ஆணவத்தின் உச்சம்.. மரிய வில்சனை அமைச்சரவையில் நீக்க வேண்டும்.. சவுக்கு சங்கர்
சென்னை: தவெக ஆட்சியமைத்து 3 மாதங்கள் நிறைவடைந்துவிட்டது. சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் சூடுபிடித்துள்ளது. பட்ஜெட் பற்றிய கருத்துகளை கடந்து தவெக, திமுக இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது. நிதியமைச்சர் மரிய வில்சன், கடையநல்லூர் எம்எல்ஏ ராஜேந்திரன் இடையே தமிழ் உச்சரிப்பது தொடர்பாக விவாதம் நடந்தது. அப்போது மரிய வில்சன் கடும் கோபத்துடன் பேசினார். இந்நிலையில், மரிய வில்சன் ஆணவத்தின் உச்சத்தில் உள்ளார். அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டுமென சவுக்கு சங்கர் கூறியுள்ளார்.
நிதியமைச்சர் மரிய வில்சன் செயல்பாடு குறித்து சவுக்கு சங்கர் வெளியிட்டுள்ள வீடியோவில், "இந்த பிரச்சனையை இதனுடன் விடக்கூடாது. மரிய வில்சனை அமைச்சரவையில் இருந்து தூக்கும் வரை விடக்கூடாது. அவரது ஆணவம் அவ்வளவு கோபத்தை ஏற்படுத்தியது. அந்த எம்எல்ஏ தவறாக கூட பேசவில்லை. அவர் ஆதங்கத்தில் பேசினார். நீங்கள் ஒரு நிதி அமைச்சர் சார். எனக்கு ஆசை சார். தமிழை அழகாய் உச்சரியுங்கள் என கேட்டார். இது மிகவும் இயல்பானது. ஆனால், மரிய வில்சன் ரவுடி போல நடந்து கொண்டார்" என்றார்.

நிதானம் இழக்க கூடாது
அப்போது, "எல்லாரும் மனிதர்கள் தானே. நிதானம் இழப்பது இயல்பு தானே" என்று மாலதி கேட்டார். அதற்கு சவுக்கு சங்கர், "அமைச்சர்கள் நிதானம் இழக்க கூடாது. நிதானம் இழப்பவர்கள் அமைச்சரவையில் இருக்க வேண்டியதில்லை. உங்களை அவமானப்படுத்தும் வகையில் அவர் பேசவில்லை. அப்படி பேசியிருந்தால் கூட, அவர் தவறாக பேசிவிட்டார் அதனால் கோபப்பட்டார் என்று சமாளிக்கலாம். இதில் அப்படி எதுவுமே இல்லை.
எம்எல்ஏ ராஜேந்திரன் மிகவும் பொறுமையாக சொன்னார். சபாநாயகர் பிரபாகர் கூட, இதை லைட்டர் சென்ஸாக எடுத்து கொள்ளுங்கள் என அறிவுறுத்தினார். அப்படியும் கேட்கால் மரிய வில்சன் மைக்கை தட்டி விடுகிறார். இது நிதியமைச்சர் மரிய வில்சனின் இயல்பான குணம். அவர் சராசரியான மனிதர் கிடையாது. வீட்டில் உங்கள் அண்ணனுடன் பிரச்சனை, தகராறு என்றால், அவரை அடிப்பதற்கு கட்டை எடுத்து வீட்டிற்கு அடிக்க செல்வீர்களா.
ஆணவத்தின் உச்சம்
பெரும்பாலும் அவன் மூஞ்சியில் முழிக்க மாட்டேன். அவன் பேச்சே வேண்டாம். செத்தாலும் பார்க்க மாட்டேன் என்று தானே பெரும்பாலானோர் சொல்வார்கள். கட்டை எடுத்து யாரும் அடிக்க செல்ல மாட்டார்கள். செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து ஆற்றின் அடங்கப் பெறின். இது கலைஞர் கருணாநிதியின் உரை. அறிந்து கொள்ள வேண்டியவற்றை அறிந்து, அதற்கேற்ப அடக்கத்துடன் நடந்து கொள்பவரின் பண்பை உணர்ந்து பாராட்டுகள் குவியும். மரிய வில்சன் அறிய வேண்டிய எதையுமே அறியவில்லை. ஆவணத்தை மட்டுமே வளர்த்து கொண்டுள்ளார்" என்றார்.


Click it and Unblock the Notifications
