நீங்க பணத்தை சேமிக்கணுமா.. வங்கி கணக்கை தொடங்கணுமா.. ஆன்லைன் பேங்க் அக்கவுண்ட் ஓபன் எப்படி தெரியுமா?
சென்னை: பாதுகாப்பான இடத்தில் தொடர்ந்து பணத்தை சேமிக்க விரும்பினால், வருமானத்தை சேமிக்க விரும்பினால், இதற்கு வங்கிக்கணக்கு மிக அவசியமாகும்.. இதனால் ஏற்படும் பலன்கள் என்னென்ன தெரியுமா?
பொதுமக்களின் வசதிக்காக மத்திய அரசு பல்வேறு வசதிகளை செய்து தருகிறது.. அதில் ஒன்றுதான் சிறு சேமிப்பு திட்டங்களாகும்.
சிறுசேமிப்புகள்: இந்த சிறுசேமிப்பு திட்டங்கள் பாதுகாப்பானது.. ஓரளவு அதிக வட்டி அளிக்ககூடியதுமாகும்.. தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள் உள்ளன.. அதேபோல சில வங்கிகளும் நிரந்தர வைப்புக் கணக்குகளுக்கு கணிசமான வட்டியை அளிக்கின்றன.
அரசு அங்கீகாரம் உள்ளதால் சேமிப்பும் பாதுகாப்பானவை.. அதுமட்டுமல்ல, இதில் வட்டி குறைந்துவிடுமோ? அல்லது முதலீடு முழுவதுமாக போய்விடுமோ? என்றெல்லாம் பயம் தேவையில்லை..
காரணம், சில சேமிப்புத் திட்டங்களுக்கு அளிக்கப்படும் வட்டித் தொகை வழக்கமான வட்டியை விட அதிகமாகவே இருக்கின்றன.. சிலவற்றுக்கு வரிச்சலுகையும் இருக்கின்றன.. வட்டியும் உரிய நேரத்தில் கிடைத்துவிடுகின்றன. இந்த சிறு சேமிப்பு திட்டங்களில், எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.

ஆர்வம்: அதனால்தான், மற்ற திட்டங்களை காட்டிலும், சிறு சேமிப்பு திட்டங்கள் அதிக வட்டி விகிதங்கள் மற்றும் கடன் வசதியை வழங்குவதால் பெரும்பாலான மக்கள் இந்த திட்டங்களில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்... அதுமட்டுமல்ல, இன்றைய காலகட்டத்தில், எல்லாருமே தனிப்பட்ட முறையில் வங்கிக் கணக்கு வைத்திருப்பதும் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும்.
முன்பெல்லாம் வங்கிக்கிளைக்கு சென்றுதான் சேமிப்பு கணக்கை தொடங்க வேண்டும்... ஆனால் இப்போதெல்லாம் அப்படியில்லை.. ஆன்லைன் மூலமாகவே சேமிப்புக் கணக்கு தொடங்கலாம். ஆன்லைனிலையே அக்கவுண்ட் ஓபன் செய்து கொள்ளலாம்..
எப்படி தெரியுமா? நீங்கள் எந்த வங்கியில் கணக்கு தொடங்க விருப்பப்படுகிறீர்களோ, அந்த வங்கியின் வெப்சைட்டிற்கு செல்ல வேண்டும்.. அதில், சேமிப்பு கணக்கை திறக்க ஒரு "விருப்பம்" தரப்பட்டிருக்கும்.. அதை தேர்ந்தெடுத்து கொள்ளவும், பிறகு உங்களின் தனிப்பட்ட விவரங்கள் அதாவது, ஆதார், பான் கார்டு, KYC ஆவணங்கள் அனைத்தையும் சமர்ப்பிக்க வேண்டும்..
பின்னர், வங்கிக்கு ஏற்ப குறைந்தபட்ச இருப்பு தொகையையும் டெபாசிட் செய்துவிட வேண்டும.. இதற்கு பிறகு, உங்களுக்கான அக்கவுண்ட் நம்பர், ஆன்லைனிலேயே ஒதுக்கப்பட்டுவிடும்.
இந்த வங்கிக்கணக்கை வைத்திருப்பதில் ஏகப்பட்ட பயன்கள் உள்ளன.. முக்கியமாக, பாஸ்புக், செக்புக் போன்றவையும் உங்களுக்கு கிடைத்துவிடும் என்பதால், சேமித்த பணத்தை எப்போது வேண்டுமானாலும் எடுக்கலாம் அல்லது செலுத்தலாம்.. இப்படி எடுக்கும்போதோ அல்லது பணம் செலுத்தும்போதோ, அதற்கான ஆட்டோ டெபிட் மற்றும் ஆட்டோ கிரெடிட் வசதிகளும் கிடைத்துவிடும்.
சேமிப்பு கணக்கு: இதைத்தவிர, சேமிப்பு வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஏடிஎம் கார்டு, டெபிட் கார்டுகளும் வங்கிகள் மூலம் வழங்கப்படுகின்றன.. வழங்குகின்றன.. மேலும், உங்களுடைய சேமிப்பு கணக்கிலிருந்து பில் செலுத்த முடியும்... எல்லாவற்றுக்கும் மேலாக, வங்கிகள் தங்கள் கஸ்டமர்களுக்கு கஸ்டமர்களுக்கு எஸ்எம்எஸ் மற்றும் மெயில் மூலம் பரிவர்த்தனை எச்சரிக்கைகளை அனுப்புகின்றன.. அடிக்கடி அலர்ட்டுகளையும் தந்து வருகின்றன.
பொதுவாக வங்கி கணக்கை திறக்க தேவையான ஆவணங்கள் இதுதான்:
- பான் கார்டு
- ஆதார் அட்டை
- வாக்காளர் அடையாள அட்டை
- கடவுச்சீட்டு
- ஓட்டுனர் உரிமம்
- பணியாளர் ஐடி
- மத்திய அல்லது மாநில அரசு வழங்கிய புகைப்பட அடையாளச் சான்றுகள்
- NREGA வேலை அட்டை
முகவரி சான்று:
- வாக்காளர் அடையாள அட்டை
- பயன்பாட்டு பில் (மின்சாரம், எரிவாயு, நீர், தொலைபேசி)
- கடவுச்சீட்டு
- ஓட்டுனர் உரிமம்
- சமீபத்திய வங்கி கணக்கு அறிக்கை
- வங்கி பாஸ்புக்
- ரேஷன் கார்டு
- ஆதார் அட்டை
முகவரி சரிபார்ப்பிற்காக அரசிதழ் அதிகாரி அல்லது அங்கீகரிக்கப்பட்ட பொது அதிகாரத்தால் சான்றளிக்கப்பட்ட (முத்திரையிடப்பட்ட/கையொப்பமிடப்பட்ட/அங்கீகரிக்கப்பட்ட) கடிதம்
வங்கிக் கணக்குச் சான்றினைச் சமர்ப்பிக்கும் போது, அடையாளம் மற்றும் முகவரிச் சான்றிற்காக மேலே உள்ள அத்தியாவசிய ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை மட்டும் சமர்ப்பிக்க வேண்டும்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்!












Click it and Unblock the Notifications