SBI வங்கியில் அக்கவுண்ட் இருக்கா? எஸ்.பி.ஐ வங்கி கணக்குடன் மொபைல் எண் இணைக்கணுமா? ஆன்லைனில் சுலபம்
சென்னை: எஸ்பிஐ எனப்படும் பாரத் ஸ்டேட் வங்கியில், நீங்கள் கணக்கு வைத்திருக்கிறீர்களா? உங்களது பழைய மொபைல் நம்பரை மாற்றி, புதிய செல்போன் நம்பரை எப்படி இணைப்பது தெரியுமா?
நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குநராக திகழும் பாரத ஸ்டேட் வங்கியானது, தன்னுடைய அபரிமிதமான சேவையால், ஏராளமான வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது.. தன்னுடைய கஸ்டமர்களின் வசதிக்காக பல்வேறு ஆன்லைன் சேவைகளையும் எஸ்பிஐ வழங்கி வருகிறது.

எஸ்பிஐ: அந்தவகையில், எஸ்பிஐயில் வங்கி கணக்கு துவங்குவது முதல் வங்கி கணக்கை டிரான்ஸ்வர் செய்து கொள்வதுவரை, ஆன்லைனிலேயே வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.. எனவே, 5 நிமிடத்திலேயே கணக்கை நீங்கள் எஸ்பிஐ-யில் துவங்கலாம்.
உங்கள் சேமிப்பு கணக்கு வெளியூரில் இருந்தால், ஆன்லைனில் மாற்றிக் கொள்ளலாம். ஆன்லைனிலேயே ATM கார்டுகளையும் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.. ஒருவேளை உங்கள் செல்போன் நம்பர் மாறிவிட்டால், அந்த புது நம்பரையும், ஆன்லைனிலேயே வங்கி கணக்கில் மாற்றிவிடலாம்.
வசதிகள்: ஆனால், வங்கிக்கணக்கில் செல்போன் நம்பரை எப்படி இணைக்க வேண்டும் தெரியுமா? ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என 2 முறைகளிலும், உங்கள் வங்கி கணக்குடன் மொபைல் எண்ணை இணைக்கலாம்...
ஆப்லைன் முறையில் மொபைல் எண்ணை பதிவிட வேண்டுமானால், அருகிலிருக்கும் எஸ்பிஐ கிளைக்கு சென்று அல்லது எஸ்பிஐ ஏடிஎம் மூலமாக இதை நீங்கள் எளிதாக செய்து கொள்ளலாம். நேரடியாக வங்கிக்கு சென்றாலும் இதை செய்ய முடியும். ஆனால், ஏடிஎம் மூலம் மொபைல் எண்ணை பதிவு செய்வது எப்படி தெரியுமா? அதற்கு கீழ்க்காணும் எளிய முறைகளை பின்பற்றினாலே போதும்.
- உங்களுக்கு அருகிலிருக்கும் SBI ATM மையத்திற்கு சென்று, Registration என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
- உங்கள் ஏடிஎம் பின் நம்பரை பதிவிட்டு, Mobile number registration என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
- இப்போது திரையில் change mobile number என்ற ஆப்ஷனை தர வேண்டும்
- பிறகு பழைய நம்பரை டைப் செய்து Enter கொடுத்து, புதிய மொபைல் எண்ணை கொடுத்து confirm கொடுக்கவும்
- புதிய மற்றும் பழைய மொபைல் எண்களுக்கு OTP வரும். அத்துடன் மெசேஜ் ஒன்றும் வரும்.
மெசேஜ்: அதில், "Please send OTP and reference number received in SMS from new as well as an existing mobile number in the following format ACTIVATE IOTP VALUE + REF NUMBER TO 567676 within 4 hours." என்று தரப்பட்டிருக்கும்.. எனவே, 4 மணி நேரத்திற்குள் நீங்கள் இதை அனுப்பினால் போதும். உங்கள் புதிய செல்போன் நம்பருக்கு, வங்கி கணக்குடன் அப்டேட் செய்யப்பட்டுவிடும்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications