எஸ்பிஐ வங்கியில் வேலை.. எக்ஸாம் கிடையாது.. 150 பணியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி?
சென்னை: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில் 150 சிறப்பு அதிகாரி(SO) பிரிவில் வர்த்தக நிதி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங் ஆப் இந்தியா எனப்படும் எஸ்பிஐ வங்கியில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்பு வெளியிடப்பட்டு நிரப்பப்படுகின்றன. கை நிறைய சம்பளம், பணி பாதுகாப்பு போன்றவற்றால் வங்கி வேலைக்கு போட்டி தேர்வர்கள் மத்தியில் பெரும் ஆர்வம் உள்ளது.

பணியிடங்கள்: இந்த நிலையில் தான் எஸ்பிஐ வங்கியில் 150 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. தேர்வு எப்போது, கல்வி தகுதி என்ன? உள்ளிட்ட முழு விவரங்களை இங்கே காணலாம்.
பணி விவரம்: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் சிறப்பு அதிகாரி(SO) பிரிவில் வர்த்தக நிதி அதிகாரி(Trade Finance Officer) பணியிடங்களுக்குதான் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 150 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு டிகிரி முடித்து இருக்க வேண்டும் அல்லது இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் & ஃபைனான்ஸ் (IIBF)-ல் அந்நிய செலவாணி துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட கமர்ஷியல் வங்கிகளில் குறைந்தது இரண்டு ஆண்டுகள் ட்ரேட் பினான்ஸ் பிரிவில் பணியிற்றி இருப்பது அவசியம்.
வயது வரம்பு: 23 வயது முதல் 32- வயதுக்குட்ப்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் எஸ்பிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ.750 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி உள்ளிட்ட பிரிவினருக்கு தேர்வு கட்டணம் கிடையாது.
தேர்வு முறை: விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் அழைக்கப்படுவார்கள். நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்து தேர்வு கிடையாது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் கொல்கத்தா மற்றும் ஐதராபாத்தில் பணி செய்ய பரிந்துரைக்கப்படும்.
தகுதி காண் காலம் 6 மாதங்கள் ஆகும். தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பினை ஒருமுறை நன்கு படித்து தெரிந்து கொள்ளவும். தேர்வு அறிவிப்பினை படிக்க https://sbi.co.in/web/careers/current-openings விண்ணப்பதாரர்கள் இங்கே கிளிக் செய்யவும்.












Click it and Unblock the Notifications