எஸ்பிஐ தரும் பெண்களுக்கான ஜாக்பாட் திட்டம்.. ரூ.25 கோடி வரை SBI பிசினஸ் லோன்! விண்ணப்பிப்பது எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: எஸ்பிஐ-யின் Stree Shakti Yojana திட்டம் பற்றி தெரியுமா? பெண்கள் தொழில் தொடங்க அல்லது ஏற்கனவே உள்ள தொழிலை விரிவுபடுத்த ரூ.25 கோடி வரை கடன் இதன் மூலம் பெறலாம். ரூ.2 கோடி வரையிலான கடனுக்கு 0.50% வரை வட்டி சலுகை கிடைக்கும்.. இதற்கு பெண்கள் எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? ஆவணங்கள் என்னென்ன தேவை தெரியுமா? இங்கே சுருக்கமாக பார்க்கலாம்

சொந்தமாக ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை பல பெண்களுக்கு இருக்கும்... ஆனால் தொழில் தொடங்க பணம் எங்கே கிடைக்கும், வங்கியில் கடன் வாங்கினால் வட்டி எவ்வளவு, அதை எப்படி திருப்பிச் செலுத்துவது என்ற குழப்பங்களும் எழவே செய்யும்.

SBI Stree Shakti Yojana

இதற்காகவே பெண்களுக்கு உதவும் வகையில் பாரத ஸ்டேட் வங்கி வழங்கும் முக்கியமான கடன் திட்டம்தான் SBI Stree Shakti Yojana. இந்தத் திட்டத்தின் மூலம் தொழில் தொடங்குவதற்கும், ஏற்கனவே நடத்தி வரும் தொழிலை வளர்ப்பதற்கும் நிதி உதவி பெற முடியும்.

யாரெல்லாம் கடன் பெறலாம்

உற்பத்தி, பொருட்கள் விற்பனை, சேவை உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபடும் பெண்கள் இந்தக் கடன் வசதியைப் பயன்படுத்தலாம். உதாரணமாக உணவு தயாரிப்பு, கேட்டரிங், உணவகம், டிபன் சேவை போன்ற தொழில்களை நடத்துபவர்கள் மட்டுமல்லாமல், பியூட்டி பார்லர், சலூன் உள்ளிட்ட தொழில் செய்பவர்களுக்கும் அவர்களது தொழிலின் தேவையைப் பொறுத்து கடன் கிடைக்கலாம்.

ஏற்கனவே தொழில் நடத்தி வருபவர்கள் புதிய இயந்திரம் வாங்குவது, தொழிலை விரிவுபடுத்துவது அல்லது அன்றாட செலவுகளை சமாளிப்பதற்கும் கடனை பயன்படுத்தலாம்.

ரூ.25 கோடி வரை கடன் கிடைக்குமா?

இந்த சூப்பரான திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.25 கோடி வரை கடன் பெறும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இங்கே ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்க வேண்டும்.

எல்லாருக்குமே ரூ.25 கோடி கிடைத்துவிடாது. தொழிலின் அளவு, எதற்காக கடன் கேட்கிறார்கள், தொழில் திட்டம், வருமானம் மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன் ஆகியவற்றை SBI ஆய்வு செய்த பிறகே எவ்வளவு கடன் வழங்குவது என்பதை முடிவு செய்யும்.

இந்த கடனில் ஒரு பகுதி தொழிலின் தினசரி செலவுகளுக்காகவும், மற்றொரு வகை கடன் இயந்திரம் அல்லது நீண்டகால முதலீடுகளுக்காகவும் பயன்படுத்தப்படலாம். இதை வங்கி மொழியில் Working Capital, Term Loan என்று சொல்வார்கள். இதை எளிமையாக சொன்னால், ஒன்று தொழிலை ஓட்டுவதற்கான பணம், இன்னொன்று தொழிலை வளர்ப்பதற்கான முதலீட்டுப் பணம்.

அசத்தல் வட்டி சலுகை

இந்த திட்டத்தின் ஸ்பெஷாலிட்டி என்ன தெரியுமா? அசத்தலான வட்டி சலுகைதான்.. ரூ.2 கோடி வரையிலான கடன்களுக்கு அதிகபட்சமாக 0.50% வரை வட்டி விகிதச் சலுகை கிடைக்கலாம். இதனால் வழக்கமான கடனுடன் ஒப்பிடும்போது வட்டி செலவு ஓரளவு குறைய வாய்ப்பு உள்ளது. ஆனால் இறுதி வட்டி விகிதம் மற்றும் பிற கட்டணங்கள் வங்கியின் அப்போதைய விதிமுறைகளின்படியே இருக்கும்.

பணத்தை எப்போது திருப்பி கட்டணும்?

கடன் வகை மற்றும் தொழிலின் தன்மையை பொறுத்து கால அவகாசம் மாறும். Term Loan வகை கடன்களுக்கு பொதுவாக 7 முதல் 10 ஆண்டுகள் வரை திருப்பிச் செலுத்தும் காலம் இருக்கலாம். அதேநேரம், கடன் பெறும்போது தொழிலின் அளவைப் பொறுத்து 15 முதல் 25% வரை சொந்தப் பணத்தை செலுத்த வேண்டியிருக்கலாம்.

எப்படி விண்ணப்பிப்பது?

SBI வங்கி கிளையை அணுகி இதற்காக விண்ணப்பிக்கலாம். அப்படி விண்ணப்பிக்கும்போது ஆதார், பான் போன்ற அடையாள ஆவணங்கள், முகவரி சான்றிதழ், தொழில் திட்ட அறிக்கை போன்றவை கேட்கப்படலாம். ஏற்கனவே பிசினஸ் செய்பவர்கள் கடந்த 3 ஆண்டுகளின் நிதி விவரங்கள், வருமான வரி ஆவணங்கள், வங்கி கணக்கு விவரங்கள் போன்றவற்றையும் சமர்ப்பிக்க வேண்டியிருக்கலாம்.

முக்கியமாக, இது மானியம் அல்லது இலவச பணம் கிடைக்கும் திட்டம் கிடையாது.. ; வங்கிக் கடன் மட்டுமே.. அதனால் கடன் வாங்குவதற்கு முன்பு தொழிலில் மாதம் எவ்வளவு வருமானம் வரும், செலவு எவ்வளவு, EMI-யை சரியாக கட்ட முடியுமா என்றெல்லாம் கணக்கிட்டு முடிவு செய்வது மிகவும் அவசியம்...!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+