும் ஈரான்.. ஹார்மூஸ் வழியாக 3 ஈரானிய கப்பல் 'அவுட்'! -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
ஈரானுடன் ராசியான டிரம்ப்.. ஏன் இந்த திடீர் மனமாற்றம்..? அமெரிக்காவில் வெடித்த பூகம்பம்! இதுதான் உண்மை! -
இஸ்ரேல் தேரை இழுத்து தெருவில் விட்டது.. லெபனான் மீது 84 முறை தாக்குதல்.. ஈரான் உச்சக்கட்ட கோபம்! -
பயிர் கடன் ரூ.75000 தள்ளுபடி விடுங்க! இப்படியொரு விஷயம் நடந்திருக்கு.. மொத்த விவசாய துறையும் ஹேப்பி! -
தங்கம் விலை 3 நாளில் 300 டாலர் உயர்வு.. அய்யய்யோ..! ஷாக் கொடுத்த Gold Price.. இனி தினமும் அதிரடி தான்!












Click it and Unblock the Notifications