வங்கி கணக்கு இருக்குதா? எஸ்.பி.ஐ வங்கி கணக்குடன், உங்க மொபைல் நம்பரை ஆன்லைனில் இணைப்பது எப்படி? ஈஸி
சென்னை: எஸ்பிஐ எனப்படும் பாரத் ஸ்டேட் வங்கியில், நீங்கள் கணக்கு வைத்திருக்கிறீர்களா? அந்த கணக்கு வெளியூரில் இருக்கிறதா? அதை எப்படி ஆன்லைனில் மாற்றுவது தெரியுமா? அதனுடன் உங்களது மொபைல் நம்பரை எப்படி இணைப்பது தெரியுமா?
நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குநராக திகழ்கிறது எஸ்பிஐ எனப்படும் பாரத ஸ்டேட் வங்கி.. இந்த வங்கி தன்னுடைய கஸ்டமர்களுக்கு ஆன்லைன் வழியாக, எத்தனையோ சேவைகளை அள்ளி தந்து வருகிறது.

டிரான்ஸ்வர்: இந்த வங்கியின் ஆன்லைன் வங்கி சேவைகளை பயன்படுத்தி, வாடிக்கையாளர்கள் பலன்பெறலாம்.. உதாரணமாக, உங்கள் சேமிப்பு கணக்கு வெளியூரில் இருந்தால், அதையும் ஆன்லைனில் நீங்கள் எளிதாக மாற்றிக்கொள்ளலாம். வங்கிக் கிளையை ஒரு கிளையிலிருந்து, ஆன்லைன் மூலமாக கணக்குகளை மாற்ற இந்த வழிமுறைகளை கையாண்டால் போதும்.
- www.onlinesbi.com என்ற வெப்சைட்டிற்குள் நுழைந்து, "தனிப்பட்ட வங்கி" என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
- இப்போது உங்களது பெயர், பாஸ்வேர்ட் தந்து உள்ளே நுழைந்து, "இ-சர்வீசஸ்" என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
- பிறகு, "சேமிப்புக் கணக்கின் பரிமாற்றம்" என்பதை தேர்ந்தெடுத்தால், கணக்கு எண் மற்றும் கிளை பெயர் உள்ளிட்ட கணக்கு விவரங்கள் ஸ்கிரீனில் தெரியும். இப்போது நீங்கள் மாற்ற விரும்பும் கணக்கை தேர்ந்தெடுத்து, கிளைக்குறியீட்டையும், கிளை பெயரையும் தேர்ந்தெடுக்க வேண்டும்.
- அடுத்து, கிளைக்குறியீடு மற்றும் புதிய கிளைக் குறியீட்டை பயன்படுத்தி கணக்கு பரிமாற்ற விவரங்களை சரிபார்க்க வேண்டும்... இப்போது, பதிவு செய்யப்பட்ட உங்கள் செல்போன் நம்பருக்கு OTP வரும்.
- இறுதியாக, "உறுதிப்படுத்தல்" என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, OTP நம்பரை அதில், பதிவிட்டு, "உறுதிப்படுத்து: என்பதைக் கிளிக் செய்தால் போதும். உங்களது கிளை பரிமாற்ற கோரிக்கை பதிவு செய்யப்பட்டுவிடும்.
மொபைல் எண்: அதேபோல, உங்களது பழைய செல்போன் நம்பருக்கு பதிலாக, புதிய செல்போன் நம்பரை வங்கிக்கணக்கில் எப்படி இணைப்பது? இதற்கும் ஆன்லைனிலேயே வழி உள்ளது.
- www.onlinesbi.com என்ற வெப்சைட்டிற்குள் நுழைந்து, profile பக்கத்திற்கு சென்று, "Personal Details" என்ற லிங்க்கிற்குள் நுழைய வேண்டும்
- பிறகு, "profile password" ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
- 'Change Mobile Number-Domestic only (Through OTP/ATM)' என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.
- இப்போது ஸ்கிரீனில் 'Personal Details-Mobile Number Update' பக்கத்தில் "Create Request" என்பதை தந்து, புதிய செல்போன் நம்பரை பதிவிட வேண்டும்.
- மறுபடியும் புதிய செல்போன் நம்பரை பதிவிட்டு, 'Submit' என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்
- உறுதி செய்வதற்காக, உங்கள் புதிய போன் நம்பர் ஸ்கிரீனில் தெரியும். அதை ஒருமுறை சரிபார்த்துவிட்டு, 'ஓகே' தரவேண்டும்.
- இப்போது, உங்களது புதிய மற்றும் பழைய செல்போன் நம்பருக்கும், OTP வந்துவிடும்.. இதற்குபிறகு உங்களது புதிய நம்பர் வங்கி கணக்கில் அப்டேட் செய்யப்பட்டுவிடும்.












Click it and Unblock the Notifications