SBI பேங்க்கில் அக்கவுண்ட் இருக்கா? எஸ்.பி.ஐ வங்கியில் சேமிப்பு கணக்கு துவங்க முடியுமா? ரொம்ப ஈஸி
சென்னை: எஸ்பிஐ எனப்படும் பாரத் ஸ்டேட் வங்கியில், நீங்கள் கணக்கு வைத்திருக்கிறீர்களா? அல்லது புதிதாக கணக்கு தொடங்க வேண்டுமா? வெரி சிம்பிள்.
நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குநராக திகழ்கிறது எஸ்பிஐ எனப்படும் பாரத ஸ்டேட் வங்கி.. இந்த வங்கி தன்னுடைய கஸ்டமர்களுக்கு ஆன்லைன் வழியாக, எத்தனையோ சேவைகளை அள்ளி தந்து வருகிறது. அந்தவகையில், கணக்கை துவங்குவது முதல் பல்வேறு வசதிகளை செய்து தந்து வருகிறது.
அறிமுகம்: சமீபத்தில்கூட, எஸ்பிஐ வங்கியின் "யோனோ" ஆப் மூலம் உடனடியாக டிஜிட்டல் சேமிப்பு கணக்கு திறப்பதற்கான வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.. அதாவது, வங்கிக்கு செல்லாமலேயே, வங்கி சேவைகளை முழுமையாக பயன்படுத்துவதற்கு இந்த டிஜிட்டல் சேமிப்பு கணக்குகள் உதவுகின்றன.

இதற்கு உங்கள் மொபைலில் யோனோ (Yono) ஆப்பை டவுன்லோட் செய்து பான் கார்டு எண், ஆதார் கார்டு எண் உள்ளிட்ட விவரங்களை தந்தாலே போதும்.. உங்கள் செல்போனுக்கு ஓடிபி (OTP) வந்துவிடும்.. பிறகு, பாஸ்வேர்டை பதிவிட்டு, கூடுதல் விவரங்களையும் நிரப்பினால் போதும். வாடிக்கையாளருக்கான வங்கிக்கணக்கு உடனடியாக செயல்பாட்டுக்கு வந்துவிடும்.
வசதிகள்: அந்த அளவுக்கு எஸ்பிஐ நிறைய வசதிகளை, தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு செய்துதந்துள்ளது.. முன்பெல்லாம், வங்கியில் கணக்கு தொடங்க வேண்டுமானால், நேரில் செல்ல வேண்டியிருக்கும். ஆனால், இப்போது, வீட்டிலிருந்தபடியே, அதுவும் 5 நிமிடத்தில் கணக்கை துவங்கிவிடலாம். அந்தவகையில், எஸ்பிஐயில், வங்கிக்கணக்கை துவங்குவது எப்படி என்று பார்ப்போம்.
- முதலில் எஸ்பிஐ-ன் அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்கு சென்று, "சேமிப்பு வங்கி கணக்கு" என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
- பிறகு, Apply Now என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
- எஸ்பிஐ "சேமிப்பு கணக்கு" விருப்பத்தை தேர்ந்தெடுத்து தேவையான விவரங்களை நிரப்பி, "Submit" என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
- பிறகு, வங்கி கேட்கும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
- ஆவணங்களை சமர்ப்பித்தவுடன், வங்கி சரிபார்ப்பு செயல்முறை தொடங்கப்படும். இறுதியில், 3 முதல் 5 வேலை நாட்களுக்குள் உங்கள் எஸ்பிஐ சேமிப்பு கணக்கு திறக்கப்படும்.
எஸ்பிஐ சேமிப்பு கணக்கிற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன தெரியுமா?
பான் கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம். (இவைகளில் ஏதாவது ஒரு ஆவணம்) கண்டிப்பாக தேவை. அதேபோல, ரேஷன் கார்டு, கரண்ட் பில், போன் பில், டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, கடந்த 2 மாத வங்கி அறிக்கை. (இவைகளில் ஏதேனும் ஒன்று முகவரி சான்று ஆவணமாக தேவை), 10ம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ், பாஸ்போர்ட், பிறப்பு சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை. (இவைகளில் ஏதாவது ஒன்று வயதுச்சான்று ஆவணங்களாக தேவை)
சேமிப்பு கணக்கை தொடங்குவதற்கான தகுதிகள் என்னென்ன தெரியுமா?
-- விண்ணப்பதாரர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்
- சேமிப்பு கணக்கிற்கு விண்ணப்பிக்கும்போது, தனிநபர் குறைந்தபட்சம் 18 வயது முழுமையடைந்தவராக இருக்க வேண்டும்
- விண்ணப்பதாரர் மைனராக அதாவது 18 வயதுக்கு கீழே இருந்தால், அவர்கள் சார்பாக பெற்றோர்/பாதுகாவலர்கள் கணக்கைத் திறக்கலாம்
- விண்ணப்பதாரர்கள் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் அடையாள மற்றும் முகவரி சான்றினை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்
வங்கியின் ஒப்புதலுக்குப் பிறகு, விண்ணப்பதாரர் அவர்/அவள் தேர்ந்தெடுத்த சேமிப்புக் கணக்கின் குறைந்தபட்ச இருப்புத் தேவையை பொறுத்து ஆரம்ப வைப்புத்தொகையை செய்ய வேண்டும்.
டிரான்ஸ்வர்: இந்த வங்கியின் ஆன்லைன் வங்கி சேவைகளை பயன்படுத்தி, வாடிக்கையாளர்கள் இன்னும் பல பலன்களை பெறலாம்.. உதாரணமாக, உங்கள் சேமிப்பு கணக்கு வெளியூரில் இருந்தால், அதையும் ஆன்லைனில் நீங்கள் எளிதாக மாற்றிக்கொள்ளலாம்.
அல்லது வங்கிக் கிளையை ஒரு கிளையிலிருந்து, ஆன்லைன் மூலமாகவே, கணக்குகளையும் மாற்றிக் கொள்ளலாம். மொபைல் எண்: அதேபோல, உங்களது பழைய செல்போன் நம்பருக்கு பதிலாக, புதிய செல்போன் நம்பரை, வங்கிக்கணக்கில் இணைக்க வேண்டுமானால், இதற்கும் ஆன்லைனிலேயே வழிவகை செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications