எஸ்பிஐ பேங்க் டெபிட் கார்டு தொலைஞ்சிருச்சா? பாரத ஸ்டேட் வங்கி ATM "பின்நம்பருக்கு".. ஈஸி வழி இதுதான்
சென்னை: எஸ்பிஐ எனப்படும் பாரத் ஸ்டேட் வங்கியில், நீங்கள் கணக்கு வைத்திருக்கிறீர்களா? எஸ்பிஐ டெபிட் கார்டு தொலைந்து விட்டதா? ஏடிஎம் கார்டின் பின்நம்பரை எப்படி உருவாக்க வேண்டும் தெரியுமா?
இந்தியாவின் மிகப்பெரிய கடன் வழங்குநராக திகழுவது பாரத ஸ்டேட் வங்கி.. தன்னுடைய ஏராளமான வாடிக்கையாளர்களின் நன்மைக்காகவும், வசதிக்காகவும், எஸ்பிஐ பல்வேறு ஆன்லைன் சேவைகளை வழங்கி வருகிறது.

டெபிட் கார்டு வசதி: அதில் ஒன்றுதான், டெபிட் கார்டு வசதியாகும்.. டெபிட் கார்டு என்பது நம்முடைய வங்கி கணக்குடனேயே நேரடியாக இணைக்கப்பட்டிருக்கும்.. பிறகு, நமக்கு தரும் பின் நம்பர் பயன்படுத்தி பணத்தை எடுக்கலாம்... மோசடியாக பரிவர்த்தனைகளைத் தடுப்பதற்காகவே, இப்படியான டெபிட் கார்டுக்கு பின் நம்பர் தரப்படுகிறது.
இந்த டெபிட் கார்டை கஸ்டமர்கள் ஒருமுறை மட்டுமே செயல்படுத்தினால்போதும், அந்த கார்டு காலாவதியாகும் வரை பயன்படுத்தலாம்... சில நேரங்களில் உங்களது டெபிட் கார்டு தொலைந்து விட்டாலோ அல்லது திருடப்பட்டுவிட்டாலோ, முதலில் அதுகுறித்து உடனடியாக உங்கள் வங்கிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்...
கஸ்டமர்கள்: நீங்கள் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர் என்றால் அவர்களுடைய நெட் பேங்கிங் மற்றும் SMS வசதிகளை கொண்டு, உங்கள் டெபிட் கார்டை "டீஆக்டிவேட்" செய்வார்கள்.. அல்லது பிளாக் செய்துவிடுவார்கள். இதனால் உங்கள் பணத்தை வேறு யாராலும் எடுக்க முடியாது. உங்கள் டெபிட் கார்டினை பிளாக் செய்வதற்கு 1800 112211 அல்லது 1800 425 3800 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும்.. IVRS மூலமாக உங்கள் கார்டை பிளாக் செய்யலம்.
அதேபோல, இந்த டெபிட் கார்டினை ஆக்டிவேட் செய்ய வேண்டுமானால், ATM பின்நம்பரை உருவாக்க உருவாக்க வேண்டும்... ஆனால், சில நேரங்களில் அந்த pin நம்பரை மறந்துவிட நேரிடும்.
வழிமுறைகள்: இதுபோன்ற தொந்தரவு ஏற்பட்டால், தன்னுடைய கஸ்டமர்களுக்கு வங்கி முன்வந்து உதவுகிறது.. டெபிட் கார்டு PIN நம்பர் வசதியை உருவாக்கும் வழிகளையும் தந்துள்ளது. அதன்படி, நீங்கள் SBI டெபிட் கார்டை எடுத்திருந்தால், ஏடிஎம்மிற்கு சென்று, PIN நம்பரை உருவாக்குவதன் மூலம் அதை மீண்டும் செயல்படுத்தலாம். எப்படி தெரியுமா? இதோ சிம்பிள் வழிமுறைகள்:
- ATM-ல் உங்கள் டெபிட் கார்டை செருகி, பிறகு "உருவாக்கம்" என்று ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும்
- 11 இலக்க கணக்கு எண்ணை உள்ளிட்டு, "உறுதிப்படுத்தல்" என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
- பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணை பதிவிட்டு உறுதி செய்து கொள்ள வேண்டும்
- இதையடுத்து, உங்கள் மொபைல் நம்பருக்கு "பச்சை பின்" அனுப்பப்பட்டதாக மெசேஜ் வரும். இதனை "உறுதிப்படுத்து" என்பதை கிளிக் செய்தால் போதும்.. பச்சை பின் உருவாக்கம் வெற்றிகரமாக உள்ளது என்ற மெசஜ் வந்துவிடும். இப்போது உங்கள் செல்போன் நம்பருக்கு பச்சை PIN மற்றும் OTP அனுப்பப்படும்.
- இப்போது, உங்கள் ஏடிஎம் கார்டை ஸ்லாட்டிலிருந்து அகற்றி மறுபடியும் செருக வேண்டும். வங்கி விருப்பம், மொழி, மொபைல் போனில் பெறப்பட்ட OTP என அனைத்தையும் பதிவிட வேண்டும்.
- பின்னர், உங்களுக்கு விருப்பமான 4 இலக்க PIN -ஐ உருவாக்க வண்டும்.. இந்த பின்நம்பரை நீங்கள் பத்திரமாக குறித்து வைத்து கொள்ள வேண்டும். ஏடிஎம் உபயோகிக்கும்போதோ, கார்டு மூலம் பணம் செலுத்தும்போதோ, அல்லது ஆன்லைன் பரிவர்த்தனைகளின்போதோ, இந்த நம்பர் உங்களுக்கு கட்டாயம் தேவைப்படும்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications