சவுக்கு சங்கர் ஜாமினில் விடுதலை! சிறைவாசலில் உற்சாக வரவேற்பு கொடுத்த நண்பர்கள்!
சென்னை: பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டதை அடுத்து கடலூர் சிறைவாசலில் அவரது நண்பர்கள் உற்சாக வரவேற்பு அளித்து அழைத்துச் சென்றனர்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு காரணமாக பத்திரிகையாளர் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அவரது சிறைத் தண்டனையை அண்மையில் நிறுத்தி வைத்தது உச்சநீதிமன்றம். இதையடுத்து அவர் விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் பதியப்பட்ட 4 வழக்குகளின் கீழ் போலீஸார் கைது செய்தனர்.
இது சவுக்கு சங்கரின் ஆதரவாளர்கள் மற்றும் நண்பர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே சென்னை உயர்நீதிமன்றம் சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. வழக்கு குறித்த விவரங்களை பொதுவெளியில் எங்கும் பேசக்கூடாது என அறிவுறுத்தியது.
இதனிடையே கடலூர் சிறையிலிருந்து சவுக்கு சங்கர் இன்று காலை ஜாமினில் விடுதலை செய்யப்பட்ட நிலையில் சிறைவாசலுக்கே சென்று அவரது நண்பர்கள் பொன்னாடை அணிவித்து ஆரத்தழுவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சமூக வலைதளங்களில் பலரும் சவுக்கு சங்கரின் விடுதலையை வரவேற்று கருத்து பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications