ஷாக்.. அடிமடியில் கைவைத்த எஸ்பிஐ.. இனி ஏடிஎம்-ல் பணம் எடுத்தால் ஜிஎஸ்டியுடன் கட்டணம்! பறந்த கண்டனம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கி அடிப்படை சேமிப்பு வங்கி கணக்குகளில் (BSBDA) ஒரு மாதத்தில் நான்கு முறைக்கு மேல் ரொக்கமாக பணம் எடுத்தால் ரூபாய் 15 கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி உடன் வசூலிக்கப்படும் என்ற புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது இதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து கண்டனம் குவிந்துள்ளது இந்த நிலையில் ஏழை மக்கள் தங்கள் சொந்த பணத்தை எடுப்பதற்கு கட்டணம் விதிப்பது அப்பட்டமான பகல் கொள்ளை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள மிக முக்கியமான பொதுத்துறை வங்கிகளில் ஒன்று எஸ்பிஐ எனப்படும் பாரத ஸ்டேட் வங்கி. இந்தியா முழுவதும் பறந்து விரிந்து இருக்கும் இதன் கிளைகளில் ஆயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர்.

SBI ATM Cash Withdrawal

மேலும் கோடிக்கணக்கான மக்கள் தங்கள் நடப்பு மற்றும் சேமிப்பு கணக்குகளை இந்த வங்கியில் தான் வைத்திருக்கின்றனர். மேலும் வீட்டுக் கடன், தனிநபர் கடன், கார் கடன் என பல்வேறு கடன் சேவைகளையும் இந்த நிறுவனம் வழங்கி வருகிறது.

எஸ்பிஐ

அதுமட்டுமில்லாமல் ஒரே வங்கியில் இரண்டு வங்கிக் கணக்குகளை பராமரிக்கும் வகையில் பிஎஸ்பிடி எனப்படும் பேசிக் சேவிங்ஸ் பேங்க் டெபாசிட் என்ற சேவையையும் இந்த வங்கி வழங்கி வருகிறது. இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் வாடிக்கையாளர்கள் நான்கு முறை கட்டணமில்லாமல் பணப்பரிமாற்றம் செய்யலாம்.

BSBDA கணக்கு

இந்த நிலையில் நான்கு முறைக்கு மேல் பணப்பரிவினை செய்தால் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 15 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி உடன் சேவை கட்டினமாக வசூலிக்கப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளது. இதனால் ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் எஸ்பிஐ-யின் இந்த திடீர் அறிவிப்புக்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் கடும் கண்டனம் குவிந்து வருகிறது.

மாணிக்கம் தாகூர்

இந்த நிலையில் ஏழை மக்கள் தங்கள் சொந்த பணத்தை எடுப்பதற்கு கட்டணம் விதிப்பது அப்பட்டமான பகல் கொள்ளை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்," காங்கிரஸ் தலைமையிலான UPA அரசு 2005 -ல் 'No-frills' கணக்குகளாக அறிமுகப்படுத்தி, ஆகஸ்ட் 2012-ல் வழிகாட்டுதல்களை மேம்படுத்தி உருவாக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க நிதி கட்டமைப்புதான் 'BSBDA' ஜீரோ பேலன்ஸ் கணக்குகள்.

வங்கி கட்டணம்

ஏழை எளிய சாமானிய மக்கள் நவீன வங்கிச் சேவையைப் பெற காங்கிரஸ் அடித்தளமிட்டது. இந்த BSBDA அதானி போன்ற பெரும் முதலாளிகளுக்கு இருக்காது; நம் நாட்டின் ஏழை மக்கள் பயன்படுத்தும் இந்த BSBDA கணக்கில்தான் மோடி அரசு கைவைக்கிறது. கார்ப்பரேட்டுகளுக்குப் பல லட்சம் கோடிகளைத் தள்ளுபடி செய்யும் பாஜக அரசு, ஏழை மக்கள் பயன்படுத்தும் இந்த BSBDA கணக்கில் 4 முறைக்கு மேல் ரொக்கம் எடுத்தாலே ₹15 + GST கட்டணம் வசூலிக்கிறது.

ரொக்கப் பணம்

மக்கள் பணப் பயன்பாட்டை விட்டுவிட்டதாக ஆட்சியாளர்கள் பகல்கனவு காண்கிறார்களா? கிராமப்புற மக்கள் இன்றும் ரொக்கப் பணத்தையே நம்பியுள்ளனர். பொதுமக்களிடம் புழங்கும் ரொக்கப் பணம் 2024-25ல் 6.5%, 2025-26ல் 12.0%, தற்போது 2026-27ல் 12.9% என மீண்டும் தீவிரமாக உயர்ந்து வருகிறது. உண்மை நிலவரம் இப்படியிருக்க, ஒருபுறம் வரவிருக்கும் UPI மறைமுகக் கட்டணங்கள், மறுபுறம் ஏழை மக்கள் தங்கள் சொந்தப் பணத்தை எடுப்பதற்கே அபராதம் விதிப்பது அப்பட்டமான பகல்கொள்ளை.

மோடி அரசு

ஏழை எளிய மக்களின் உழைப்பை உறிஞ்சும் இந்த கட்டணக் கொள்ளையை மத்திய மோடி அரசும் எஸ்பிஐ நிர்வாகமும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்! மக்கள் பணம் மக்களுக்குத்தான் போய்ச் சேர வேண்டும்; அதில் கட்டணம் என்ற பெயரில் கை வைத்து நீங்கள் அபகரிக்காதீர்கள்" என கூறியுள்ளார்." என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+