சுஜித்.. வல்லுநர் குழுக்கள் உள்ளது.. தீவிரமாக செயல்படுகிறோம்.. பிரதமரிடம் விளக்கிய முதல்வர்!

சுஜித்தை மீட்கும் பணியில் பல்வேறு வல்லுநர்கள் குழு ஈடுப்பட்டு இருப்பதாக தமிழக முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடியிடம் விளக்கி இருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சுஜித்தை மீட்கும் பணியில் பல்வேறு வல்லுநர்கள் குழு ஈடுப்பட்டு இருப்பதாக தமிழக முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடியிடம் விளக்கி இருக்கிறார்.

இரண்டு வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் சிக்கியது நாடு முழுக்க பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டி, சேர்ந்த சுஜித் என்ற சிறுவன் கடந்த வெள்ளிக்கிழமை ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்துவிட்டார்.

Save Sujith: TN Chief Minister Explains the rescue operation to PM Modi

இவரை மீட்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. சுஜித் மீட்பு பணிகள் தொடர்பாக பிரதமர் மோடி இன்று தமிழக முதல்வரிடம் தொலைபேசி மூலம் கேட்டறிந்தார்.

இந்த நிலையில் சுஜித்தை மீட்க நடக்கும் பணிகள் குறித்து முதல்வர் பழனிசாமி டிவிட் செய்துள்ளார். அதில்,பிரதமர் மோடியிடம் மீட்பு பணிகள் குறித்து விளக்கினேன். மூன்று அமைச்சர்கள் குழு மீட்பு பணியை மேற்பார்வையிடுகிறது .தேசிய, மாநில பேரிடர் மேலாண்மை படை, தீயணைப்பு படை, பல்வேறு மீட்பு படைகள் களமிறங்கி பணியாற்றி வருகிறது.

தற்போது உயர் ரக எந்திரங்கள் கொண்டு டிரில்லிங் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக புதிய உபகரணங்கள் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. என்எல்சி, ஓஎன்ஜிசி, எல் அன்ட் டி, மற்றும் திருச்சி என்ஐடியை சேர்ந்த வல்லுநர்கள் ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள். மீட்பு பணிகள் தொடர்பாக மேலும் ஆலோசனைகளை பெற்று செயல்பட்டு வருகிறோம், என்று முதல்வர் பழனிசாமி டிவிட் செய்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+