தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல் - அரசு மரியாதையுடன் நல்லடக்கம்
மறைந்த எஸ்பிபியின் உடல் நுங்கம்பாக்கம் வீட்டில் இருந்து தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டிற்கு வாகனத்தில் எடுத்து செல்லப்பட்டது. அங்கு யாருக்கும் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படவில்லை.
சென்னை: மறைந்த எஸ்பிபியின் உடல் நுங்கம்பாக்கம் வீட்டில் இருந்து தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டிற்கு வாகனத்தில் எடுத்து செல்லப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக பண்ணை வீட்டில் அஞ்சலி செலுத்த யாருக்கும் அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த 50 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பின்னணி பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் வெள்ளிக்கிழமை பிற்பகல் காலமானார். அவரது உடல் மாலை நான்கு மணியளவில் நுங்கம்பாக்கம் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டது.

திரை உலக பிரபலங்களும்,அரசியல் கட்சித்தலைவர்களும் எஸ்.பி பாலசுப்ரமணியத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பல்லாயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்தினர். மக்கள் கூட்டம் அதிகரிக்கவே, எஸ்.பி பாலசுப்ரமணியத்தின் உடல் திருவள்ளூர் மாவட்டம் தாமரைபாக்கத்தில் அமைந்துள்ள அவருக்கு சொந்தமான பண்ணை வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் இருந்து தாமரைப்பாக்கத்திற்கு வாகனத்தில் கொண்டு செல்லும் வழியெங்கும் ஏராளமானோர் வாகனத்தை நிறுத்தி செல்போனில் படம் பிடித்தனர். எஸ்.பி.பியின் தீவிர ரசிகர்கள் இரு சக்கர வாகனங்களில் பின் தொடர்ந்து சென்றனர். கொரோனா தொற்று காரணமாக பண்ணை வீட்டில் அஞ்சலி செலுத்த யாருக்கும் அனுமதி இல்லை.

எஸ்.பி பாலசுப்ரமணியத்தின் உடல் பண்ணை வீட்டில் இன்று நல்லடக்கம் செய்யப்படவிருக்கிறது. இதையடுத்து அங்கு நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. காவல்துறையினர் மரியாதையுடன் எஸ்.பி பாலசுப்ரமணியத்தின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

எஸ்பிபி அடக்கம் செய்ய உள்ள தாமரைப்பாக்கம் பண்ணையில் 4 டிஎஸ்பிகள் தலைமையில் 500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 2 கிலோ மீட்டருக்கு முன்னதாகவே வாகன தணிக்கை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக திருவள்ளூர் எஸ்பி அரவிந்தன் தெரிவித்துள்ளார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications