கிறிஸ்தவத்தில் இருந்து மீண்டும் இந்துவாக மாறினால் எஸ்சி சான்று பெற முடியுமா? ஐகோர்ட் முக்கிய உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிறிஸ்த மதத்தில் இருந்து மீண்டும் இந்து மதத்துக்கு மாறியவரை, அந்த சமூகம் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், அவருக்கு எஸ்சி சான்று பெற உரிமையுள்ளது என்று சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது. கிறிஸ்தவ மதத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் இந்து மதத்திற்கு திரும்பிய நிலையில் சாதி சான்று உண்மையானது அல்ல என்று மாவட்ட கண்காணிப்புக்குழு பிறப்பித்த உத்தரவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையை சேர்ந்தவர் ரவிக்குமார். பட்டியலினத்தவர்களுக்கான ரிஷர்வேஷன் கீழ் சுங்கத்துறையில் பணிக்கு சேர்ந்த இவர், சுங்கத்துறையில் உதவி ஆணையரா பணியாற்றி வந்தார். கடந்த மே மாதம் அவர் பணி ஓய்வு பெற இருந்தார். இந்த நிலையில், அவரது சாதி சான்றிதழ் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்கு பின், ரவிக்குமாரும், அவரது குடும்பத்தினரும் நல்ல நிறமாகவும், உயரமாகவும், நல்ல உடற்கட்டுடனும், தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளிலும் சரளமாக பேசுகின்றனர்.

SC certificate if I convert back to Hindu from Christianity Madras Highcourt delivers important verdict

எனவே, அவர்கள் கிறிஸ்தவர். அவரது எஸ்.சி. சாதிச் சான்றிதழ் உண்மை இல்லை என்று மாவட்ட கண்காணிப்புக் குழு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்தும், அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க சுங்கத்துறைக்கு தடை விதிக்கக் கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில், ரவிக்குமார் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி டி. பரதசக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் வாதிடுகையில், ''மனுதாரர் தந்தை 1960-ம் ஆண்டு கிறிஸ்துவ மதத்துக்கு மதம் மாறினார். மனுதாரர் 1966-ம் ஆண்டு பிறந்தார். இந்த நிலையில், 1983 ஆம் ஆண்டு ஆர்ய சமாஜம் மையத்தில் மனுதாரர் தந்தை மீண்டும் இந்து மதத்துக்கு மாறினார். அய்யாறு ஜேம்ஸ் என்ற தனது பெயரை முனுசாமி என்றும் செளந்தரராஜன் என்ற மனுதாரர் பெயரை ரவிக்குமார் என்றும் மாற்றினார்.

அதன்பின்னர்,1986 ஆம் ஆண்டு இந்து ஆதிதிராவிடர் என்ற சாதிச் சான்றிதழ் பெறப்பட்டது. அன்று முதல் இன்று வரை மனுதாரர் இந்து மதத்தையும், இந்து மத சடங்குகளையும் மேற்கொண்டு வருகிறார். நிறமாக, உயராக, ஆங்கிலம் பேசுகிறார் என்ற காரணத்துக்காக சாதிச் சான்றிதழ் உண்மையில்லை என்று கூறுவது சட்டப்படி ஏற்க முடியாது'' என்று வாதிட்டார் இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:-

''கிறிஸ்தவ மதத்தில் இருந்து மீண்டும் இந்து மதத்துக்கு மாறியவரை, அந்த சமூகம் ஏற்றுக் கொண்டதால், எஸ்.சி. சாதிச்சான்று பெற மனுதாரருக்கு உரிமையுள்ளது. அவரை கிறிஸ்தவர் எனவும், அவரது சாதிச் சான்று உண்மையானதல்ல என்றும் மாவட்ட கண்காணிப்புக் குழு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர் இந்து கடவுளை வழிபட்டாரா? இந்து சமூகத்தினர் அவரை ஏற்றுக் கொண்டார்களா? என்று மாவட்ட குழு ஆராய்ந்திருக்க வேண்டும். அதுவே சரியானதாக இருக்கும். ஆனால், நிறமாக, உயரமாக, நல்ல உடற்கட்டுடன், தமிழ் - ஆங்கிலத்தில் சரளமாக பேசுவதால் அவர் கிறிஸ்தவர் என முடிவுக்கு வந்தது பொருத்தமற்றது' என்று தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+